AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

விவசாயிகளுக்கு குட் நியூஸ்.. நெல் கொள்முதல் விலை உயர்வு.. முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

Paddy Procurement Incentives : விவசாயிகளுக்கு நெல் குவிண்டாலுக்கு ரூ.2,500 உயர்த்தி வழங்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். சாதாரண நெல் குவிண்டாலுக்கு ரூ.2,500, சன்ன ரக நெல்லுக்கு குவிண்டாலுக்கு ரூ.2,545 வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார். இதன் மூலம் 10 லட்சம் விவசாயிகள் பயன் பெறுவார்கள் என்றும் அவர் கூறியுள்ளார்.

விவசாயிகளுக்கு குட்  நியூஸ்.. நெல் கொள்முதல் விலை உயர்வு.. முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு
முதல்வர் ஸ்டாலின்Image Source: PTI
Umabarkavi K
Umabarkavi K | Updated On: 12 Jun 2025 14:41 PM IST

சேலம், ஜூன் 12 : சேலம் மாவட்டம் மேட்டூரில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு முதல்வர் ஸ்டாலின் (MK Stalin) பேசினார். அப்போது, ”விவசாயிகளுக்கு இனி ஒரு குவிண்டாலுக்கு ரூ.2,500 என நெல் கொள்முதல் விலை (Paddy Procurement Incentives) உயர்த்தி வழங்கப்படும். சாதாரண நெல் குவிண்டாலுக்கு ரூ.2,500, சன்ன ரக நெல்லுக்கு குவிண்டாலுக்கு ரூ.2,545 வழங்கப்படும். இதனால், 10 லட்சத்திற்கு அதிகமாக விவசாயிகள் பயன்பெற உள்ளனர்” என தெரிவித்தார். சேலம் மாவட்டத்திற்கு 2025 ஜூன் 11ஆம் தேதி முதல்வர் ஸ்டாலின் பயணம் மேற்கொண்டார். 2025 ஜூன் 12ஆம் தேதி டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையில் இருந்து தண்ணீரை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார். இதன்பிறகு, மேட்டூரில் நடந்த நலத்திட்ட நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின் கலந்து கொண்டு பேசினார்.

நெல் கொள்முதல் விலை உயர்வு

அப்போது பேசிய அவர், ”சாதாரண நெல் குவிண்டாலுக்கு ரூ.2,500, சன்ன ரக நெல் குவிண்டாலுக்கு ரூ.2,545 ஆக உயர்த்தி வழங்கப்படும். இதன் மூலம் 10 லட்சம் விவசாயிகள் பயன் அடைவார்கள். 4 ஆண்டுகளில் ரூ.7,660 கோடி மதிப்பிலான திட்டங்கள் சேலம் மாவட்டத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளன. 10 ஆண்டுகளுக்கு முன்பு பாஜக அரசு அறிவித்த மதுரை எய்ம்ஸ் என்ன நிலை என்பது தெரியும். 10 ஆண்டுகளாக கட்ட அது என்னஎய்ம்ஸா? விண்வெளி ஆராய்ச்சி நிலையமா?

ஒழுங்காக நிதி ஒதுக்கி இருந்தால் 2 ஆண்டுகளில் கட்டி முடித்திருக்கலாம். மதுரையை சுற்றி ஏராளமான பணிகளை நாங்கள் முடித்திருக்கிறோம். மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்க நீங்கள், தமிழ்நாட்டுக்கு செய் ஒரு சிறப்பு திட்டத்தை கூறுங்கள். 11 ஆண்டுகளாக தமிழகத்திற்கு செய்த திட்டங்கள் என்ன? பட்டியல் இதுவரை தரவில்லை. சட்டியில் இருந்தால் தானே அகப்பையில் வரும்” என்றார்.

மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பு

எடப்பாடி பழனிசாமியை விமர்சித்த முதல்வர்

தொடர்ந்து பேசிய அவர், “பிரதமர் பேரில் தரும் திட்டத்திற்கு மாநில அரசு 50 சதவீதம் நிதி தருகிறது. படையப்பா படத்தைப் போல் மாப்பிள்ளை அவர் தான். சட்டை என்னுடையது என மத்திய அரசு செயல்படுகிறது. மத்திய அரசு திட்டங்களுக்கு மாநில அரசு நிதி கொடுத்து வருகிறது. தமிழ்நாட்டின் உரிமை பறிபோன போது பாஜகவுடன் கூட்டணி அமைத்த எடப்பாடி பழனிசாமி இதுபற்றி கேட்பாரா? டெல்லி தலையாட்டி பொம்மையாக செய்தியாளர்கள் சந்திப்பில் அமர்ந்திருக்கிறார்.” என்றார்.

Follow Us