AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

மெரினாவில் முதியவர்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு புதிய அம்சம்.. அமலுக்கு வரும் பேட்டரி கார் சேவை..

Marina Batter Car Service: சென்னை மெரினா கடற்கரையில் நாளை (ஜூன் 13, 2025) முதல் முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்காக பேட்டரி கார் சேவை தொடங்கப்பட உள்ளது. சர்வீஸ் சாலைகளில் நான்கு இடங்களில் வாகனம் நிறுத்தம் அமைத்து முதற்கட்டமாக இரண்டு வாகனங்களை பயன்பாட்டிற்கு கொண்டு வந்துள்ளது சென்னை மாநகராட்சி.

மெரினாவில் முதியவர்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு புதிய அம்சம்.. அமலுக்கு வரும் பேட்டரி கார் சேவை..
கோப்பு புகைப்படம்
Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Published: 12 Jun 2025 19:53 PM IST

சென்னை, ஜூன் 12, 2025: இந்தியாவில் மிகச்சிறந்த கடற்கரையில் ஒன்றாக மெரினா (Marina Beach) திகழ்கிறது. உலகின் மிக நீளமான இரண்டாவது கடற்கரை எனவும் மெரினா கடற்கரை பெயர் பெற்று உள்ளது. இந்த கடற்கரைக்கு சென்னை வாசிகள் மட்டுமல்லாமல் தமிழ்நாடு இந்தியா உலகமென பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலா பயணிகள் வருகை தந்து பார்வையிடுகின்றனர். மெரினா கடற்கரைக்கு நீலக்கொடி (Blue Flag) சான்றிதழ் பெறுவதற்கான பணிகளை தமிழ்நாடு அரசு தற்போது மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் மெரினா கடற்கரைக்கு வரக்கூடிய மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியவர்களுக்கு சென்னை மாநகராட்சி தரப்பில் இரண்டு பேட்டரி கார்கள் செயல்பாட்டிற்கு கொண்டு வந்துள்ளது. இந்த பேட்டரி கார்கள் நாளை (ஜூன் 13, 2025) முதல் மக்கள் பயன்பாட்டிற்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள கோவளம் கடற்கரைக்கு ஏற்கனவே நீலக்கொடி சான்றிதழ் கிடைத்துள்ள நிலையில் சென்னையில் இருக்கக்கூடிய மெரினா திருவான்மியூர் உள்ளிட்ட ஆறு கடற்கரைகளுக்கு நீலக்கொடி சான்றிதழ் பெற தமிழக அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.

மெரினாவில் பேட்டரி கார் சேவை:


டென்மார்க்கை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் சுற்றுச்சூழல், கல்வி அறக்கட்டளை நிறுவனம் சார்பில் சிறந்த கடற்கரைக்கான நீலக்கொடி சான்றிதழை வழங்கி வருகிறது. இந்த சான்றிதழ் ஒரு கடற்கரை பெற வேண்டுமானால் சுற்றுச்சூழல் மேலாண்மை, சுற்றுலா பயணிகளுக்கான அனைத்து வசதிகள், அங்கு வரக்கூடிய மக்கள் குளிப்பதற்கான சுத்தமான தண்ணீர், பாதுகாப்பு அம்சங்கள், சுத்தமான மணல் உள்ளிட்ட 33 அம்சங்கள் இடம் பெற்று இருக்க வேண்டும். அதற்கான பணிகளை தற்பொழுது சென்னை மெரினா கடற்கரையில் தமிழக அரசு மேற்கொண்டு வரும் நிலையில் அங்கு வரக்கூடிய முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்காக இரண்டு பேட்டரி கார் சேவைகளை அறிமுகப்படுத்தியுள்ளது. சர்வீஸ் சாலைகளில் நான்கு இடங்களில் வாகனம் நிறுத்தம் அமைத்து முதற்கட்டமாக இரண்டு வாகனங்களை பயன்பாட்டிற்கு கொண்டு வந்துள்ளது சென்னை மாநகராட்சி. நேற்றைய தினம் நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இதனை திறந்து வைத்தார். இந்த பேட்டரி கார்கள் நாளை (ஜூன் 13, 2025) முதல் மக்கள் பயன்பாட்டிற்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மெரினா கடற்கரையில் பேட்டரி கார்களை தவிர சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையும் அதிகரிக்கும் வகையில் புதிய நடைபாதை, சைக்கிள், வழித்தடங்கள், கண்காணிப்பு கோபுரம், 360 டிகிரியில் சூழலும் கண்காணிப்பு கேமரா, விளையாட்டு பகுதி, திறந்த வெளியுடன் பயிற்சி கூடம் ஆகிய அம்சங்களும் இடம்பெறும் வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நீலக்கொடி சான்றிதழ் பெறுவதற்கான 33 அம்சங்களும் சென்னை மெரினா கடற்கரையில் அமைக்கப்பட்ட பின் அதற்கான சான்றிதழ் பெரும் முயற்சியை தமிழக அரசு மேற்கொள்ளும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் நீலக்கொடி சான்றிதழ் பெறப்பட்டால் சென்னை மெரினா கடற்கரைக்கு சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிக்கும் எனவும் குறிப்பிட்டுள்ளனர்.

Follow Us