Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

ரயில் பயணிகளே..! 5 முக்கிய எக்ஸ்பிரஸ் ரயில்கள் இனி தாம்பரத்தில் இருந்து தான் புறப்படும்..!

Egmore Railway Station Redevelopment: சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தின் ரூ.734.91 கோடி மதிப்பிலான மறுசீரமைப்புப் பணிகள் காரணமாக, 2025 ஜூன் 20 முதல் ஆகஸ்ட் 18 வரை பல விரைவு ரயில்களின் இயக்கம் தாம்பரம் மற்றும் கடற்கரை ரயில் நிலையங்களுக்கு மாற்றப்பட்டுள்ளது.

ரயில் பயணிகளே..! 5 முக்கிய எக்ஸ்பிரஸ் ரயில்கள் இனி தாம்பரத்தில் இருந்து தான் புறப்படும்..!
முக்கிய எக்ஸ்பிரஸ் ரயில்கள் இனி தாம்பரத்தில் இருந்து புறப்படும்Image Source: x
Sivasankari Bose
Sivasankari Bose | Updated On: 15 Jun 2025 21:06 PM

சென்னை ஜூன் 13: சென்னை (Chennai) எழும்பூர் ரயில் நிலையத்தில் (Egmore Railway Station) ரூ.734.91 கோடி மதிப்பில் நடைபெறும் மறுசீரமைப்பு பணியால், 2025 ஜூன் 20 முதல் ஆக.18 வரை பல ரயில்களின் புறப்பாடு இடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. தேஜஸ், மன்னை, குருவாயூர் (Tejas, Mannai, Guruvayur) உள்ளிட்ட 5 விரைவு ரயில்கள் தாம்பரத்திலிருந்து இயக்கப்படும். செந்தூர் மற்றும் கொல்லம் ரயில்களும் இதில் அடங்கும். தாம்பரம் – ஹைதராபாத் விரைவு ரயில் கடற்கரை ரயில் நிலையத்திலிருந்து இயக்கப்படும். மதுரை – பிகானிர் மற்றும் மன்னார்குடி – ஜோத்பூர் ரயில்கள் எழும்பூர் பதிலாக கடற்கரையில் நின்றுசெல்லும். பயணிகள் முன்னதாகவே திட்டமிட்டு பயணிக்க தெற்கு ரயில்வே (Southern Railway) அறிவுறுத்தியுள்ளது.

எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு

சென்னையின் எழும்பூர் (Egmore) ரயில் நிலையத்தில் ரூ.734.91 கோடி மதிப்பில் நடைபெற்று வரும் பராமரிப்பு மற்றும் மறுசீரமைப்பு பணிகள் காரணமாக, பல முக்கிய ரயில்களின் இயக்கத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. நடைமேம்பாலம் அமைக்கும் பணிகள் தற்போது துவங்கியுள்ளதால், தெற்கு ரயில்வே சில விரைவு ரயில்களை தற்காலிகமாக தாம்பரம் மற்றும் கடற்கரை ரயில் நிலையங்களில் இருந்து இயக்கும் என அறிவித்துள்ளது.

தெற்கு ரயில்வே அறிவிப்பு

6 விரைவு ரயில்கள் மாற்றம்

2025 ஜூன் 20 முதல் 2025 ஆகஸ்ட் 18 வரை பின்வரும் 6 முக்கிய விரைவு ரயில்கள் தாம்பரம் ரயில் நிலையம் மூலமாக இயக்கப்படும்:

தேஜஸ் விரைவு ரயில் (22671/22672): தாம்பரத்தில் இருந்து காலை 6.22 மணிக்கு புறப்பட்டு, இரவு 9.25 மணிக்கு திரும்பும்.

மன்னை விரைவு ரயில் (16179/16180): தாம்பரத்தில் இருந்து இரவு 11.22 மணிக்கு புறப்பட்டு, அதிகாலை 5 மணிக்கு திரும்பும்.

செந்தூர் விரைவு ரயில் (20605/20606): மாலை 4.27 மணிக்கு புறப்பட்டு, காலை 10 மணிக்கு திரும்பும்.

குருவாயூர் விரைவு ரயில் (16127/16128): காலை 10.47 மணிக்கு புறப்பட்டு, இரவு 7.45 மணிக்கு திரும்பும்.

கொல்லம் விரைவு ரயில் (16101/16102): மாலை 5.27 மணிக்கு புறப்பட்டு, அதிகாலை 2.45 மணிக்கு திரும்பும்.

கடற்கரை ரயில் நிலையத்திலிருந்து இயக்கப்படும் ரயில்கள்

தாம்பரம் – ஹைதராபாத் விரைவு ரயில் (12759/12760): ஜூன் 20 முதல் ஆக.18 வரை கடற்கரை நிலையம் வழியாக இயங்கும்.

மதுரை – பிகானிர் (22631) மற்றும் மன்னார்குடி – ஜோத்பூர் விரைவு ரயில்: முறையே 2025  ஜூன் 26 முதல் 2025  ஆக.14, மற்றும் 2025  ஜூன் 23 முதல் 2025  ஆக.18 வரை எழும்பூர் பதிலாக கடற்கரையில் இருந்து இயக்கப்படும்.

இது தொடர்பான முழுமையான அறிவிப்பை தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ளது. பயணிகள் தங்களது பயணத் திட்டங்களை திட்டமிடுவதற்கான முக்கிய தகவல்களாக இதனை எடுத்துரைத்துள்ளது.