AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

புறப்படும்போது விமானத்தில் ஏற்பட்ட திடீர் கோளாறு.. 312 பயணிகளின் உயிரை காப்பாற்றிய விமானி!

Emirates Flight Cancelled in Chennai due to Engine Issue | சென்னையில் இருந்து துபாய் புறப்பட்ட எமிரேட்ஸ் விமானத்தில் திடீர் இயந்திர கோளாறு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக பயணிகள் கடும் அதிர்ச்சிக்குள்ளாகிய நிலையில், விமானம் ரத்து செய்யப்பட்டதால் விமானத்தில் பயணம் செய்ய இருந்த 326 பேர் பாதுகாப்பாக உயிர் தப்பினர்.

புறப்படும்போது விமானத்தில் ஏற்பட்ட திடீர் கோளாறு.. 312 பயணிகளின் உயிரை காப்பாற்றிய விமானி!
மாதிரி புகைப்படம்
Vinalin Sweety
Vinalin Sweety | Published: 09 Jun 2025 07:45 AM IST

சென்னை, ஜூன் 09 : சென்னை விமான நிலையத்தில் (Chennai Airport) இருந்து துபாய் (Dubai) செல்ல தயாரான எமிரேட் ஏர்லைன்ஸ் (Emirates Airlines) விமானத்தில் திடீரென இயந்திர கோளாறு ஏற்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. விமானத்தில் ஏற்பட்ட கோளாறை விமானி முன்கூட்டியே கணித்து கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்த நிலையில், விமானத்தில் பயணிக்க இருந்த 312 பயணிகள் பத்திரமாக மீட்கப்பட்டனர். இந்த நிலையில், விமானத்தில் ஏற்பட்ட கோளாறை விமானி கண்டுபிடித்தது எப்படி, பயனிகள் பாதுகாப்பாக மீட்கப்பட்டது எப்படி என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

விமான நிலையத்தில் இருந்து கிளம்பும்போது திடீரென ஏற்பட்ட இயந்திர கோளாறு

சென்னை விமான நிலையத்திலிருந்து உலகின் பல்வேறு பகுதிகளுக்கு நாள்தோறும் நூற்றுக்கணக்கான விமானங்கள் சென்று வருகின்றன. அந்த வகையில் நேற்று (ஜூன் 08, 2025) காலை 9.50 மணிக்கு சுமார் 312 பயணிகளுடன் துபாய் செல்ல புறப்பட்ட எமிரேட் ஏர்லைன்ஸ் விமானம், திடீரென இயந்திர கோளாறுக்கு உட்பட்டுள்ளது. 312 பயணிகள் மற்றும் 14 விமான ஊழியர்களுடன் புறப்பட்ட விமானம், நடைமேடையில் இருந்து ஓடுபாதை நோக்கி சென்று கொண்டிருந்தது. அப்போது விமானத்தின் இயந்திரத்தில் ஏற்பட்ட கோளாறை விமானி கண்டுபிடித்துள்ளார். இது குறித்து அவர் உடனடியாக விமான நிலைய கட்டுப்பாட்டு அறையை தொடர்ப்புக்கொண்டு அதிகாரிகளுக்கு தகவல் அளித்துள்ளார்.

கோளாறு விரைவில் சரிசெய்யப்படாததால் ரத்து செய்யப்பட்ட விமானம்

தகவல் அறிந்து வந்த பொறியாளர் குழுவினர், விமானத்தில் ஏற்பட்ட இயந்திர கோளாறை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர். இயந்திர கோளாறு உடனடியாக சரி செய்யப்படாத காரணத்தால், விமானத்தில் இருந்தால் 312 பயணிகளும் கீழே இறக்கப்பட்டு ஓய்வு அறைகளில் தங்க வைக்கப்பட்டனர். பின்னர் இயந்திரத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக அந்த விமானம் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில், பாதிக்கப்பட்ட விமானத்தில் பயணம் செய்வதாக இருந்த பயணிகள் வெவ்வேறு விமானங்கள் மூலம் அனுப்பி வைக்கப்பட்டனர்.

கடும் அதிர்ச்சி அடைந்த விமான பயணிகள்

விமானத்தில் ஏற்பட்ட இயந்திர கோளாறை விமானி முன்கூட்டியே கணித்த நிலையில், விமானத்தில் பயணம் செய்ய இருந்த 326 பேர் பாதுகாப்பாக உயிர் தப்பினர். விமானத்தில் இயந்திர கோளாறு ஏற்பட்டதால், அதில் பயணிக்க இருந்த பயணிகள் கடும் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us