Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

மக்களே கவனம்.. சென்னையில் நாளை மின்தடை.. உங்க ஏரியா லிஸ்ட்ல இருக்கா பாருங்க!

Chennai Power Cut on July 19, 2025 : சென்னையில் 2025 ஜூலை 19ஆம் தேதியான நாளை மின்தடை செய்யப்படுகிறது. காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை போரூர், திருமுடிவாக்கம், திருமுல்லைவாயல், வேளச்சேரி, பெருங்குடி ஆகிய பகுதிகளில் மின்தடை செய்யப்படுகிறது.

மக்களே கவனம்.. சென்னையில் நாளை மின்தடை.. உங்க ஏரியா லிஸ்ட்ல இருக்கா பாருங்க!
சென்னையில் மின்தடை
Umabarkavi K
Umabarkavi K | Updated On: 18 Jul 2025 19:07 PM

சென்னை, ஜூலை 18 : சென்னையில் 2025 ஜூலை 19ஆம் தேதியான நாளை பல்வேறு இடங்களில் மின்தடை (Chennai Powercut) செய்யப்படுகிறது. காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை பல்வேறு இடங்களில் மின்தடை செய்யப்படுகிறது. எனவே, மக்கள் அதற்கு ஏற்றவாறு தங்கள் வேலை முடித்துக் கொள்ள வேண்டும். தமிழகம் முழுவதும் தமிழக மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் சார்பில் மின்சாரம் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. மக்களுக்கு தடையின்றி மின்சாரம் வழங்கும் வகையில், அவ்வப்போது பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மாதந்தோறும் பல்வேறு மாவட்டங்களில் குறிப்பிட்ட நாட்கள் மின்தடை செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில், 2025 ஜூலை 19ஆம் தேதியான நாளை மின்தடை செய்யப்படுவதாக மின்வாரியம் அறிவித்துள்ளது. காலை 9 மணி முதல் 5 மணி வரை மின்சாரம் தடை செய்யப்படுகிறது. அதன்படி, போரூர், திருமுடிவாக்கம், திருமுல்லைவாயல், வேளச்சேரி மற்றும் பெருங்குடி ஆகிய பகுதிகளில் மின்தடை செய்யப்படுகிறது.

சென்னையில் மின்தடை

போரூர் பகுதியில் அன்னைக்காட்டுச்சேரி, அமுதூர்மேடு, திருமணம், காவல்ச்சேரி, வயலாநல்லூர், சோரஞ்சேரி, ஆயில்ச்சேரி, சித்காடு ஆகிய பகுதிகளில் மின்தடை செய்யப்படுகிறது. திருமுல்லைவாயல் பகுதியில் போத்தூர், பொக்கிஷம் பூமி நகர், கன்னடபாளையம், சிவா கார்டன், செல்லி அம்மன் நகர், லட்சுமி நகர், ஆர்.கே.ஜே.வள்ளி வேல் நகர், தாய் நகர் ஆகிய பகுதிகளில் மின்தடை செய்யப்படுகிறது.

Also Read : உஷார் மக்களே.. சென்னை டூ தென்காசி.. அடுத்த 5 நாட்களுக்கு கொட்டப்போகும் கனமழை.. வானிலை மையம் அலர்ட்!

பெருங்குடி பகுதியில் அரிங்கர் அண்ணா நகர், வெங்கடேஸ்வரா நகர், பாண்டியன் நகர், கெனால் ரோடு, ஜெயின் காலேஜ் ரோடு ஆகிய இடங்களில் மின்தடை செய்யப்படுகிறது.

தொடர்ந்து, வேளச்சேரி பகுதியில் வெங்கடேஸ்வரா நகர், எம்ஜிஆர் நகர், பைபாஸ் ரோடு, தேவி கருமாரியம்மன் நகர், சசி நகர், பத்மாவதி நகர், முருகு நகர், விஜயா நகர், கங்கை நகர், புவனேஸ்வரி நகர், ராம் நகர், நேரு நகர், தண்டீஸ்வரம் நகர், வேளச்சேரி மெயின் ரோடு, 100 அடி சாலை, ராஜலட்சுமி நகர், தபதி அம்மான் தெரு, ஜெகந்நாதபுரம், த.ப. செல்வா நகர், சீத்தாராமன் நகர், வேளச்சேரி மெயின் ரோடு, தரமணி, பேபி நகர் ஆகிய இடங்களில் மின்தடை செய்யப்படுகிறது.

Also Read : திருநெல்வேலியில் பள்ளி மாணவன் விபரீத முடிவு… பேருந்துகள் தீக்கிரை..! போராட்டத்தால் பரபரப்பு

கோவையில் மின்தடை

கோவையை பொறுத்தவரை, 2025 ஜூலை 19ஆம் தேதியான நாளை சூலூர், டிஎம் நகர், ரங்கநாதபுரம், எம்ஜி நகர், கண்ணம்பாளையம், காங்கேயம், ராவுத்தூர், காந்திபுரம், சித்தாபுதூர், ராம்நகர், டாடாபாத், பூ மார்க்கெட், பந்தய மைதானம், சிவானந்தா, மேட்டுப்பாளையம், சிறுமுகை, தேரம்பாளையம், ஜடையம்பாளையம், அன்னூர், படுவம்பாளையம், சொக்கம்பாளையம் ஆகிய பகுதிகளில் மின்தடை செய்யப்படுகிறது