பயணிகளே..! பெங்களூரு, ஈரோடு செல்லும் ரயில்கள் ரத்து – தென்னக ரயில்வே அறிவிப்பு
Train Services Partially Cancelled: ஜோலார்பேட்டையில் பராமரிப்பு பணிக்காக ஜூலை 19 அன்று சில ரயில்கள் பகுதி ரத்து செய்யப்படுகின்றன. பெங்களூரு மற்றும் ஈரோடு நோக்கி செல்லும் ரயில்கள் சோமநாயக்கன்பட்டி மற்றும் திருப்பத்தூரில் நிறுத்தப்படுகிறது. பயணிகள் முன்னே ஏற்பாடு செய்து பயணிக்குமாறு ரயில்வே அறிவுறுத்தியுள்ளது.

சென்னை ஜூலை 18: 2025 ஜூலை 19-ஆம் தேதி ஜோலார்பேட்டை ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணி (Maintenance work at Jolarpettai railway station) நடைபெறவுள்ளது. இதனால் பெங்களூரு மற்றும் ஈரோடு செல்லும் முக்கிய ரயில்கள் (Main trains to Bengaluru and Erode) பகுதி ரத்து செய்யப்படுகிறது. 66550, 66549 மெமு ரயில்கள் சோமநாயக்கன்பட்டி வரையிலான பகுதியில் மட்டுமே இயக்கப்படும். 56108 ரயில் திருப்பத்தூரில் நிறுத்தப்படுவதால் ஜோலார்பேட்டை வரை செல்லாது. 56107 ரயில் ஜோலார்பேட்டையிலிருந்து இயக்கப்படாமல், திருப்பத்தூரிலிருந்து இயக்கப்படும். பயணிகள் தங்களது திட்டங்களை மாற்றுமாறு தெற்கு ரயில்வே (Southern Railway) கேட்டுக்கொண்டுள்ளது.
ஜூலை 19-ஆம் தேதி ஜோலார்பேட்டையில் பராமரிப்பு பணி
தெற்கு ரயில்வே அதிகாரிகள் வெளியிட்ட தகவலின்படி, 2025 ஜூலை 19-ஆம் தேதி ஜோலார்பேட்டை ரயில் நிலையத்தில் மின் இன்டர்லாக்கிங் பணிகள் நடைபெறவுள்ளன. இந்த பராமரிப்பு பணிகளை மேற்கொள்ளும் காரணமாக, அந்த நாளில் இயங்க வேண்டிய சில மெமு மற்றும் பயணிகள் ரயில்கள் சேவையில் தற்காலிக மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. குறிப்பாக பெங்களூரு, ஈரோடு நோக்கிச் செல்லும் ரயில்கள் பகுதி ரத்து செய்யப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பெங்களூரு மற்றும் ஈரோடு வழி ரயில்கள் பகுதி ரத்து
இது தொடர்பாக தென்னக ரயில்வே வெளியிட்ட செய்திக்குறிப்பில், பயணிகள் தங்களது பயண திட்டங்களை மாற்றுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. ரயில்வேயின் பராமரிப்பு பணிகள் வழக்கமானவைதான் என்றாலும், அவை நடைபெறும் நாட்களில் ரயில்கள் சேவையில் இடையூறு ஏற்படுவது தவிர்க்கமுடியாதது எனவும் கூறப்பட்டுள்ளது.




ரத்து செய்யப்படும் ரயில்கள் விவரத்தில், பெங்களூரு – ஜோலார்பேட்டை மெமு (66550) சோமநாயக்கன்பட்டி முதல் ஜோலார்பேட்டை வரையிலான பகுதி ரத்து செய்யப்படுவதால், அந்த ரயில் சோமநாயக்கன்பட்டியில் நிறுத்தப்படும். அதேபோல், ஜோலார்பேட்டை – பெங்களூரு மெமு (66549) ரயிலும் சோமநாயக்கன்பட்டியில் இருந்து மாற்றி இயக்கப்படும்.
இதேபோல், ஈரோடு – ஜோலார்பேட்டை பயணிகள் ரயில் (56108) திருப்பத்தூர் முதல் ஜோலார்பேட்டை வரை ரத்து செய்யப்படுவதால், அது திருப்பத்தூரில் நிறுத்தப்படும். ஜோலார்பேட்டை – ஈரோடு பயணிகள் ரயில் (56107) திருப்பத்தூர் ரயில் நிலையத்திலிருந்து துவங்கும்.
Also Read: வந்தே பாரத் ரெயில்களில் ‘கடைசி நிமிட முன்பதிவு’ வசதி அறிமுகம்
பகுதி ரத்து செய்யப்படும் ரயில்கள் விவரம்
66550 – கே.எஸ்.ஆர் பெங்களூரு – ஜோலார்பேட்டை மெமு: காலை 8.45 மணிக்கு பெங்களூருவிலிருந்து புறப்படும் இந்த ரயில், சோமநாயக்கன்பட்டி–ஜோலார்பேட்டை இடையே ரத்து செய்யப்பட்டுள்ளது. ரயில் சோமநாயக்கன்பட்டியில் நிறுத்தப்படும்.
66549 – ஜோலார்பேட்டை – கே.எஸ்.ஆர் பெங்களூரு மெமு: பிற்பகல் 2.55 மணிக்கு புறப்படவிருந்த இந்த ரயில், ஜோலார்பேட்டை–சோமநாயக்கன்பட்டி இடையே ரத்து செய்யப்பட்டுள்ளது. இதற்குப் பதிலாக, சோமநாயக்கன்பட்டியில் இருந்து 3.06 மணிக்கு புறப்படும்.
56108 – ஈரோடு – ஜோலார்பேட்டை பயணிகள் ரயில்: காலை 6.00 மணிக்கு ஈரோடில் இருந்து புறப்படும் இந்த ரயில், திருப்பத்தூர்–ஜோலார்பேட்டை இடையே ரத்து செய்யப்படும். இது திருப்பத்தூரில் நிறுத்தப்படும்.
56107 – ஜோலார்பேட்டை – ஈரோடு பயணிகள் ரயில்: பிற்பகல் 2.45 மணிக்கு புறப்படவிருந்த இந்த ரயில், ஜோலார்பேட்டை–திருப்பத்தூர் இடையே ரத்து செய்யப்படுகிறது. இது திருப்பத்தூரில் இருந்து 2.56 மணிக்கு புறப்படும்.
இந்த தற்காலிக மாற்றங்கள் குறித்து பயணிகள் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும் எனவும், பயண திட்டங்களை முன்கூட்டியே சரிசெய்து செல்ல வேண்டுமெனவும் தெற்கு ரயில்வே கேட்டுக்கொண்டுள்ளது.