Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

அரசு பேருந்தில் டிக்கெட் கிடைக்க இதுதான் வழி.. தமிழ்நாடு போக்குவரத்து கழகம்

Chennai-Klambakkam Bus Shortage: சென்னை கிளாம்பாக்கத்தில் இருந்து தென் மாவட்டங்களுக்கு பேருந்துப் பற்றாக்குறை குறித்த பயணிகள் புகாரைத் தொடர்ந்து, அரசு கூடுதல் பேருந்துகளை இயக்கியுள்ளது. நெரிசலைத் தவிர்க்கவும், கூடுதல் பேருந்துகளை இயக்குவதற்கும் முன்பதிவு அவசியம் என அரசு வலியுறுத்துகிறது. www.tnstc.in மற்றும் செயலி மூலம் முன்பதிவு செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

அரசு பேருந்தில் டிக்கெட் கிடைக்க இதுதான் வழி.. தமிழ்நாடு போக்குவரத்து கழகம்
கிளாம்பாக்கத்தில் பேருந்து சேவை குறைப்பு குறித்த விவகாரம் Image Source: social media
Sivasankari Bose
Sivasankari Bose | Updated On: 08 Jun 2025 07:41 AM

சென்னை ஜூன் 08: சென்னை கிளாம்பாக்கத்தில் இருந்து தென் மாவட்டங்களுக்கு போதிய பேருந்துகள் இல்லையென பயணிகள் புகார் தெரிவித்தனர். இதையடுத்து கடந்த 4 முதல் 6 ஆம் தேதி வரை 1,600-க்கும் மேற்பட்ட கூடுதல் பேருந்துகள் இயக்கப்பட்டதாக அரசு தெரிவித்துள்ளது. முன்பதிவின் மூலம் பயணத்தை திட்டமிட்டால் கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போதுள்ள முன்பதிவு இருக்கைகளில் 26% மட்டுமே பயணிகள் பயன்படுத்தியுள்ளனர். நள்ளிரவு நேர கூட்டநெரிசலை தவிர்க்க முன்பதிவு அவசியம் என வலியுறுத்தப்பட்டுள்ளது. www.tnstc.in மற்றும் செயலி மூலம் முன்பதிவு செய்யுமாறு அரசு கேட்டுக்கொண்டுள்ளது.

கிளாம்பாக்கத்தில் பேருந்து சேவை குறைப்பு குறித்த விவகாரம்

சென்னை கிளாம்பாக்கத்தில் இருந்து தென் மாவட்டங்களுக்கு போதிய அளவு பேருந்துகள் இல்லாததால் ஏற்பட்ட பயணிகள் புகார் மற்றும் அரசியல் கட்சிகளின் கண்டனம் குறித்து, தமிழக போக்குவரத்து கழகம் விளக்கம் அளித்துள்ளது. அதில், முன்பதிவின் மூலம் பயணிகள் நெரிசலை தவிர்க்க முடியும் என்றும், தேவைக்கு ஏற்ப கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

பயணிகள் போராட்டம் மற்றும் அரசியல் கண்டனம்

பசுமை முகூர்த்த நாட்களில் கிளாம்பாக்கத்தில் இருந்து வெளியூர்களுக்கு செல்ல போதிய பேருந்துகள் இல்லாததால், பயணிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். வீடியோக்கள் சமூக ஊடகங்களில் வைரலான நிலையில், அதிமுக, தமிழக வெற்றிக் கழகம் உள்ளிட்ட கட்சிகள் அரசு நடவடிக்கையின்மையை கண்டித்தன.

பேருந்து வசதி இல்லை

 

அரசின் பதில் விளக்கம்

இதையடுத்து, கடந்த 2025 ஜூன் 4 முதல் 6 வரை தேவைப்பட்ட பகுதிகளுக்கு கூடுதல் பேருந்துகள் இயக்கப்பட்டதாக போக்குவரத்துத் துறை விளக்கம் அளித்துள்ளது. கிளாம்பாக்கத்தில் இருந்து திருவண்ணாமலை, திருச்சி, மதுரை, நெல்லை, நாகர்கோவில் உள்ளிட்ட பல நகரங்களுக்கு முன்பதிவு அடிப்படையில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

புள்ளிவிவரங்களுடன் சேவை விரிவாக்கம்

ஜூன் 4 ஆம் தேதி 200 கூடுதல் பேருந்துகள் மூலம் 73,480 பயணிகள் பயணம் செய்தனர்.

ஜூன் 5 ஆம் தேதி 622 கூடுதல் பேருந்துகள் மூலம் 96,690 பேர் பயணம் செய்தனர்.

ஜூன் 6 ஆம் தேதி 798 கூடுதல் பேருந்துகள் மூலம் 1,06,205 பயணிகள் பயணம்செய்தனர்.

முன்பதிவின் தேவை மற்றும் பயன்கள்

மொத்தமாக 94,926 முன்பதிவு இருக்கைகள் உள்ளபோதும், கடந்த 3 நாட்களில் 26% மட்டுமே முன்பதிவு செய்யப்பட்டதாகவும், அரசு பேருந்துகளில் அதிகபட்சமாக 9% மட்டுமே முன்பதிவு பயணிகள் உள்ளதாகவும் அரசு குறிப்பிட்டது.

முன்பதிவின் மூலம் சிக்கலற்ற பயணம்

நள்ளிரவு நேரங்களில் பெரும்பாலான பயணிகள் ஒரே நேரத்தில் வருவதால் கூட்ட நெரிசல் ஏற்படுகிறது. இதனால், இணையதளம் (www.tnstc.in) மற்றும் செயலி வழியாக பயணத்தை முன்பதிவு செய்யுமாறு பயணிகளிடம் அரசு கேட்டுள்ளது. முன்பதிவு செய்யும் பயணிகளுக்கேற்ப கூடுதல் பஸ்கள் இயக்கப்படும் எனவும் உறுதி அளிக்கப்பட்டுள்ளது.