சென்னை: மழை காலத்தில் வீடுகளுக்குள் தண்ணீர் வந்தால் எங்கே செல்வது? வெளியான அறிவிப்பு
Chennai Corporation prepares: சென்னை மாநகரில் தென்மேற்குப் பருவமழை அவ்வப்போது பெய்து வரும் நிலையில், அக்டோபரில் தொடங்கவுள்ள வடகிழக்குப் பருவமழையைக் கணக்கில் கொண்டு, முன்னெச்சரிக்கையாக 1,034 கி.மீ. வடிகால் தூர்வாரப்பட்டுள்ளது. 87 இடங்களில் புதிய வடிகால்கள், மின்மோட்டார்கள் அமைக்கப்பட்டுள்ளன. 169 இடங்கள் தற்காலிக தங்குமிடங்களாக தயார் நிலையில் உள்ளன.

சென்னை ஜூலை 21: சென்னையில் (Chennai) பருவமழை முன்னெச்சரிக்கையாக (Monsoon as a precaution) மாநகராட்சி நடவடிக்கைகள் (Municipal Corporation Activities) தீவிரமாகின்றன. 11,760 மழைநீர் வடிகால்களில் 1,034 கி.மீ. பகுதி தூர்வாரப்பட்டுள்ளது. 44 முக்கிய கால்வாய்கள் சுழற்சி முறையில் சுத்தம் செய்யப்படுகின்றன. 87 இடங்களில் புதிய வடிகால்கள் அமைக்கப்பட்டு மின்மோட்டார்கள் நிறுவப்பட்டுள்ளன. 600 சேதமடைந்த கால்வாய்கள் சீரமைக்கப்பட்டு, 201 குளங்கள் புதுப்பிக்கப்பட்டுள்ளன. 169 இடங்கள் தாழ்வான பகுதிகளுக்கான தற்காலிக தங்குமிடமாக தயார் நிலையில் உள்ளன.
தென்மேற்குப் பருவமழை: 169 இடங்கள் தயார் நிலையில் வைப்பு
சென்னை மாநகரில் தென்மேற்குப் பருவமழை அவ்வப்போது பெய்து வரும் நிலையில், அக்டோபரில் தொடங்கவுள்ள வடகிழக்குப் பருவமழையைக் கணக்கில் கொண்டு, நகராட்சி நிர்வாகம் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மழைக்காலத்தில் ஏற்படக்கூடிய பாதிப்புகளைத் தவிர்க்கும் வகையில், தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்களை தற்காலிகமாக தங்க வைக்கும் பொருட்டு, 169 இடங்கள் அடையாளம் காணப்பட்டு தற்போது தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
Also Read: முதல்வர் காப்பீட்டுத் திட்டம் செயல்படுமா? புதிய செயலி மூலம் அறியலாம்




87 மழைநீர் தேங்கும் இடங்களில் புதிதாக வடிகால்கள் அமைப்பு
மழைநீர் பிரச்னைகளை கட்டுப்படுத்தும் நோக்கில், 44 முக்கிய கால்வாய்கள் சுழற்சி முறையில் தூர்வாரப்பட்டுள்ளன. மாநகரத்தில் உள்ள 11,760 மழைநீர் வடிகால்களில், சுமார் 1,034 கி.மீ. நீளத்திற்கு தூர்வாரும் பணிகள் நிறைவடைந்துள்ளன. கடந்த ஆண்டு அடையாளம் காணப்பட்ட 87 மழைநீர் தேங்கும் இடங்களில் புதிதாக வடிகால்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், அவ்விடங்களில் மழைநீரை வெளியேற்றும் மின்மோட்டார்களும் நிறுவப்பட்டுள்ளன.
சென்னை மாநகராட்சி பல்துறை நடவடிக்கை
சேதமடைந்த கால்வாய்கள் 600 இடங்களில் சீரமைக்கப்பட்டுள்ளதோடு, புதிய கால்வாய் சுவர்கள் அமைக்கும் பணிகளும் முடிக்கப்பட்டுள்ளன. குடியிருப்புப் பகுதிகளில் இருந்து நீர் வெளியேறுவதற்காக, 201 குளங்கள் மறுசீரமைக்கப்பட்டுள்ளன. இவ்வாறு, பருவமழையால் ஏற்படக்கூடிய பாதிப்புகளைக் குறைக்கும் முயற்சியாக சென்னை மாநகராட்சி பல்துறை நடவடிக்கைகளை தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.
Also Read: சென்னையில் வாகனங்கள் நிறுத்த கட்டணம் கிடையாது.. சென்னை மாநகராட்சி அறிவிப்பு
சென்னை மாநகராட்சி
சென்னை மாநகராட்சி (Greater Chennai Corporation) என்பது இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் உள்ள தலைநகரான சென்னையின் நகராட்சி நிர்வாக அமைப்பாகும். இது இந்தியாவில் நிலவும் மிகப் பழமையான மாநகராட்சிகளில் ஒன்றாகும். 1688 ஆம் ஆண்டு பிரிட்டிஷ் காலத்தில் “மட்ராஸ் மாநகராட்சி” என்ற பெயரில் நிறுவப்பட்டது. பின்னர் இது “சென்னை மாநகராட்சி” என மாற்றப்பட்டது.
சென்னை மாநகராட்சி ஒரு மேயர், துணை மேயர் மற்றும் தேர்தலில் தேர்ந்தெடுக்கப்படும் கவுன்சிலர்களால் நிர்வகிக்கப்படுகிறது. தற்போது இது 15 மண்டலங்கள் மற்றும் 200 வார்டுகள் என பிரிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு வார்டுக்கும் ஒரு கவுன்சிலர் உள்ளார்.