Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

ரயில் பயணிகளே… சென்னை மின்சார ரயில் சேவையில் இன்று மாற்றம்…

Chengalpattu–Chennai Beach Route: செங்கல்பட்டு–சென்னை கடற்கரை மின்சார ரெயில் சேவையில் பராமரிப்பு பணியின் காரணமாக இன்று மாற்றம் செய்யப்பட்டுள்ளது. பல ரெயில்கள் இரத்து செய்யப்பட, அதன் பதிலாக சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட உள்ளன. சிங்கபெருமாள்கோவில் பகுதியில் காலை 9.30 முதல் 1 மணி வரை பராமரிப்பு நடைபெறும்.

ரயில் பயணிகளே… சென்னை மின்சார ரயில் சேவையில் இன்று மாற்றம்…
மின்சார ரயில்கள்Image Source: social media
Sivasankari Bose
Sivasankari Bose | Updated On: 11 Jul 2025 08:24 AM

சென்னை ஜூலை 11: செங்கல்பட்டு–சென்னை கடற்கரை மின்சார ரெயில் சேவையில் இன்று மாற்றம் செய்யப்பட்டுள்ளது. சிங்கபெருமாள்கோவில் ரெயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் இன்று காலை 9.30 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெறும். இந்த பராமரிப்பு பணியின் காரணமாக பல முக்கிய நேரங்களில் இயங்க வேண்டிய ரெயில்கள் இருவழியாகவும் ரத்து செய்யப்பட்டுள்ளன. செங்கல்பட்டிலிருந்து புறப்படும் 10.40, 11, 11.30, 12 மற்றும் 1.10 மணிநேர ரெயில்கள் இன்று இயக்கப்படாது. சென்னை கடற்கரையில் இருந்து புறப்படும் 8.31 முதல் 10.56 மணிக்குள் செல்லும் ரெயில்கள் சிங்கபெருமாள்கோவில்–செங்கல்பட்டு இடையே ரத்து செய்யப்பட்டுள்ளது. இவ்வாறான சேவை பாதிப்புகளுக்குப் பதிலாக, மாற்றுவழியாக சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட உள்ளன.

மின்சார ரெயில் சேவையில் இன்று தற்காலிக மாற்றம்

சென்னை எழும்பூர் – விழுப்புரம் வழித்தடத்தில் உள்ள சிங்கபெருமாள்கோவில் ரெயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், செங்கல்பட்டு–சென்னை கடற்கரை இடையிலான மின்சார ரெயில் சேவையில் இன்று 2025 ஜூலை 11 (வெள்ளிக்கிழமை) காலை 9.30 மணி முதல் மதியம் 1 மணி வரை சில நேரங்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

Also Read: திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் தொடங்கியது யாகசாலை பூஜைகள்… ஜூலை 14-ல் கும்பாபிஷேகம்

தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள அறிக்கையில், செங்கல்பட்டில் இருந்து இன்று 2025 ஜூலை 11 காலை 10.40, 11, 11.30, மதியம் 12 மற்றும் 1.10 மணிக்கு புறப்படும் ரெயில்கள் ரத்து செய்யப்படுவதாகவும், அதே நேரத்தில் சென்னை கடற்கரையில் இருந்து இன்று 2025 ஜூலை 11 காலை 8.31, 9.02, 9.31, 9.51 மற்றும் 10.56 மணிக்கு புறப்படும் ரெயில்கள் சிங்கபெருமாள்கோவில்–செங்கல்பட்டு இடையே இயங்காது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மின்சார ரயில் சேவையில் மாற்றம்

செங்கல்பட்டு–சென்னை கடற்கரை மின்சார ரெயில் சேவையில் பராமரிப்பு பணியின் காரணமாக இன்று மாற்றம் செய்யப்பட்டுள்ளது. பல ரெயில்கள் இரத்து செய்யப்பட, அதன் பதிலாக சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட உள்ளன. சிங்கபெருமாள்கோவில் பகுதியில் காலை 9.30 முதல் 1 மணி வரை பராமரிப்பு நடைபெறும்.

சில சிறப்பு ரெயில்கள் இயக்கம்

மேலும், காஞ்சிபுரத்தில் இருந்து இன்று 2025 ஜூலை 11 காலை 9.30 மணிக்கு புறப்படும் ரெயில், செங்கல்பட்டு–சென்னை கடற்கரை இடையே ரத்து செய்யப்படுகிறது. இதற்குப் பதிலாக சில சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுகின்றன. இன்று 2025 ஜூலை 11 காலை 10.13 மணிக்கு காட்டாங்கொளத்தூரிலிருந்து கும்மிடிப்பூண்டி நோக்கி, காலை 10.46, 11, 11.20 மற்றும் மதியம் 12.20 மணிக்கு காட்டாங்கொளத்தூரிலிருந்து சென்னை கடற்கரை நோக்கி சிறப்பு ரெயில்கள் இயக்கப்படும்.

அதேபோல், காலை 11.30 மற்றும் மதியம் 1.10 மணிக்கு செங்கல்பட்டில் இருந்து சென்னை கடற்கரை நோக்கி சிறப்பு ரெயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.