Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

சென்னையில் வாகனங்கள் நிறுத்த கட்டணம் கிடையாது.. சென்னை மாநகராட்சி அறிவிப்பு..

Greater Chennai Corporation: சென்னை மாநகராட்சி தரப்பில் பல்வேறு இடங்களில் வாகனம் நிறுத்துவதற்காக ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டு அதற்கான கட்டணங்கள் வசூலிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் இந்த ஒப்பந்தங்கள் நேற்றுடன் அதாவது 2025 ஜூலை 20ஆம் தேதி உடன் முடிவடைந்த நிலையில், மறு ஒப்பந்தம் செய்யும்வரையில் வாகனம் நிறுத்துவதற்கு கட்டணம் செலுத்த தேவையில்லை என சென்னை மாநகராட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் வாகனங்கள் நிறுத்த கட்டணம் கிடையாது.. சென்னை மாநகராட்சி அறிவிப்பு..
கோப்பு புகைப்படம்
Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Published: 21 Jul 2025 06:30 AM

சென்னை, ஜூலை 21, 2025: சென்னை மாநகராட்சி பகுதிகளில் வாகன நிறுத்த கட்டண வசூலுக்கான ஒப்பந்தம் ஜூலை 20, 2025 அதாவது நேற்றுடன் முடிவடைந்ததையொட்டி வாகன வசூலுக்கான மறு ஒப்பந்தம் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் வரை பொதுமக்கள் வாகன நிறுத்தும் இடங்களில் எந்தவித கட்டணமும் செலுத்த தேவையில்லை என சென்னை மாநகராட்சி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. வேகமாக வளர்ந்து வரும் சென்னையில் பார்க்கிங் வசதி என்பது பெரிய சிக்கலாகி வருகிறது. தினசரி லட்சக்கணக்கான மக்கள் இருசக்கர வாகனம் மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் பயணங்களில் மேற்கொண்டு வருகின்றனர். குடியிருப்பு பகுதிகளில் நெரிசலின் காரணமாக பலரும் வாகனங்களை வீட்டு வாசலில் அல்லது தெருக்களில் நிறுத்தி வருகின்றனர்.

பார்க்கிங் வசதி:

இது ஒரு பக்கம் இருக்க மாநகரில் பெரும்பாலான பகுதிகளில் வாகனங்கள் நிறுத்துவதற்கு ஏதுவான இடங்கள் இல்லாததால் நடைபாதை மற்றும் சாலை ஓரங்களில் வாகனங்களை நிறுத்தும் நிலை ஏற்பட்டுள்ளது. இதற்கு தீர்வு காணும் வகையில் சென்னை மாநகராட்சி மற்றும் சென்னை போக்குவரத்து கழகம் தரப்பில் இணைந்து ஸ்மார்ட் பார்க்கிங் திட்டம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஏற்கனவே மெரினா கடற்கரை மற்றும் டி நகர் உள்ளிட்ட பகுதிகளில் ஸ்மார்ட் பார்க்கிங் திட்டம் நடைமுறையில் உள்ளது.

வாகனம் நிறுத்த கட்டணம் செலுத்த வேண்டாம்:

இது ஒரு பக்கம் இருக்க பெருநகர சென்னை மாநகராட்சி தரப்பில் பல்வேறு இடங்களில் வாகனம் நிறுத்துவதற்காக ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டு அதற்கான கட்டணங்கள் வசூலிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் இந்த ஒப்பந்தங்கள் நேற்றுடன் அதாவது 2025 ஜூலை 20ஆம் தேதி உடன் முடிவடைந்த நிலையில், மறு ஒப்பந்தம் செய்யும்வரையில் வாகனம் நிறுத்துவதற்கு கட்டணம் செலுத்த தேவையில்லை என சென்னை மாநகராட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில்,

மேலும் படிக்க: கிருஷ்ணகிரியில் கோரம்.. அடுத்தடுத்து வாகனங்கள் மோதி விபத்து.. 3 பேர் பலி

” பெருநகர சென்னை மாநகராட்சி பகுதிகளில் வாகன நிறுத்த கட்டண வசூலுக்கான ஒப்பந்தம் முடிவடைவதை ஒட்டி வாகன வசூலுக்கான மறு ஒப்பந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் வரை பொதுமக்கள் வாகன நிறுத்துமிடங்களில் எவ்வித கட்டணமும் இன்றி தங்களது வாகனங்களை நிறுத்திக் கொள்ளலாம். பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் வாகன நிறுத்த கட்டண வசூல் பணியானது தமிழ்நாடு முன்னாள் படைவீரர் கழகத்தின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில் தற்போது மேற்கண்ட நிறுவனத்துடன் ஒப்பந்தம் முடிவடைந்தது.

இதனை ஒட்டி பெரு நகர சென்னை மாநகராட்சி பகுதிகளில் வாகன நிறுத்துவதற்கான ஒப்பந்த பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மாநகராட்சி சார்பில் மறு ஒப்பந்தம் மேற்கொள்ளப்படும் வரையில் பொதுமக்கள் தங்கள் வாகனங்களை பெருநகர சென்னை மாநகராட்சி பகுதிகளில் உள்ள வாகன நிறுத்தும் இடங்களில் எவ்வித கட்டணமும் இன்றி நிறுத்திக் கொள்ளலாம். இது தொடர்பாக புகார்களுக்கு பெருநகர சென்னை மாநகராட்சியின் ஒன்று ஒன்பது ஒன்று மூன்று என்ற தொலைபேசி எண்ணில் பொதுமக்கள் தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம்” என குறிப்பிடப்பட்டுள்ளது