AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

ஒன்றுக்கும் மேற்பட்ட கிரெடிட் கார்டு பயன்படுத்தும் நபரா நீங்கள்.. இவற்றை கட்டாயம் தெரிந்துக்கொள்ளுங்கள்!

Using More Than One Credit Card | பெரும்பாலான மக்கள் தங்களது பண தேவைகளுக்காக ஒன்றுக்கும் மேற்பட்ட கிரெடிட் கார்டுகளை பயன்படுத்துகின்றனர். இந்த நிலையில், ஒன்றுக்கும் மேற்பட்ட கிரெடிட் கார்டுகளை பயன்படுத்தக்கூடிய நபர்கள் தெரிந்துக்கொள்ள வேண்டிய சில முக்கிய விஷயங்கள் உள்ளன.

ஒன்றுக்கும் மேற்பட்ட கிரெடிட் கார்டு பயன்படுத்தும் நபரா நீங்கள்.. இவற்றை கட்டாயம் தெரிந்துக்கொள்ளுங்கள்!
மாதிரி புகைப்படம்
Vinalin Sweety
Vinalin Sweety | Published: 14 Feb 2026 12:33 PM IST

கிரெடிட் கார்டு (Credit Card) பொதுமக்களின் அன்றாட வாழ்வின் ஒரு அங்கமாக மாறிவிட்டது. தற்போதைய சூழலில் கிரெடிட் கார்டு இல்லாத நபர்களை பார்க்கவே முடியாது. விலை ஏற்றம், தேவை அதிகரிப்பு ஆகியவற்றை சமாளிப்பதற்காக பலரும் கிரெடிட் கார்டு பயன்படுத்துகின்றனர். இன்னும் சிலர் ஒன்றுக்கும் மேற்பட்ட கிரெடிட் கார்டுகளை பயன்படுத்துகின்றனர். ஆனால், அவ்வாறு ஒன்றுக்கும் மேற்பட்ட கிரெடிட் கார்டுகளை பயன்படுத்துவதில் சில சிக்கல்கள் உள்ளன. அவை என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

ஒன்றுக்கும் மேற்பட்ட கிரெடிட் கார்டுகளால் ஏற்படும் சிக்கல்கள்

கிரெடிட் கார்டுகள் நிதி சிக்கல்களை கையாள உதவும் மிகச் சிறந்த அம்சமாக உள்ளது. அதே சமயம் கிரெடிட் கார்டு பயன்படுத்துவதில் சில சிக்கல்களும் உள்ளன. காரணம், கிரெடிட் கார்டு சில கட்டுப்பாடுகளுக்கு உரியது. அதில் சில கடுமையான விதிகள் பின்பற்றப்படுகின்றன. இதன் காரணமாக கிரெடிட் கார்டு பயன்படுத்தும்போது தேவையற்ற சிக்கல்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. குறிப்பாக கிரெடிட் கார்டில் இருந்து செலவு செய்யும் பணத்தை மாத தவணையாக செலுத்த வேண்டும்.

இதையும்  படிங்க : EPFO : பிஎஃப் கணக்கில் வரவுள்ள ரூ.35,000.. இபிஎஃப்ஓ உறுப்பினர்களுக்கு குட் நியூஸ்!

இந்த நிலையில்,  மாத தவணை செலுத்த ஒரு நாள் தவறினால் கூட அதற்கு கட்டணம் செலுத்த வேண்டும். இதுவே ஒன்றுக்கும் மேற்பட்ட கார்டுகள் என்றால் கனிசமான தொகையை செலுத்த வேண்டும். அதுமட்டுமன்றி, மாத தவணை செலுத்த தவறும் பட்சத்தில் அது கிரெடிட் ஸ்கோரை மிக கடுமையாக பாதிக்கும். கிரெடிட் கார்டை பொருத்துவரை 30 சதவீதம் பயன்படுத்துவது இயல்பானதாக உள்ளது. அதற்கு மேல் பயன்படுத்தினால் வங்கிகள் உங்களை அதிக கடன் வாங்கும் நபர்களின் பட்டியலில் வைத்துவிடும். இதுவும் உங்களது கிரெடிட் ஸ்கோரை பாதிக்கும்.

ஒன்றுக்கும் மேற்பட்ட கிரெடிட் கார்டுகளை பயன்படுத்துவது எப்படி?

  • ஒன்றுக்கும் மேற்பட்ட கிரெடிட் கார்டுகளை வைத்திருப்பவர்கள் அதன் மாத தவணையை உரிய நேரத்தில் செலுத்த வேண்டியது அவசியமாக உள்ளது.
  • அனைத்து கிரெடிட் கார்டுகளையும், அனைத்து தேவைகளுக்கும் பயன்படுத்தாமல் பிரித்து பிரித்து பயன்படுத்துவது சரியானதாக இருக்கும்.
  • பல கிரெடிட் கார்டுகளை வைத்திருப்பவர்கள் அவற்றில் இருக்கும் முழு அளவையும் பயன்படுத்தாமல் பகுதி அளவு பயன்படுத்துவது கிரெடிட் ஸ்கோரை பாதுகாக்க உதவும்.

மேற்குறிப்பிட்ட இந்த விதிமுறைகளை பின்பற்றி கிரெடிட் கார்டு பயன்படுத்தும் பட்சத்தில் எந்த வித சிக்கலும் இல்லாமல் கிரெடிட் கார்டு பயன்படுத்த முடியும்.

Follow Us