Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Aadhaar Card : ஆதார் கார்டு விவரங்கள் பிழையாக இருப்பதில் இவ்வளவு சிக்கல்களா?.. கட்டாயம் தெரிந்துக்கொள்ளுங்கள்!

Aadhaar Card Errors | இந்தியாவில் பொதுமக்களுக்கான முக்கிய ஆவணங்களில் ஒன்றாக ஆதார் கார்டு உள்ளது. குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை என அனைவரும் ஆதார் கார்டு வைத்திருக்க வேண்டும் என்ற கட்டாயம் உள்ளது. இந்த நிலையில், ஆதார் கார்டில் இருக்கும் சில பிழைகள் மூலம் சில சிக்கல்களை எதிர்க்கொள்ளும் வாய்ப்பு உள்ளது.

Aadhaar Card : ஆதார் கார்டு விவரங்கள் பிழையாக இருப்பதில் இவ்வளவு சிக்கல்களா?.. கட்டாயம் தெரிந்துக்கொள்ளுங்கள்!
மாதிரி புகைப்படம்
vinalin-sweety
Vinalin Sweety | Updated On: 13 Jun 2025 16:04 PM

இந்திய குடிமக்களின் முக்கிய அடையாள ஆவணமாக உள்ளது தான் ஆதார் கார்டு (Aadhaar Card). குழந்தைகளை பள்ளியில் சேர்ப்பது முதல் பல்வேறு தேவைகளுக்கு ஆதார் கட்டாயமாக உள்ளது. ஒருவர் இந்திய குடிமகனா என்பதை உறுதி செய்வதற்கு இந்த கார்டு முதன்மையாக உள்ளது. குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் ஆதார் கார்டு இல்லையெனில் பல வேலைகளை செய்து முடிக்க முடியாத சூழல் தான் உள்ளது. பொதுமக்களின் நலனுக்காக அரசு பல வகையான சிறப்பு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டங்களில் பயன்பெற வேண்டும் என்றாலும் ஆதார் கார்டு வைத்திருக்க வேண்டும் என்பது கட்டாயமாக உள்ளது.

வெறும் ஆதார் கார்டு வைத்திருப்பது மட்டுமன்றி, அதனை பிழையில்லாமல் வைத்திருப்பது முக்கியமாக கருதப்படுகிறது. காரணம், ஆதார் கார்டில் ஒரு தனி நபரின் அனைத்து முக்கியமான தகவல்களும் இடம்பெற்றிருக்கும் நிலையில், அவை மிக சரியானதாக இருக்க வேண்டும் என கூறப்படுகிறது. ஒருவேளை ஆதார் கார்டில் உள்ள விவகரங்கள் பிழையாக இருக்கும் பட்சத்தில் சில திட்டங்களில் பயன்பெற முடியாமல் போய்விடும் என கூறப்படுகிறது. அது குறித்து விரிவாக பார்க்கலாம்.

ஆதாரில் இருக்கும் முக்கிய தகவல்கள்

ஆதார் கார்டில் ஒருவரது பெயர், முகவரி, வயது, பாலினம், கண் ரேகை, கை ரேகை உள்ளிட்ட முக்கிய தகவல்கள் இடம் பெற்றிருக்கும். இந்த தகவல்கள் அனைத்தும் மிக சரியாக இருக்க வேண்டும் என்பது அவசியமாக உள்ளது. முன்னதாக ஆதார் கார்டு தனியாக பயன்படுத்தப்பட்டு வந்தது. ஆனால் தற்போது ஆதார் கார்டு, பான் கார்டு உள்ளிட்ட பிற ஆவணங்களுடன் இணைக்கப்பட்டுள்ளது. இந்த சூழலில் ஆதார் கார்டில் இருக்கும் தகவல்கள் வித்தியாசமாகவும், மற்ற ஆவணங்களில் இருக்கும் தகவல்கள் வித்தியாசமாகவும் இருக்கும் பட்சத்தில் அதில் சில சிக்கல்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளது.

பிழையான தகவல்களால் சிக்கல்களை சந்திக்கலாம்

ஆதார் கார்டில் வங்கி கணக்கு விவரங்கள் பொருந்தவில்லை என்றாலோ அல்லது ரேஷன் கார்டு விவரங்களுடன் பொருந்தவில்லை என்றாலோ சில திட்டங்களில் இருந்து உதவி கிடைக்காமல் போகலாம்.

தவறான வயது

வயது தவறாக இருக்கும் பட்சத்தில் மாணவர் உதவித்தொகை, மூத்த குடிமக்களுக்கான ஓய்வூதியம் உள்ளிட்ட திட்டங்களில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்படலாம்.

தவறான முகவரி

முகவரியில் தவறு அல்லது பிழை இருக்கும் பட்சத்தில் உஜ்வாலா யோஜனா, பிரதமர் ஆவாஸ் யோஜனா உள்ளிட்ட திட்டங்களில் பயன்பெற முடியாமல் போய்விடும்.

எனவே அரசின் திட்டங்களில் தொடர்ந்து பயன்பெற வேண்டும் என விரும்பினால் ஆதார் கார்டில் உள்ள விவரங்களை மிக சரியாக வைத்திருக்க வேண்டியது கட்டாயம் என்பது குறிப்பிடத்தக்கது.