Mettur Dam : டெல்டா விவசாயிகளுக்கு குட்நியூஸ்… மேட்டூர் அணையில் இன்று நீர்திறப்பு!
Mettur Dam Water Release | தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரண்டு நாட்கள் சுற்றுப்பயணமாக சேலம் சென்றுள்ளார். அங்கு பல்வேறு அரசு நிகழ்சிகளில் பங்கேற்கும் அவர், இன்று (ஜூன் 12, 2025) மேட்டூர் அணையை திறந்து வைக்க உள்ளார். இதன் காரணமாக மேட்டூர் அணையில் பலத்து பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

சென்னை, ஜூன் 12 : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் (Tamil Nadu Chief Minister MK Stalin) இரண்டு நாட்கள் சுற்றுபயணமாக சேலம் சென்றுள்ள நிலையில், இன்று (ஜூன் 12, 2025) மேட்டூர் அணையை (Mettur Dam) திறந்து வைக்க உள்ளார். முதலமைச்சர் மேட்டூர் அணையை திறந்து வைக்க உள்ளதால் அங்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மேட்டூர் அணையை திறந்து வைக்கும் முதலமைச்சர் அதனை தொடர்ந்து சேலம் மாவட்டத்தில் நடைபெற உள்ள பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்க உள்ளார். இந்த நிலையில், முதலமைச்சரின் இன்றைய பயணம் குறித்தும், மேட்டூர் அணையின் சிறப்பு அம்சங்கள் குறித்தும் விரிவாக பார்க்கலாம்.
இரண்டு நாட்கள் சுற்றுப்பயணமாக சேலம் சென்றுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், திட்டங்களை தொடங்கி வைப்பது, பொது மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குவது உள்ளிட்ட பல்வேறு காரணங்கள் காரணமாக சேலம் மாவட்டத்திற்கு இரண்டு நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அந்த வகையில், நேற்று (ஜூன் 11, 2025) மாலை சேலம் சென்ற முதலமைச்சருக்கு திமுகவினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். நேற்றைய தினம் சேலம் மாவட்டத்தின் எல்லை பகுதியான பெரும்பள்ளத்தில் இருந்து சுமார் 11 கிலோ மீட்டர் தூரம் வரை முதலமைச்சர் ரோடு ஷோ மேற்கொண்டார். அதனை தொடர்ந்து இரவு மேட்டூரில் கட்சி நிர்வாகிகளுடன் அவர் ஆலோசனை மேற்கொண்டார்.
சேலம் சென்ற முதலமைச்சருக்கு உற்சாக வரவேற்பு
மன எழுச்சி தந்த மாங்கனி நகரம்! #SalemRoadshow pic.twitter.com/qxkZXWmvcG
— M.K.Stalin (@mkstalin) June 11, 2025
மேட்டூர் அணையை திறந்து வைக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
சேலம் மேட்டூரில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான விருதுநகர் மாளிகையில் தங்கியுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இன்று காலை சரியாக 9:30 மணிக்கு டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்து வைக்கிறார். அணையில் இருந்த தண்ணீரை திறந்து வைக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காவிரி ஆற்றில் பூக்களை தூவ உள்ளார். இதனால் அங்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதனை தொடர்ந்து சேலம் இரும்பாலை அரசு மோகம் குமாரமங்கலம் கல்லூரி வளாகத்தில் நடைபெறும் அரசு நிகழ்ச்சியில் முதலமைச்சர் கலந்துக்கொள்ள உள்ளார். இந்த விழாவில் சுமார் 1,500 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை தொடங்கி வைக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.