AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

மாநிலங்களவை தேர்தல் வேட்பாளர்களின் சொத்து மதிப்பு என்ன? வெளியான விவரம்..

Candidate Asset Details Revealed: தமிழ்நாட்டில் நடைபெற்ற மாநிலங்களவைத் தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்களின் சொத்து விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. கமல்ஹாசன் ரூ.78.90 கோடி வருமானம் ஈட்டியதாகவும், ரூ. 245 கோடிக்கு மேல் சொத்துகள் வைத்திருப்பதாகவும் தெரியவந்துள்ளது. திமுக, அதிமுக வேட்பாளர்களின் சொத்து மதிப்பும் பல கோடிகளில் உள்ளது.

மாநிலங்களவை தேர்தல் வேட்பாளர்களின் சொத்து மதிப்பு என்ன? வெளியான விவரம்..
மாநிலங்களவை தேர்தல் வேட்பாளர்களின் சொத்து மதிப்புImage Source: x
Sivasankari Bose
Sivasankari Bose | Published: 07 Jun 2025 07:48 AM IST

தமிழ்நாடு ஜூன் 07: மாநிலங்களவைத் தேர்தலுக்கான வேட்பாளர்களின் சொத்து விவரங்கள் வெளியாகியுள்ளன. கமல்ஹாசன் ரூ.78.90 கோடி வருமானம் ஈட்டியுள்ளார்; அவருக்கு ரூ.59.69 கோடி அசையும், ரூ.245.86 கோடி அசையா சொத்துகள் உள்ளன. பி.வில்சனுக்கும் அவரது மனைவிக்கும் ரூ.40 கோடியுக்கும் மேல் சொத்து மதிப்பு உள்ளது. கவிஞர் சல்மா மற்றும் கணவருக்குச் சேர்த்து ரூ.3 கோடியளவில் சொத்துகள் உள்ளன. அதிமுக வேட்பாளர்கள் இன்பதுரை மற்றும் தனபாலின் குடும்பச் சொத்துகள் ரூ.10 கோடி முதல் ரூ.17 கோடி வரை உள்ளன. பெரும்பாலான வேட்பாளர்களும் பல கோடி சொத்து மற்றும் கடன்களை வைத்திருப்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

மாநிலங்களவை தேர்தல் வேட்பாளர்களின் சொத்து மதிப்பு

மாநிலங்களவைத் தேர்தலுக்கான வேட்பாளர்களின் சொத்து விவரங்கள் வெளியாகியுள்ளன. மக்கள் நீதி மையம் தலைவர் கமல்ஹாசன் உள்ளிட்ட ஆறு வேட்பாளர்களின் சொத்து மதிப்புகள், அவர்கள் தாக்கல் செய்த பிரமாண பத்திரங்களின் அடிப்படையில் வெளியிடப்பட்டுள்ளன.

மநீம தலைவர் கமல்ஹாசன்

கமல்ஹாசன், 2023-24 நிதியாண்டில் ரூ.78.90 கோடி வருமானம் ஈட்டியுள்ளார். அவரது அசையும் சொத்துகளின் மதிப்பு ரூ.59.69 கோடி ஆகும். அசையா சொத்துகளின் சந்தை மதிப்பு ரூ.245.86 கோடி எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. அவரிடம் ரூ.2.60 லட்சம் ரொக்கம் உள்ளது. மகேந்திரா பொலிரோ, மெர்சிடீஸ் பென்ஸ், பிஎம்டபிள்யூ மற்றும் லக்சஸ் ஆகிய நான்கு கார்கள், மொத்தம் ரூ.8.43 கோடி மதிப்பில் உள்ளன. கமல்ஹாசனுக்கு ரூ.49.67 கோடி கடன் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கமல் மற்றும் திமுக வேட்பாளர்கள் வேட்புமனு

திமுக வேட்பாளர் பி. வில்சன்

திமுக வேட்பாளர் பி. வில்சனின் அசையும் சொத்துகள் ரூ.12.58 கோடி மதிப்புடையவை; அவரது மனைவி வான்மதியின் சொத்துகள் ரூ.3.27 கோடி மதிப்புடையவை. அசையா சொத்துகளின் சந்தை மதிப்பு முறையே ரூ.28.08 கோடி மற்றும் ரூ.11.72 கோடி. இருவருக்கும் சேர்த்து ரூ.1.15 கோடி கடன் உள்ளது.

திமுக வேட்பாளர் கவிஞர் சல்மா

கவிஞர் சல்மாவின் அசையும் சொத்துகள் ரூ.90.09 லட்சம் மதிப்புடையவை; அவரது கணவர் அப்துல் மாலிக்கின் சொத்துகள் ரூ.55.42 லட்சம் மதிப்புடையவை. சல்மாவின் பெயரில் உள்ள வேளாண் நிலத்தின் சந்தை மதிப்பு ரூ.1.15 கோடி; இதர அசையா சொத்துகளின் சந்தை மதிப்பு ரூ.1.95 கோடி.

திமுக வேட்பாளர் எஸ்.ஆர். சிவலிங்கம்

எஸ்.ஆர். சிவலிங்கத்தின் அசையும் சொத்துகள் ரூ.76.04 லட்சம் மதிப்புடையவை; அவரது மனைவி நவரத்தினத்தின் சொத்துகள் ரூ.1.30 கோடி மதிப்புடையவை. அசையா சொத்துகளின் சந்தை மதிப்பு முறையே ரூ.58.61 லட்சம் மற்றும் ரூ.1.64 கோடி. இருவருக்கும் சேர்த்து ரூ.64.30 லட்சம் கடன் உள்ளது.

அதிமுக வேட்பாளர் ஐ.எஸ். இன்பதுரை

அதிமுக வேட்பாளர் ஐ.எஸ். இன்பதுரையின் அசையும் சொத்துகள் ரூ.64.49 லட்சம் மதிப்புடையவை; அவரது மனைவி பிரிசில்லா செல்வமாதாவின் சொத்துகள் ரூ.1.44 கோடி மதிப்புடையவை. அசையா சொத்துகளின் சந்தை மதிப்பு ரூ.2.54 கோடி; இருவருக்கும் சேர்த்து ரூ.1.31 கோடி கடன் உள்ளது.

அதிமுக வேட்பாளர் எம். தனபால்

மற்றொரு அதிமுக வேட்பாளர் எம். தனபாலின் அசையும் சொத்துகள் ரூ.5.09 கோடி மதிப்புடையவை; அவரது மனைவி காயத்ரியின் சொத்துகள் ரூ.4.88 கோடி மதிப்புடையவை. அசையா சொத்துகளின் சந்தை மதிப்பு முறையே ரூ.3.46 கோடி மற்றும் ரூ.12.88 கோடி. இருவருக்கும் சேர்த்து ரூ.3.32 கோடி கடன் உள்ளது.

இந்த விவரங்கள், மாநிலங்களவைத் தேர்தலுக்கான வேட்பாளர்களின் பொருளாதார நிலையை வெளிப்படுத்துகின்றன.

Follow Us