சரக்கு ரயில் விபத்து.. சென்னையில் ரயில் சேவையில் மாற்றம்.. பயணிகளே நோட் பண்ணுங்க !
Chennai Train Service Changes : சரக்கு ரயிலில் தீ விபத்து ஏற்பட்டதை அடுத்து, சென்னையில் இருந்து புறப்படும் ரயில்களில் நேரத்தை தெற்கு ரயில்வே மாற்றி அமைத்துள்ளது. சென்னை சென்ட்ரலில் இருந்து 2025 ஜூலை 13ஆம் தேதியான இன்று இரவு புறப்படும் ரயில் சேவையின் நேரம் மாற்றப்பட்டுள்ளது.

சென்னை, ஜூலை 13 : சென்னையில் இருந்து புறப்படும் ரயில்களின் நேரம் மாற்றப்பட்டதாக (Chennai Train Service Changed) தெற்கு ரயில்வே (Southern Railway) அறிவித்துள்ளது. திருவள்ளூரில் சரக்கு ரயில் தீப்பிடித்து (Tiruvallur Goods Train Accident) ஏரிந்த விபத்து காரணமாக, ரயில்களின் புறப்படும் நேரத்தை தெற்கு ரயில்வே மாற்றி உள்ளது. சென்னை எண்ணூர் துறைமுகத்தில் இருந்து பெட்ரோலியம் நிரப்பிக் கொண்டு பெங்களூருக்கு சரக்கு ரயில் ஒன்று 2025 ஜூலை 13ஆம் தேதியான இன்று புறப்பட்டது. அதிகாலை சுமார் 5.15 மணியளவில் திருவள்ளூர் ரயில் நிலையத்தை கடந்தபோது, திடீரென டேங்க் வெடிக்கும் சத்தம் கேட்டுள்ளது. இதனால், சரக்கு ரயில் டிரைவர் உடனடியாக ரயிலை நிறுத்தி உள்ளார். அதற்குள் ரயில் தீ விண்ணை முட்டும் அளவுக்கு மளமள என பரவியது. கிட்டதட்ட 5 மணி நேரத்திற்கு மேலாக இந்த தீயானது கொழுந்து விட்டு எரிந்தது.
சரக்கு ரயிலில் தீ விபத்து
கரும் புகையுடன் விண்ணை முட்டும் அளவுக்கு தீ மளமள என எரிந்து கொண்டிருந்தன. இதனால், மற்ற பெட்டிகளுக்கு தீ பரவியதால் பரபரப்பான சூழல் நிலவியது. கிட்டதட்ட 7 மணி நேரத்திற்கு தீயணைப்பு வீரரகள் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இதற்கிடையில், தீ விபத்து ஏற்பட்டதை அடுத்து, பல ரயில்கள் ரத்து செய்யப்பட்டன. அதன்படி, கோவையில் இருந்து புறப்பட வேண்டிய சதாப்தி உள்ளிட்ட இரு ரயில்களூம், சென்னையில் இருந்த கோவைக்கு புறப்பட வேண்டிய இன்டர்சிட்டி, வந்தே பாரத் ரயில்களும், மங்களூருவில் இருந்து சென்னை செல்லும் ரயிலும் ரத்து செய்யப்பட்டன.




Also Read : அண்ணா ஆப்: சென்னைப் போக்குவரத்துக்கு ஒரே டிக்கெட்! எப்போது வரும்..?
மேலும், சில மின்சார ரயில்களும் ரத்து செய்யப்பட்டன. இதனால், பயணிகளின் வசதிக்காக திரவள்ளூர் பேருந்து நிலையத்தில் இருந்து பல்வேறு ஊர்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டது. இந்த நிலையில், 2025 ஜூலை 13ஆம் தேதியான இன்று இரவு சென்னையில் இருந்து புறப்படும் சில ரயில்களின் நேரத்தை தெற்கு ரயில்வே மாற்றி உள்ளது.
ரயில் சேவை நேரம் மாற்றம்
Changes in the pattern of services in connection with Goods train fire mishap at Tiruvallur – Bulletin 12&13#SouthernRailway pic.twitter.com/8n9q1QaMAX
— Southern Railway (@GMSRailway) July 13, 2025
அதன்படி, சென்னை சென்ட்ரலில் இருந்து திருவனந்தபுரம் செல்ல வேண்டிய ரயில், இரவு 7.30 மணிக்கு அரக்கோணம் ரயில் நிலையத்தில் புறப்பட உள்ளது. சென்னை சென்ட்ரலில் இருந்து மேட்டுப்பாளையம் செல்ல வேண்டிய நீலகிரி விரைவு ரயில், இரவு 9.50 மணிக்கு காட்பாடி ரயில் நிலையத்தில் இருந்து புறப்பட உள்ளது.
Also Read : ரயில் பயணிகளே… சென்னை மின்சார ரயில் சேவையில் இன்று மாற்றம்…
சென்னை சென்ட்ரலில் இருந்து கோவை செல்ல வேண்டிய ரயில், இரவு 10 மணிக்கு அரக்கோணம் ரயில் நிலையத்தில் இருந்து புறப்படும். சென்னை சென்ட்ரலில் இருந்து காவேரி ரயில், இரவு 9.15 மணிக்கு அரக்கோணம் ரயில் நிலையத்தில் இருந்து புறப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.