AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

அலர்ட் பயணிகளே… சென்னையில் மின்சார ரயில்கள் ரத்து.. முக்கிய ரூட் இதுதான்!

Chennai EMU Train Cancelled : சென்னையில் மின்சார ரயில்கள் 2025 ஜூலை 8ஆம் தேதியான இன்று ரத்து செய்யப்படுகிறது. பராமரிப்பு பணிகள் காரணமாக, கும்மிடிப்பூண்டி பொன்னேரி ரயில் நிலையங்களுக்கு இடையே 6 மணி நேரத்திற்கு மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுகிறது.

அலர்ட் பயணிகளே… சென்னையில் மின்சார ரயில்கள் ரத்து.. முக்கிய ரூட் இதுதான்!
மின்சார ரயில்கள்Image Source: social media
Umabarkavi K
Umabarkavi K | Updated On: 08 Jul 2025 07:02 AM IST

சென்னை, ஜூலை 08 : சென்னையில் மின்சார ரயில்கள் 2025 ஜூலை 08ஆம் தேதியான இன்று ரத்து (Chennai EMU Train Cancelled) செய்யப்பட்டுள்ளது. பராமரிப்பு பணிகளுக்காக தெற்கு ரயில்வே (Southern Railway) இந்த நடவடிக்கை எடுத்துள்ளது. கும்மிடிப்பூண்டி பொன்னேரி ரயில் நிலையங்களுக்கு இடையே 6 மணி நேரத்திற்கு மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுகிறது. சென்னையின் முக்கிய போக்குவரத்து சேவையாக இருப்பது மின்சார ரயில்கள். இந்த மின்சார ரயில்களில் தினமும் ஆயிரக்கணக்கனா பயணிகள் பயணித்து வருகின்றனர். புறநகர் பகுதிகளையும் இணைக்கக் கூடியது என்பதால் பயணிகள் அதிகம் பயணித்து வருகின்றனர். தற்போது சென்னை கடற்கரை தாம்பரம் – செங்கல்பட்டு, கடற்கரை – வேளச்சேரி உள்ளிட்ட வழித்தடங்களில் மின்சார ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது.

சென்னையில் மின்சார ரயில்கள் ரத்து

பயணிகளுக்கு சீரான பயணத்தை வழங்குவதற்காக அவ்வப்போது மின்சார ரயில் சேவைகளில் மாற்றம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.அந்த வகையில், தற்போது தெற்கு ரயில்வே ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதாவது, கும்மிடிப்பூண்டி பொன்னேரி ரயில் நிலையங்களுக்கு இடையே பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், சில ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.

சென்டிரல் கூடூர் வழித்தடத்தில் கும்மிடிப்பூண்டி பொன்னேரி ரயில் நிலையங்களில் 2025 ஜூலை 8,10ஆம் தேதிகளில் காலை 9.15 மணி முதல் மாலை 3.15 மணி வரை 6 மணி நேரத்திற்கு மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுகிறது.

அதன்படி, சென்டிரலில் இருந்து காலை 8.05, 9.00, 9.30, 10.30, 11.35 ஆகிய நேரங்களில் கும்மிடிப்பூண்டி செல்லும் மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுகிறது. கும்மிடிப்பூண்டியில் இருந்து காலை 9.10,9.55,11.25,12.00,1.00, 2.30 ஆகிய நேரங்களில் சென்டிரல் வரும் ரயில்களும் ரத்து செய்யப்படுகிறது.

எந்தெந்த ரூட்?


சென்டிரல் – சூலூர்பேட்டை இடையே இயக்கப்படும் மின்சார ரயில்கள் காலை 5.40, 8.35, 10.15, 12.10 ஆகிய நேரங்களில் ரத்து செய்யப்படுகிறது. சூலூர்பேட்டையில் இருந்து காலை 10,11.45,மதியம் 12.35, மதியம் 1.15 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுகிறது.

மேலும், கடற்கரையில் இருந்து கும்மிடிப்பூண்டி செல்லும் மின்சார ரயில்களில் காலை 9.40, மதியம் 12.40 ரயில்கள் ரத்து செய்யப்படுகிறது. மேலும், செங்கல்பட்டில் இருந்த காலை 9.50 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில்கள் கடற்கரை கும்மிடிப்பூண்டி இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.

கும்மிடிப்பூண்டியில் இருந்து மாலை 3 மணிக்கு தாம்பரம் செல்லும் மின்சார ரயில்கள் கடற்கரை கும்மிடிப்பூண்டி இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. இதனால், இந்த இரண்டு நாட்களுக்கு சென்டிரல் பொன்னேரி இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகிறது. மேலும், சென்டிரலில் இருந்து எண்ணூருக்கும், எண்ணூரில் இருந்து சென்டிரலுக்கும், மிஞ்சூர் சென்டிரல், பொன்னேரி கடற்கரை இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

Follow Us