AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

புதிய முயற்சியில் சென்னை மெட்ரோ… வணிக வளாக வழியாக மெட்ரோ ரயில்?

Thirumangalam Metro: சென்னையில் திருமங்கலத்தில் அமைக்கப்படும் புதிய மெட்ரோ ரயில் நிலையம், இந்தியாவிலேயே முதன்முறையாக ஒரு வணிக வளாகத்தின் வழியாகச் செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. மூன்று ஒன்பது மாடி கட்டிடங்களுடன் இணைக்கப்பட்ட இந்த நிலையம், 4, 5 மற்றும் 6-வது மாடிகளில் ரயில் பாதைகளை உள்ளடக்கியது.

புதிய முயற்சியில் சென்னை மெட்ரோ… வணிக வளாக வழியாக மெட்ரோ ரயில்?
வணிக வளாகம் வழியாக மெட்ரோ ரயில்Image Source: x
Sivasankari Bose
Sivasankari Bose | Published: 10 Jun 2025 10:07 AM IST

சென்னை ஜூன் 10: சென்னையில் 2ம் கட்ட மெட்ரோ ரயில் (Chennai Metro Train) திட்டத்தின் ஒரு பகுதியாக, திருமங்கலத்தில் வணிக வளாகத்தின் வழியாக மெட்ரோ செல்லும் புதிய முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இது இந்தியாவில் இப்படியான முதல் முயற்சியாகும். திருமங்கலம் மெட்ரோ நிலையத்துடன் இணைந்து 9 மாடி கட்டிடங்கள் மூன்றும் கட்டப்படவுள்ளன. இதில், 4வது மாடியில் ரயில் நிலையம் மற்றும் 5, 6வது மாடிகளில் ரயில்கள் செல்லும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது. மொத்த பரப்பளவு 6.85 லட்சம் சதுர அடியாகும். அலுவலகங்கள், கடைகள் மற்றும் வாகன நிறுத்துமிடங்களுடன் கூடிய இந்த திட்டத்திற்கு டெண்டர் அறிவிக்கப்பட்டுள்ளது.

திருமங்கலத்தில் வணிக வளாக வழியாக மெட்ரோ ரயில் திட்டம்

சென்னை மெட்ரோ ரயிலின் 2ம் கட்டப் பணிகள் மூன்று முக்கிய வழித்தடங்களில் பரபரப்பாக நடைபெற்று வருகின்றன. இதில், பெருநகர சென்னை நகரை புறநகரத்துடன் இணைக்கும் வகையில் மெட்ரோ ரயில் திட்டத்தின் கீழ் திருமங்கலத்தில் ஒரு முக்கிய மாற்றம் ஏற்பட உள்ளது. இந்த முறை, வணிக வளாகங்களின் வழியாக மெட்ரோ ரயில் செல்லும் திட்டம் இந்தியாவில் முதன்முறையாக அமைய இருப்பதாக சென்னை மெட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது.

வணிக வளாக வழியாக மெட்ரோ

புதிய முயற்சியில் சென்னை மெட்ரோ

திருமங்கலம் மெட்ரோ ரயில் நிலையத்துடன் இணைக்கப்பட்ட 9 மாடி கட்டிடத்தின் மாதிரி புகைப்படங்கள் சமீபத்தில் வெளியிடப்பட்டுள்ளன. இந்த கட்டிடத்தில், வணிக வளாகங்களுடன் இணைந்த வகையில் ரயில் நிலையம் அமைக்கப்பட உள்ளது. மொத்தம் மூன்று 9 மாடி கட்டிடங்கள் கட்டப்படவுள்ள நிலையில், ரயில் நிலையம் இரு மாடிகளில் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது. இதில் 4வது மாடியில் மெட்ரோ நிலையம் அமைக்கப்படும்; 5 மற்றும் 6வது மாடிகளில் மெட்ரோ ரயில்கள் செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

டெண்டர் அறிவிப்பு: விரைவில் பணிகள் தொடங்கும்

இந்த திட்டத்தின் மொத்த பரப்பளவு சுமார் 6.85 லட்சம் சதுர அடி ஆகும். கட்டுமானத்திற்கான டெண்டர் ஏற்கனவே அறிவிக்கப்பட்டு, விரைவில் பணிகள் தொடங்க உள்ளன. இதில், அலுவலகங்கள், சில்லறை விற்பனை கடைகள், மேலும் மூன்று நிலைகளில் சுரங்க வாகன நிறுத்தும் வசதிகள் போன்றவையும் அடங்கும். இந்த அமைப்பு, ஒரு வணிக வளாகத்தின் வழியாக மெட்ரோ ரயில்கள் செல்லும் வகையில் வடிவமைக்கப்படும் இந்தியாவின் முதல் மெட்ரோ திட்டமாகும்.

Follow Us