AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

தமிழகத்தில் இடி, மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு – வானிலை மையம் எச்சரிக்கை

Tamil Nadu Weather Forecast: தமிழ்நாட்டில் 2025 ஜூன் 8 முதல் 14 வரை லேசானது முதல் கனமழை வரை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. 2025 ஜூன் 10, 11, 12 தேதிகளில் கடலூர், விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழகத்தில் இடி, மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு – வானிலை மையம் எச்சரிக்கை
தமிழகத்தில் இடி, மின்னலுடன் மழைக்கு வாய்ப்புImage Source: pinrest
Sivasankari Bose
Sivasankari Bose | Published: 08 Jun 2025 06:30 AM IST

தமிழ்நாடு ஜூன் 08: தமிழகத்தில் (Tamilnadu Weather) வரும் ஏழு நாட்களுக்கு லேசானது முதல் கனமழை வரை பெய்யக்கூடிய வாய்ப்பு உள்ளது என வானிலை மையம் எச்சரித்துள்ளது. இன்று மற்றும் நாளை புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் மழை பெய்யும். 2025 ஜூன் 10, 11, 12 தேதிகளில் கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலூர், ராணிபேட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு அதிகம். மணிக்கு 30-40 கி.மீ வேகத்தில் பலத்த காற்றும் இருக்கக்கூடும். வெப்பநிலை இயல்பை விட 2–3°C அதிகமாக இருக்கும். சென்னையில் மேகமூட்டத்துடன் லேசான மழை பெய்யும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் இடி, மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு

சென்னை: தமிழகத்தின் பல பகுதிகளில் இன்று (ஜூன் 8) முதல் வரும் சில நாட்களுக்கு இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. தென்னிந்தியப் பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவி வருவதால், அடுத்த ஏழு நாட்களுக்கு மழை பெய்யும் சூழல் காணப்படுகிறது.

சென்னை வானிலை மையம் எச்சரிக்கை

இன்று மற்றும் நாளை (2025 ஜூன் 8, 9) தமிழகத்தில் சில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 2025 ஜூன் 9ம் தேதி சில இடங்களில் மணிக்கு 30 முதல் 40 கி.மீ வேகத்தில் பலத்த காற்றுடன் மழை பெய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று கனமழை பெய்யும் பகுதிகள்

2025 ஜூன் 10, 11 கனமழை பெய்யும் பகுதிகள்

2025 ஜூன் 10ம் தேதி கள்ளக்குறிச்சி, கடலூர், விழுப்புரம் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் கனமழை பெய்யக்கூடிய சாத்தியம் உள்ளது. தொடர்ந்து 2025 ஜூன் 11ம் தேதி தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், ராணிபேட்டை, திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை உண்டாகலாம்.

2025 ஜூன் 12ம் தேதியும் ஒரே போன்று பல மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யலாம். வேலூர், திருவள்ளூர் மற்றும் ராணிபேட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் சில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

வெப்பநிலை நிலவரம்

அதிகபட்ச வெப்பநிலையில் (38-39°C) முக்கியமான மாற்றம் இருக்காது எனினும் சில இடங்களில் இயல்பை விட 2–3°C அதிகமாக இருக்கக்கூடும். இது ஈரப்பதத்தை அதிகரிக்கச் செய்து, பொதுமக்களுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தும்.

சென்னை நகர வானிலை

சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை சுமார் 38°C-39°C மற்றும் குறைந்தபட்சம் 28°C இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு தொடர்ச்சியாக பல்வேறு மாவட்டங்களில் மழை, இடி, மின்னல், காற்று மற்றும் வெப்பநிலை மாற்றங்கள் உருவாகும் என வானிலை ஆய்வு மையம் பொதுமக்கள் முன்னெச்சரிக்கையுடன் செயல்பட வேண்டியது அவசியமாகும் என அறிவுறுத்தியுள்ளது.

Follow Us