AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

மதுரை: சாப்பிட்டுக்கொண்டே பஸ்ஸை ஓட்டிய ஆம்னி பேருந்து ஓட்டுநர்…

Madurai Bus Driver: மதுரையில் இருந்து சென்னை செல்லும் ஆம்னி பஸ்சின் ஓட்டுநர், வாகனம் ஓட்டிக்கொண்டே உணவு உண்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பயணிகள் இதை வீடியோவாக பதிவு செய்து சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளனர். டிரைவர் நேரமின்மை என விளக்கம் அளித்தாலும், பயணிகள் பாதுகாப்பு அபாயத்தை சுட்டிக்காட்டி கண்டனம் தெரிவித்துள்ளனர்.

மதுரை: சாப்பிட்டுக்கொண்டே பஸ்ஸை ஓட்டிய ஆம்னி பேருந்து ஓட்டுநர்…
சாப்பிட்டுக்கொண்டே பஸ்ஸை ஓட்டிய ஆம்னி பேருந்து ஓட்டுநர்Image Source: social media
Sivasankari Bose
Sivasankari Bose | Updated On: 11 Jun 2025 16:08 PM IST

மதுரை ஜூன் 11: மதுரையில் இருந்து சென்னைக்கு (Madurai to Chennai) புறப்பட்ட தனியார் ஆம்னி பஸ்சை (Omni Bus Driver) ஓட்டிய டிரைவர், பஸ்சை ஓட்டிக்கொண்டே உணவு சாப்பிட்டது (Eating during driving) பரபரப்பை ஏற்படுத்தியது. பயணிகள் இதை கண்டித்து வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டனர். “நேரமில்லை, நள்ளிரவில் பசிக்கிறது” என்ற காரணத்தால் இப்படிச் செய்வதாக டிரைவர் விளக்கம் அளித்தார். இதனால் பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். இதுபோல் செயற்படுவது பயணிகள் பாதுகாப்புக்கு கேடு என நெட்டிசன்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். சம்பந்தப்பட்ட டிரைவர் மற்றும் பஸ் உரிமையாளருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்படுகின்றது.

சாப்பிடிக்கொண்டே பஸ் ஓட்டிய டிரைவர்

மதுரை மாட்டுத்தாவணி ஆம்னி பஸ் நிலையத்தில் இருந்து 40 பயணிகளுடன் புறப்பட்ட ஸ்ரீகுமரன் டிராவல்ஸ் என்ற தனியார் ஆம்னி பஸ்சை ஓட்டிய டிரைவர், பஸ்சை ஓட்டிக்கொண்டே டிபன் பாக்ஸிலிருந்த உணவை சாப்பிட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஸ்டீயரிங் நடுவே உணவுப்பெட்டியை வைத்து சாப்பிட்டதாக கூறப்படும் இந்த சம்பவத்தின் வீடியோ பஸ்சில் பயணம் செய்த ஒருவரால் பதிவு செய்யப்பட்டு சமூக வலைதளங்களில் பகிரப்பட்டுள்ளது. தற்போது இந்த வீடியோ வைரலாக பரவி, பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பயணிகள் அதிர்ச்சி, கண்டனம்

மதுரையில் இருந்து சென்னை செல்லும் ஆம்னி பஸ்சின் ஓட்டுநர், வாகனம் ஓட்டிக்கொண்டே உணவு உண்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பயணிகள் இதை வீடியோவாக பதிவு செய்து சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளனர். டிரைவர் நேரமின்மை என விளக்கம் அளித்தாலும், பயணிகள் பாதுகாப்பு அபாயத்தை சுட்டிக்காட்டி கண்டனம் தெரிவித்துள்ளனர். டிரைவர் மற்றும் பஸ் உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

பயணிகள் கண்டிப்பாக எதிர்வினை தெரிவித்த நிலையில், ஒருவர் “முன்னதாக சாப்பிட்டிருக்கலாமே?” என கேட்டபோது, டிரைவர் “நேரமில்லை, எனவே ஓட்டிக்கொண்டே சாப்பிடுகிறேன்; இது என் பழக்கம்” என பதிலளித்துள்ளார். நள்ளிரவில் பசிக்கும்வேளை இதுபோல் சாப்பிட வேண்டிய நிலை ஏற்படுவதாகவும் அவர் கூறியதாக தெரிகிறது.

கடுமையான நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

சிறு குழந்தைகள், பெண்கள் உள்ளிட்டவர்கள் பயணிக்கும் பொது பயண ஊர்திகளில், இவ்வாறான செயற்பாடு பயணிகள் பாதுகாப்பை கேள்விக்குள்ளாக்கும் வகையில் உள்ளது. இது தொடர்பான வீடியோவை பார்த்த நெட்டிசன்கள், டிரைவரின் செயலை கண்டித்து, அவரது மீதும் அந்த பஸ்சின் உரிமையாளர்மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.

தென் மாவட்டங்கள் மற்றும் மேற்கு மாவட்டங்களிலிருந்து சென்னைக்குப் பஸ்கள் இயக்கப்படுகின்ற நிலையில், நேரத்தை பின்பற்ற வேண்டும் என்பதற்காகவே சிலர் வேகமாக ஓட்டுவதாகவும், இந்நிலையில் பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

Follow Us