Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

விவசாயிகள் அதிர்ச்சி.. பயிர் கடன்களுக்கு சிபில் ஸ்கோர் கட்டாயமா? தமிழக அரசு விளக்கம்!

Tamil nadu Farmer Loan : தமிழகத்தில் விவசாயிகளுக்கு சிபில் ஸ்கோர் அடிப்படையில் பயிர்க்கடன் உள்ளிட்டவை வழங்கப்படும் என்று தகவல்கள் வெளியானது. இதற்கு விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. இந்த நிலையில், சிபில் ஸ்கோர் அடிப்படையில் விவசாயிகளுக்கு கடன் வழங்க அறிவுறுத்தப்படவில்லை கூட்டுறவுத்துறை அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது.

விவசாயிகள் அதிர்ச்சி.. பயிர் கடன்களுக்கு சிபில் ஸ்கோர் கட்டாயமா? தமிழக அரசு விளக்கம்!
தமிழக அரசுImage Source: X
umabarkavi-k
Umabarkavi K | Updated On: 10 Jun 2025 08:14 AM

சென்னை, ஜூன் 10 : கூட்டுறவு வங்கிகளில் சிபில் ஸ்கோர் அடிப்படையில் விவசாயிகளுக்கு கடன் வழங்கப்படும் என தகவல்கள் வெளியான வண்ணம் இருந்தன. இதற்கு விவசாயிகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. இந்த விஷயம் பூதாகரமாக வெடித்ததை அடுத்து, கூட்டுறவுத்துறை அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது. அதன்படி, கூட்டுறவு வங்கிகளில் சிபில் ஸ்கோர் அடிப்படையில் விவசாயிகளுக்கு கடன் வழங்க அறிவுறுத்தப்படவில்லை என விளக்கம் அளித்துள்ளது. தமிழ்நாடு தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலம் விவசாயிகளுக்கு பயிர்க்கடன், கால்நடைப் பராமரிப்பு கடன் உள்ளிட்டவற்றை வழங்கப்பட்டு வருகிறது. இந்த கடன்கள் மூலம் ஆயிரக்கணக்கான விவசாயிகள் பயனடைந்து வருகின்றனர்.  இப்படியான சூழலில், விவசாயிகள் கூட்டுறவு வங்கிகள் மூலம் கடன் பெறுவதற்கு பல்வேறு விதிமுறைகள் விதிக்கப்பட்டது தொடர்பாக அண்மையில் தகவல்கள் வெளியானது.

பயிர் கடன்களுக்கு சிபில் ஸ்கோர் கட்டாயமா?

அதாவது, கூட்டுறவு துறை மாநில பதிவாளர் விவசாயிகளின் பயர்க்கடன் உள்ளிட்ட அனைத்து வகையான கடன்களை பெற சிபில் ஸ்கோர் கட்டாயம் இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டு இருந்ததாக தெரிகிறது. இது விவசாயிகளுக்கு கடும் அதிர்ச்சியை கொடுத்தது.

போதிய வருமானம் இல்லாமல் கஷ்டப்பட்டு வரும் விவசாயிகளின் சிபில் ஸ்கோர் என்பது குறைவாகவே இருக்கும். போதிய வருமானம் இல்லாததால் கடனை சரியான நேரத்தில் செல்ல முடியாத சூழல் விவசாயிகளுக்கு உள்ளது. இந்த நேரத்தில் சிபில் ஸ்கோர் அடிப்படையில் கடன் வழங்குவோம் என அறிவிப்புக்கு கடும் எதிர்ப்புகள் எழுந்தது.

இதற்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்கமும் கண்டனம் தெரிவத்தது. இதற்கு விவசாயிகள் பலரும் போராட்டத்திலும் ஈடுபட்டதாக தெரிகிறது. சிபில் ஸ்கோர் அடிப்படையில் கடன் வழங்கும் முடிவை திரும்ப பெற வேண்டும் என காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை உள்ளிட்டோர் வலியுறுத்தி இருந்தனர்.

கண்டனம்

தமிழக அரசு விளக்கம்

இந்த விஷயம்  பேசும் பொருளாக மாறிய நிலையில், தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது. அதன்படி, கூட்டுறவு வங்கிகளில் சிபில் ஸ்கோர் அடிப்படையில் விவசாயிகளுக்கு கடன் வழங்க அறிவுறுத்தப்படவில்லை என விளக்கம் அளித்துள்ளது. இதுகுறித்து கூட்டுறவுத்துறை கூறுகையில், “சிபில் ஸ்கோர் அடிப்படையில் கடன் வழங்க அறிவுறுத்தல் வழங்கப்படவில்லை. இதர வங்கிகளில் இந்த திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு கடன் வழங்கப்படவில்லை. கடன் நிலுவை இல்லை என்பதை உறுதி செய்ய மட்டுமே சிபில் ஸ்கோர் பயன்படுத்தப்படும்” என்று விளக்கம் அளித்துள்ளது.