AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

மதுரை பஸ் நிலையத்தில் டிரைவரை செருப்பால் தாக்கிய உதவி மேலாளர்…

Madurai Bus Stand Clash: மதுரை ஆரப்பாளையம் பஸ் நிலையத்தில், பஸ்ஸின் தாமதம் குறித்து பயணிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். உதவி மேலாளர் மாரிமுத்து, ஓட்டுநர் கணேசனை செருப்பால் அடித்தார். இந்த வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்த, அதிகாரிக்கு நடவடிக்கை வேண்டும் என கோரிக்கை எழுந்தது.

மதுரை பஸ் நிலையத்தில் டிரைவரை செருப்பால் தாக்கிய உதவி மேலாளர்…
டிரைவரை உதவி மேலாளர் காலணியால் தாக்குதல் Image Source: x
Sivasankari Bose
Sivasankari Bose | Updated On: 09 Jun 2025 13:51 PM IST

மதுரை ஜூன் 09: மதுரை (Madurai) ஆரப்பாளையம் (Arapalayam Bus Stand) பஸ் நிலையத்தில், திருப்பூர் செல்லும் அரசு பஸ்ஸில் தாமதம் ஏற்பட்டது. பயணிகள் இது குறித்து ஓட்டுநர் கணேசனிடம் கேட்க, மேலாளர் உத்தரவின்றி பஸ் இயக்க முடியாது என அவர் தெரிவித்தார். பயணிகள் நேரடியாக உதவி மேலாளர் மாரிமுத்துவிடம் புகார் தெரிவித்த போது, அவர் அவமதிக்கும் வகையில் பேசியதாக கூறப்படுகிறது. வாக்குவாதம் உயரும் நிலையில், டிரைவர் கணேசனை அலுவலகத்திற்குள் அழைத்துச் சென்ற உதவி மேலாளர், திடீரென செருப்பால் தாக்கினார். சம்பவம் வீடியோவாக சமூக வலைதளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதிகாரிக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என டிரைவர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

மதுரை பஸ் நிலையத்தில் பரபரப்பு

மதுரை ஆரப்பாளையம் பஸ் நிலையத்தில் இருந்து திருப்பூர், கோயம்புத்தூர், சேலம் உள்ளிட்ட இடங்களுக்கு அரசு பஸ்கள் இயங்குகின்றன. தொடர்ந்த விடுமுறைக்குப் பிறகு சொந்த ஊர்களில் இருந்து திரும்பும் பயணிகள் கூட்டம் பஸ் நிலையத்தில் அதிகரித்திருந்தது. இந்நிலையில், திருப்பூர் செல்லும் அரசு பஸ், ரவுண்டானா அருகே பயணிகளை ஏற்றிவிட்டு நேரமாவதற்கும் பஸ்சை இயக்காமை குறித்து பயணிகள் ஓட்டுநர் கணேசனிடம் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர், மேலாளர் உத்தரையின்றி பஸ்சை இயக்க முடியாது என்று பதிலளித்தார்.

 டிரைவரை உதவி மேலாளர் செருப்பால் தாக்குதல்

பயணிகள் நேரடியாக பஸ் நிலைய உதவி மேலாளர் மாரிமுத்துவிடம் புகார் தெரிவித்தனர். அவரும் பயணிகளை, முன்பதிவு இல்லாமல் வாக்குவாதம் செய்வதாகக் குற்றம்சாட்டி அவமதிக்கும் வகையில் பேசியதாக கூறப்படுகிறது. இதனால் பயணிகளுக்கும் அதிகாரிகளுக்கும் வாக்குவாதம் எழுந்தது. பின்னர், அந்த இடத்திற்கு வந்த டிரைவர் கணேசனை, அலுவலகத்துக்குள் அழைத்துச் சென்ற உதவி மேலாளர், திடீரென செருப்பால் தாக்கிய சம்பவம் நிகழ்ந்தது.

டிரைவரை செருப்பால் தாக்கிய உதவி மேலாளர்

அரசு பஸ் ஓட்டுனர்கள் சங்கம் மற்றும் பொதுமக்கள் கடும் கண்டனம்

இந்த சம்பவம் சமூக வலைதளங்களில் பரவியதைத் தொடர்ந்து, அரசு பஸ் ஓட்டுனர்கள் சங்கம் மற்றும் பொதுமக்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். தாக்கிய உதவி மேலாளருக்கு எதிராக உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Follow Us