தட்கல் டிக்கெட் புக் பண்ணுறீங்களா? வந்தது புது ரூல்ஸ்.. இனி இப்படி பண்ணுங்க!
Train Ticket Booking Rules : மோசடிகளை தடுக்க தட்கல் டிக்கெட் முன்பதிவில் அதிரடி மாற்றங்களை ரயில்வே நிர்வாகம் செய்து வருகிறது. இனி தட்கல் டிக்கெட் முன்பதிவுக்கு ஆதாரை ரயில்வே நிர்வாகம் கட்டாயமாக்கியது. இந்த புதிய விதிகளின்படி, தட்கல் டிக்கெட்டை எப்படி புக் செய்வது என்பதை ஐஆர்சிடிசி விளக்கம் அளித்துள்ளது.

சென்னை, ஜூன் 10 : தட்கல் டிக்கெட் புக்கிங்கில் (new tatkal ticket booking rules) புதிய மாற்றங்களை ஐஆர்சிடிசி (IRCTC) கொண்டு வந்துள்ளது. அதாவது, 2025 ஜூலை 1ஆம் தேதி முதல் ஐஆர்சிடிசி மொபைல் செயலி அல்லது இணையதளத்தில் ஆதார் உறுதிப்படுத்திய பயனர்களால் தான் டிக்கெட் முன்பதிவு செய்து கொள்ள முடியும். இந்த புதிய விதிகளின்படி தட்கல் டிக்கெட் முன்பதிவு செய்வது எப்படி என்பதை ரயில்வே நிர்வாகம் விளக்கி உள்ளது. நாட்டில் முக்கிய போக்குவரத்து சேவைகளில் ஒன்றாக இருப்பது ரயில் சேவை. தினமும் ரயிலில் லட்சக்கணக்கான பயணிகள் பயணித்து வருகின்றனர். குறைந்த செலவில் பாதுகாப்பான பயணம் என்பதால் மக்கள் ரயில் சேவை விரும்புகின்றனர். ரயிலில் பயணிக்க பல நாட்களுக்கு முன்பே டிக்கெட் புக் செய்து வருகின்றனர். ஆனால், டிக்கெட் கிடைப்பது சாதாரணமானது இல்லை.
தட்கல் டிக்கெட் புக் பண்ணுறீங்களா?
இரண்டு அல்லது மூன்று மாதங்களுக்கு முன்பே டிக்கெட் புக் செய்ய வேண்டும் என்பது விதி. மேலும், பயணத்திற்கு ஒரு நாள் முன்பு தட்கலில் டிக்கெட் புக் செய்து கொள்ளலாம். ஆனால், தட்கல் டிக்கெட் முறையில் பல்வேறு முறைகேடுகள் நடப்பதாக புகார்கள் எழுந்து வருகிறது.




இதற்கு தீர்வு காணும் வகையில், இந்திய ரயில்வே பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மேலும், மோசடியை தடுக்க கட்டுப்பாடுகளை விதித்து வருகிறிது. அண்மையில் கூட, தட்கல் டிக்கெட் மோசடி தொடர்பாக 2.5 கோடி போலி கணக்குகளை கண்டறிந்து ஐஆர்சிடிசி நீக்கியது.
அதைத் தொடர்ந்து, தட்கட் டிக்கெட் முன்பதிவுக்கு ஆதாரை இந்திய ரயில்வே கட்டாயமாக்கி உத்தரவிட்டது. இதன் மூலம், ஐ.ஆர்.சி.டி.சி கணக்கு ஆதாருடன் இணைக்கப்பட்ட பயனர்களுக்கு மட்டுமே தட்கல் டிக்கெட்டுகள் கிடைக்கும். அதைத் தொடர்ந்து, தற்போது புதிய விதிமுறையை இந்திய ரயில்வே வெளியிட்டுள்ளது.
புதிய ரூல்ஸ்
Bharatiya Railways will soon start using e-Aadhaar authentication to book Tatkal tickets.
This will help genuine users get confirmed tickets during need: Union Minister for Railways @AshwiniVaishnaw pic.twitter.com/gBoYwGn3e2
— All India Radio News (@airnewsalerts) June 4, 2025
புதிய விதிகளின்படி தட்கல் டிக்கெட்டை எப்படி புக் செய்வது என்பதை படிப்படியாக ஐஆர்சிடிசி விளக்கி உள்ளது.
- அதன்படி, ஐஆர்சிடி அல்லது இணையதளத்தில் சென்று தங்களது பயண விவரங்களை தேர்ந்தெடுத்து, தட்கல் விருப்பத்தை தேர்வு செய்ய வேண்டும்.
- அதன்படி, பயண நேரம், பயணிகளின் பெயர், வயது, பாலினம் போன்றவற்றை உள்ளீட வேண்டும்.
- அதன்பிறகு, ஆதார் எண்ணை உள்ளீடுவது கட்டாயமாகும். உங்கள் ஐஆர்சிடிசி கணக்கு ஆதாருடன் இணைக்கப்பட்டிருந்தால் டிக்கெட் முன்பதிவு செய்யவது எளிது.
- தனிப்பட்ட விவரங்களை உள்ளீட்ட பிறகு, உங்கள் ஆதார் இணைக்கப்பட்ட மொபைல் நம்பருக்கு ஒடிபி செல்லும். அந்த ஒடிபியை உள்ளீட்ட பிறகு தான், டிக்கெட் புக் செய்ய முடியும்.
- ஏசி வகுப்புகளுக்கு காலை 10:00 மணிக்கும், ஏசி அல்லாத வகுப்புகளுக்கு காலை 11:00 மணிக்கும் தட்கல் டிக்கெட் முன்பதிவு செய்ய வேண்டும். இந்த நடைமுறையானது பயணிகள் கடைசி நேரத்தில் எந்த வித அவசரமும் இல்லாமல் பயணம் மேற்கொள்ள உதவும் என்பது குறிப்பிடத்தக்கது.