AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

வெளுக்கப்போகும் மழை… இன்று 7 மாவட்டங்களுக்கு அலர்ட்.. சென்னையில் எப்படி?

Tamil Nadu Weather Alert : தமிழகத்தில் 5 நாட்களுக்கு பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்யக் கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக, 2025 ஜூன் 10ஆம் தேதியான இன்று கிருஷ்ணகிரி, ஈரோடு, திருப்பூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்யக் கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெளுக்கப்போகும் மழை… இன்று 7 மாவட்டங்களுக்கு அலர்ட்.. சென்னையில் எப்படி?
தமிழகத்தில் மழைImage Source: PTI
Umabarkavi K
Umabarkavi K | Published: 10 Jun 2025 06:25 AM IST

சென்னை, ஜூன் 10: தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு பல்வேறு மாவட்டங்களில் கனமழை வெளுக்கும் என வானிலை மையம் (tamil nadu weather alert) தெரிவித்துள்ளது. சென்னையிலும் (chennai rain) இடி,மின்னலுடன் லேசான மழை பெய்யக் கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் 2025 ஜூன் மாத தொடக்கத்தில் இருந்தே வெயில் வாட்டி வதைத்தது. 2025 மே மாதம் முழுவதும் மழை கொட்டித் தீர்த்த நிலையில், ஜூன் மாதம் தொடங்கியதில் இருந்தே மீண்டும் வெயிலின் தாக்கம் கடுமையாக இருந்து வந்தது. இதனை தணிக்கும் விதமான கடந்த இரு தினங்களாகவே தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. இதனால், வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது.  இந்த நிலையில், அடுத்த சில தினங்களுக்கான வானிலை நிலவரத்தை பார்ப்போம்.

இன்று 7 மாவட்டங்களுக்கு கனமழை அலர்ட்

அதன்படி, தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரமணாக, தமிழக்ததில் 2025 மே 10ஆம் தேதியான இன்று தமிழகத்தில் ஒருசில இடங்களில் மிதமான மழையும், கிருஷ்ணகிரி, ஈரோடு, திருப்பூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யக் கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

மேலும், 2025 ஜூன் 11ஆம் தேதி வடதமிழகம், தென் தமிழகத்தில் ஒருசில இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும். தஞ்சை, திருவாரூர், நாகை, திருச்சி, அரியலூர், கடலூர், புதுக்கோட்டை, பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, தருமபுரி, நீலகிரி, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யக் கூடும் என கூறப்பட்டுள்ளது.

2025 ஜூன் 12ஆம் தேதி கோவை, நீலகிரி, தேனி, தென்காசி, கிருஷ்ணகிரி, தருமபுரி, ராணிப்பேட்டை, திருவள்ளூர், காஞ்சிபுரம், திருப்பத்தூர், வேலூர் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை மையம் கூறியுள்ளது.

சென்னையில் வானிலை எப்படி?


2025 ஜூன் 13, 14,15ஆம் தேதிகளில் கோவை, நீலகிரி மாவட்டத்திற்கு கன முதல் மிக கனமழை பெய்யக் கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நெல்லை, தேனி, திண்டுக்கல், தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களில் கனமழை பெய்யக் கூடும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.

சென்னையை பொறுத்தவரை, 2025 ஜூன் 10ஆம் தேதி வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் ஒருசில இடங்களில் மிதமான மழை பெய்யக் கூடும் எனவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேலும், அதிகபட்ச வெப்பநிலை 37 முதல் 38 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27 முதல் 28 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக் கூடும் என வானிலை மையம் கூறியது.

இதற்கிடையில், அடுத்த மூன்று மணி நேரத்திற்கு தஞ்சை, திருவாரூர், நாகை, பெரம்பலூர், தேனி, தென்காசி, நெல்லை, அரியலூர் மாவட்டங்களில் மிதமான மழை பெய்யக் கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

Follow Us