DMK Meeting : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்!
DMK District Secretaries Meeting | 2026 சட்டமன்ற தேர்தலை இலக்காக கொண்டு திமுக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், 2025 ஜூன் தொடக்கத்தில் திமுக பொதுக்குழு கூட்டம் நடத்தப்பட்ட நிலையில், இன்று (ஜூன் 07, 2025) முதலமைச்சர் தலைமையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற உள்ளது.

சென்னை, ஜூன் 07 : திராவிட முன்னேற்ற கழக (DMK – Dravida Munnetra Kazhagam) மாவட்ட செயலாளர்கள் கூட்டம் (District Secretaries Meeting) இன்று (ஜூன் 07, 2025) நடைபெற உள்ளது. தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 10 மாதங்களே உள்ள நிலையில், திராவிட முன்னேற்ற கழகம் தேர்தலுக்கு தயாராகி வருகிறது. அந்த வகையில், இன்று நடைபெற உள்ள கூட்டத்திற்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமை ஏற்று நிர்வாகிகள் மத்தியில் உரையாற்ற உள்ளார். இந்த நிலையில், இன்று நடைபெற உள்ள திராவிட முன்னேற்ற கழக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் குறித்து விரிவாக பார்க்கலாம்.
2026 சட்டமன்ற தேர்தலை இலக்காக கொண்டு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் திமுக
2019 சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணி அபார வெற்றி பெற்றது. அதனை தொடர்ந்து நடைபெற்ற தேர்தல்களிலும் திமுக கூட்டணி குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தியது. இவ்வாறு தொடர்ந்து ஐந்து ஆண்டுகளாக தமிழகம் திமுக வசம் உள்ளது. திமுக அரசின் ஐந்து ஆண்டுகால ஆட்சி முடிவடைய உள்ள நிலையில், இன்னும் சில மாதங்களில் தமிழகத்திற்கு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் அதிமுக, பாஜக, நாதக, தாவெக என பல கட்சிகள் போட்டியிட உள்ளன. 2026 சட்டமன்ற தேர்தலிலும் எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என்று திமுக தொடர்ந்து பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
இன்று கூடுகிறது திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்
உறுப்பினர் சேர்க்கை…!
—-
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையில் தி.மு.க.
மாவட்டச் செயலாளர்கள் – நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் – தொகுதி பார்வையாளர்கள் கூட்டம் 07.06.25 அன்று காலை 10:30 மணிக்கு நடைபெறுகின்றது.மண் – மொழி – மானம் காத்திட ‘ஓரணியில் தமிழ்நாடு’ என்ற… pic.twitter.com/0ousti4aqo
— சிரில் (@Deva_ICL) June 5, 2025
இன்னும் பத்து மாதங்களில் தமிழக சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் திமுக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி மே 1, 2025 அன்று மதுரையில் திமுக பொதுக்குழு கூட்டம் நடத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து இன்று (ஜூன் 07, 2025) மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற உள்ளது. காலை 10.30 மணிக்குகாணொளி காட்சி வாயிலாக நடைபெற உள்ள இந்த கூட்டத்தில் தலைமை வகிக்க உள்ள திமுக தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் நிர்வாகிகள் மத்தியில் உரையாற்ற உள்ளார். அப்போது சட்டமன்ற தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து அவர் நிர்வாகிகளுக்கு அறிவுரை வழங்குவார் என கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.