விஜய், வேல்முருகன் கட்சிகளுக்கு இடையில் போஸ்டர் மோதல்…
Vijay-Velmurugan Poster War: விழுப்புரத்தில் நடிகர் விஜய் மற்றும் வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் ஆதரவாளர்கள் இடையே போஸ்டர் மோதல் ஏற்பட்டுள்ளது. விஜயின் மாணவர்களுக்கான நிகழ்ச்சியில் நடந்த சம்பவம் தொடர்பான விமர்சனத்தால் இந்தப் போஸ்டர் மோதல் உருவானது. இதனால் விழுப்புரத்தில் அரசியல் பரபரப்பு நிலவுகிறது.

விழுப்புரம் ஜூன் 09: விழுப்புரத்தில் (Vilupuram) நடிகர் விஜய் (Actro Vijay) மற்றும் வேல்முருகன் (Velmurugan) கட்சிகள் இடையே போஸ்டர் மோதல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விஜய் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு பரிசளித்த நிகழ்ச்சியில் மாணவியருடன் தொடர்பு கொண்ட விதம் பற்றி விமர்சனங்கள் எழுந்தன. தமிழர் கலாசாரத்திற்கு எதிரான நடத்தை என வாழ்வுரிமை கட்சி விமர்சித்து போஸ்டர் ஒட்டியது. இதற்கு பதிலடியாக விஜய் ஆதரவாளர்கள் வேல்முருகனை கடுமையாக கண்டித்தனர். இருவரையும் குறிவைக்கும் போஸ்டர்கள் நகரம் முழுவதும் ஒட்டப்பட்டுள்ளன. இதனால் அரசியல் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
விஜய், வேல்முருகன் கட்சிகளுக்கு இடையில் போஸ்டர் மோதல்
தமிழகத்தில் அரசியல் சூழ்நிலை மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நடிகரும், தமிழக வெற்றிக் கழகத் தலைவருமான விஜய் கடந்த வாரம் அரசு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவியரை பாராட்டி பரிசளிக்கும் விழாவை நடத்தினார். அந்த நிகழ்ச்சியில் சில விளையாட்டு நிகழ்வுகள், குறிப்பாக ‘ஹார்டின்’ மற்றும் ‘அம்பு வீச்சு’ போன்றவை இடம் பெற்றன. இதில் விஜய் மாணவ, மாணவியருடன் தொடர்பு கொண்ட விதம், தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவரான வேல்முருகனின் கடும் விமர்சனத்துக்கு உள்ளாகியது.





விஜய், வேல்முருகன் கட்சிகளுக்கு இடையில் போஸ்டர் மோதல்
விழுப்புரத்தில் நடிகர் விஜய் மற்றும் வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் ஆதரவாளர்கள் இடையே போஸ்டர் மோதல் ஏற்பட்டுள்ளது. விஜயின் மாணவர்களுக்கான நிகழ்ச்சியில் நடந்த சம்பவம் தொடர்பான விமர்சனத்தால் இந்தப் போஸ்டர் மோதல் உருவானது. வேல்முருகன் தமிழர் கலாசாரத்திற்கு எதிரானது எனக் குற்றம் சாட்டினார். இதற்கு பதிலடியாக விஜய் ஆதரவாளர்கள் கண்டனம் தெரிவித்தனர். இதனால் விழுப்புரத்தில் அரசியல் பரபரப்பு நிலவுகிறது.
கல்வி உதவித்தொகை வழங்கும் விழா
அண்ணன் – தங்கை பாசம் ❤️#WeHugVijayAnna pic.twitter.com/KmM3H5CBis
— 𝗩𝗧𝗠ᵀⱽᴷ (@VTMOffl) June 4, 2025
விஜய் குறித்து வேல்முருகன் கடும் விமர்சனம்
இதையடுத்து, வேல்முருகன் தலைமையிலான கட்சி விழுப்புரம் உள்ளிட்ட பல இடங்களில் போஸ்டர்களை ஒட்டி, “பெண்கள், மாணவிகள் மீது கை வைத்து தொட்டு பேசுவது தமிழர் பாரம்பரியத்திற்கும் கலாசாரத்திற்கும் முரணானது” என்று குற்றம் சாட்டியுள்ளது. மேலும், சினிமா பிரபலத்துக்காக மக்கள் ஆசையில் அரசியலுக்கு வர நினைவது நியாயமல்ல என்றும் குறிப்பிட்டுள்ளனர்.
தமிழக வெற்றிக் கழகத்தினர் வேல்முருகன் மீது விமர்சனம்
இதற்கு பதிலடி அளிக்கும் வகையில், தெற்கு மாவட்ட தமிழக வெற்றிக் கழகத்தினர் வேல்முருகன் மீது கடும் விமர்சனங்களை சுமத்திய போஸ்டர்களை நகரின் முக்கிய பகுதிகளில் ஒட்டியுள்ளனர். “ஒரு சட்டமன்ற உறுப்பினர் சீட்டுக்காக மாணவர்கள் மற்றும் பெற்றோர்களை இழிவாக பேசியவர் வேல்முருகனே” எனக் குற்றஞ்சாட்டி, அவரை கண்டித்துள்ளனர்.
இவ்வாறு இரு கட்சிகளும் தலைவர்களை குறிவைத்து எதிர்மறையான போஸ்டர்களை ஒட்டியதால், விழுப்புரத்தில் அரசியல் பரபரப்பு சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. மக்கள் மத்தியில் இதுதொடர்பான விவாதங்கள் சூடுபிடித்து வருகின்றன.