AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

மாயமான வேடசந்தூர் மருத்துவர், காரில் சடலமாக மீட்பு.. நடந்தது இதுதான்..!

Online Rummy: திண்டுக்கல் மாவட்ட இளம் மருத்துவர் ஜோஷுவா சாம்ராஜ் ஆன்லைன் ரம்மி விளையாட்டில் 7 லட்சம் ரூபாய் இழந்து தற்கொலை செய்து கொண்டார். கொடைக்கானலில் அவரது சடலம் கண்டெடுக்கப்பட்டது. பண இழப்பால் குடும்பத்தினர் கண்டித்ததும், மன அழுத்தமும் தற்கொலைக்குக் காரணம் எனக் கூறப்படுகிறது.

மாயமான வேடசந்தூர் மருத்துவர், காரில் சடலமாக மீட்பு.. நடந்தது இதுதான்..!
திண்டுக்கல் மருத்துவர் தற்கொலைImage Source: social media
Sivasankari Bose
Sivasankari Bose | Published: 08 Jun 2025 12:45 PM IST

திண்டுக்கல் ஜூன் 08: திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த இளம் மருத்துவர் ஜோஷுவா சாம்ராஜ் ஆன்லைன் ரம்மி விளையாட்டில் 7 லட்சம் ரூபாய் இழந்ததால் தற்கொலை செய்து கொண்டது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கொடைக்கானலில் அவரது சடலம் காருக்குள் விஷ ஊசி செலுத்தப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டது. பண இழப்பு காரணமாக குடும்பத்தினரின் கண்டனத்தையும் சந்தித்த அவர், தற்கொலைக்கான கடிதம் எழுதி மாயமானார். அவரது பண இழப்புகள் மருத்துவக் கடனாகக் கூறி பெற்றோர், உறவினரிடமிருந்து வாங்கப்பட்டன. காவல்துறை விசாரணை தீவிரமாக நடைபெற்று வருகிறது. ஆன்லைன் ரம்மி விளையாட்டு இளைஞர்களின் வாழ்க்கையை அழிக்கிறது என சமூக ஆர்வலர்கள் எச்சரிக்கின்றனர்.

ஆன்லைன் ரம்மி விளையாட்டில் பணத்தை இழந்து தற்கொலை

ஆன்லைன் ரம்மி விளையாட்டில் பணத்தை இழந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவங்கள் தொடர்கதையாகி வரும் நிலையில், திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த இளம் மருத்துவர் ஒருவர் ஆன்லைன் ரம்மியால் உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. கோடைக்கானலில் அவரது சடலம் கண்டெடுக்கப்பட்ட நிலையில், காவல்துறை தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறது.

மருத்துவர் ஜோஷுவா சாம்ராஜின் பின்னணி

திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த மருத்துவர் ஜோஷுவா சாம்ராஜ், கொடைக்கானலில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் பணிபுரிந்து வந்தார். இளைஞர்களிடையே வேகமாகப் பரவி வரும் ஆன்லைன் ரம்மி விளையாட்டிற்கு இவர் அடிமையாகியுள்ளார். இந்த விளையாட்டின் மீது அவருக்கு இருந்த அதீத மோகம், படிப்படியாக அவரை கடன் சுமைக்குள் தள்ளியுள்ளது.

ஆன்லைன் ரம்மியின் கோரப்பிடி

மருத்துவர் ஜோஷுவா சாம்ராஜ் ஆன்லைன் ரம்மி விளையாட்டில் சுமார் 7 லட்சம் ரூபாய் வரை பணத்தை இழந்ததாகக் கூறப்படுகிறது. இந்தத் தொகையைப் பெற்றோர் மற்றும் உறவினர்களிடம், தனது மருத்துவப் படிப்பிற்காகக் கடன் வாங்குவதாகக் கூறி பெற்றுள்ளார். இருப்பினும், அவர் அந்தப் பணத்தை ஆன்லைன் ரம்மியில் முதலீடு செய்து இழந்துள்ளார். ஆன்லைன் ரம்மியின் அடிமைத்தனம் அவரது வாழ்க்கையைப் புரட்டிப் போட்டுள்ளது.

குடும்பத்தினரின் கண்டனமும் தற்கொலை முடிவும்

மருத்துவர் ஜோஷுவா சாம்ராஜின் பெற்றோர்கள் மற்றும் உறவினர்களுக்கு, அவர் ஆன்லைன் ரம்மி விளையாட்டிற்கு அடிமையாகிப் பணத்தை இழந்தது தெரியவந்துள்ளது. இதனால், அவர்கள் ஜோஷுவா சாம்ராஜை கடுமையாகக் கண்டித்ததாகக் கூறப்படுகிறது. குடும்பத்தினரின் கண்டிப்பு மற்றும் தான் இழந்த பணத்தை எண்ணி மன உளைச்சலுக்கு ஆளான ஜோஷுவா சாம்ராஜ், 2025 ஜூன் 2ஆம் தேதி தற்கொலை செய்து கொள்ளப் போவதாக ஒரு கடிதத்தை எழுதி வைத்துவிட்டு மாயமாகியுள்ளார்.

காவல்துறை விசாரணை மற்றும் எச்சரிக்கை

மாயமான ஜோஷுவா சாம்ராஜின் சடலம், கொடைக்கானல் பகுதியில் அவரது காருக்குள் விஷ ஊசி செலுத்தப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர், சடலத்தைக் கைப்பற்றிப் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.

இந்தச் சம்பவம் குறித்துக் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஆன்லைன் ரம்மி போன்ற சூதாட்ட விளையாட்டுகள் வாழ்க்கையை அழிக்கும் என்பதை உணர்ந்து இளைஞர்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.

Follow Us