Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

சென்னையில் விமானம் மீது லேசர் அட்டாக்.. 2 வாரங்களில் 3 முறை!

Chennai Laser Beam Strikes on Flight : சென்னை விமான நிலையத்தில் 2025 ஜூன் 10ஆம் தேதியான இன்று அதிகாலை தரையிரங்கிய ஏர் இந்தியா விமானத்தின் மீது லேசர் லைட் அடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த இரண்டு வாரங்களில் மூன்றாவது முறையாக இதுபோன்ற சம்பவம் நடந்துள்ளது.

சென்னையில் விமானம் மீது லேசர் அட்டாக்.. 2 வாரங்களில் 3 முறை!
விமானம்
umabarkavi-k
Umabarkavi K | Updated On: 10 Jun 2025 10:51 AM

சென்னை, ஜூன் 10 :  சென்னை விமான நிலையத்தில்  (Chennai airport) 2025 ஜூன் 10ஆம் தேதியான இன்று அதிகாலை தரையிரங்கிய ஏர் இந்தியா விமானத்தின் மீது லேசர் லைட்  (Laser beam strike) அடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனை அடுத்து, விமானிகள் அவசரமாக கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்து, பத்திரமாக விமானத்தை தரையிறக்கினர். கடந்த இரண்டு வாரங்களில் மூன்றாவது முறையாக இதுபோன்று விமானத்தின் மீது லேசர் அடிக்கும் சம்பவம் நடந்துள்ளது. இந்தியாவின் முக்கிய விமான நிலையமாக சென்னை உள்ளது. சென்னையில் உள்ள விமான நிலையத்தில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான் பயணிகள் விமான சேவையை பயன்படுத்தி வருகின்றனர். பல்வேறு நாடுகளுக்கும் சென்னையில் இருந்து நேரடி விமான சேவையும் உள்ளது. இப்படியான சூழலில், கடந்த இரண்டு வாரங்களாகவே, சென்னையில் தரையிறங்கும் விமானங்களில் லேசர் ஒளி அடிக்கப்படும் சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருகிறது.

சென்னையில் விமானம் மீது லேசர் அட்டாக்

இந்த நிலையில்,  2025 ஜூன் 10ஆம் தேதியான இன்றும் சம்பவம் நடந்துள்ளது. அதாவது, புனேவிலிருந்து 178 பயணிகளுடன் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் 2025 ஜூன் 10ஆம் தேதியான இன்று அதிகாலை 1.10 மணியளவில் சென்னை தரையிறங்கியது.

விமானம் தரையிறங்க முயன்றபோது, விமானத்தின் மீது லேசர் ஒளி அடிக்கப்பட்டது. இதனால், விமானி சற்று தடுமாறியதாக தெரிகிறது. இதனை அடுத்து, விமானி சென்னை விமான நிலையப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டிற்கு தகவல் தெரிவித்தார். சிறிது நேரம் கழித்து லேசர் ஒளி அடிப்பது நிறுத்தப்பட்டது. இதனை அடுத்து, விமானத்தை விமான பத்திரமாக தரையிறக்கினார்.

சென்னை விமான நிலைய காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். லேசர் எங்கிருந்து வந்தது என்பதைக் கண்டறிய அருகிலுள்ள சிசிடிவி காட்சிகள் ஆய்வு செய்து வருகின்றனர். விசாரணையில் கிண்டி பகுதியில் இருந்து லேசர் ஒளி அடிக்கப்பட்டது தெரியவந்துள்ளது.

2 வாரங்களில் 3 முறை


கடந்த இரண்டு வாரங்களில் மூன்றாவது முறையாக இதுபோன்று நடக்கிறது. இது விமானப் போக்குவரத்து மற்றும் பாதுகாப்பு அதிகாரிகளிடையே கவலையை எழுப்பியுள்ளது. முன்னதாக, முன்னதாக, ஜூன் 5ஆம் தேதி துபாயில் இருந்து சென்னை வந்த விமானம் மீது லேசர் ஒளி அடிக்கப்பட்டது.

ஏற்கனவே, 2025 மே 25ஆம் தேதி துபாயில் இருந்து சென்னை வந்த எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் விமானம் மீதும் பச்சை நிற லேசர் ஒளி அடிக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இதுபோன்று தொடர்ந்து நடைபெறுவதை அடுத்து, சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது. அதாவது, விமானத்தின் மீது லேசர் ஒளி அடிப்பது உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும்.

இதுபோன்று செயலில் ஈடுபடுவது கடுமையாக குற்றமாகும். இந்த நடவடிக்கைகள் விமானிகளுக்கு தற்காலிக பார்வைக் குறைபாட்டை ஏற்படுத்துகின்றன. விமானத்தின் பாதுகாப்பை அச்சுறுத்துகின்றன. இதுபோன்று  மீண்டும் தென்பட்டால் உடனடியாகப் புகாரளிக்கவும்” என்று கூறியிருந்தது.