100 டிகிரி ஃபாரன்ஹீட் கடந்து பதிவாகும் வெப்பநிலை.. அசௌகரியம் ஏற்படும் என எச்சரிக்கை..
Tamil Nadu Weather Update: தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை என்பது இரண்டு முதல் நான்கு டிகிரி செல்சியஸ் வரை அதிகரித்த காணப்படும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக ஒரு சில பகுதிகளில் அசௌகரியம் ஏற்படலாம் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வானிலை நிலவரம், ஜூலை 7, 2025: தமிழகத்தில் நீலகிரி மற்றும் கோவை மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக கன மழை பெய்து வருகிறது. அந்த வகையில் கடந்த 24 மணி நேரத்தில் நீலகிரி மாவட்டம் நடுவட்டம் பகுதியில் ஆறு சென்டிமீட்டர் மழை அதிகபட்சமாக பதிவாகியுள்ளது. அதேபோல் நீலகிரி மாவட்டம் அவலாஞ்சியில் 5 சென்டிமீட்டர் மழை, கோவை மாவட்டம் சின்னகல்லார் 4 சென்டிமீட்டர் மழை, நீலகிரி மாவட்டம் கூடலூர், கோவை மாவட்டம் சின்கோனார், வால்பாறை, உபாசி, சோலையார் உள்ளிட்ட பகுதிகளில் மூன்று சென்டிமீட்டர் அளவு மழை பதிவாகியுள்ளது. இந்த நிலையில் மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக ஜூலை 7 2025 மற்றும் ஜூலை 8 2025 ஆகிய இரண்டு நாட்களில் தமிழகத்தில் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் ஒரு சில இடங்களில் தலைகாற்று மணிக்கு 50 கிலோமீட்டர் வேகத்தில் வீச கூடும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதிகரிக்கும் வெப்பநிலை:
அதனைத் தொடர்ந்து ஜூலை 925 ஆம் தேதி நகரின் தமிழகத்தில் ஒரு சில இடங்களில் மட்டுமே மழை மிதமான மழை இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது இந்த நிலையானது ஜூலை 13 205 ஆம் தேதி வரை நீடிக்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
கோவை நீலகிரி தவிர பிற மாவட்டங்களில் வெயிலின் தாக்கம் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்த நிலையில் தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை என்பது இரண்டு முதல் நான்கு டிகிரி செல்சியஸ் வரை அதிகரித்த காணப்படும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக ஒரு சில பகுதிகளில் அசௌகரியம் ஏற்படலாம் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்தவரையில் ஜூலை 7 2025 ஆம் தேதி அன்று அதிகபட்ச வெப்பநிலை என்பது 39 டிகிரி செல்சியஸ் ஒட்டி இருக்கக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை பொறுத்தவரையில் கடந்த சில தினங்களாக 100 டிகிரி பாரன்ஹீட்டை கடந்து வெப்பநிலை பதிவாகி வருகிறது.
சதமடிக்கும் வெயில்:
தமிழகத்தில் அதிகபட்சமாக மதுரையில் 39.2 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது. அதனை தொடர்ந்து நாகப்பட்டினத்தில் 38.9 டிகிரி செல்சியஸும், வேலூரில் 38.1 டிகிரி செல்சியஸும், திருச்சிராப்பள்ளியில் 38.1 டிகிரி செல்சியஸும் , தஞ்சாவூர் 38 டிகிரி செல்சியஸும் பதிவாகியுள்ளது சென்னை பொறுத்தவரையில் அதிகபட்சமாக மீனம்பாக்கத்தில் 38.6 டிகிரி செல்சியசும் நுங்கம்பாக்கத்தில் 38 டிகிரி செல்சியஸ் பதிவாகியுள்ளது கரூர் பரமத்தியில் இயல்பை விட 4 டிகிரி செல்சியஸ் அதிகரித்து வெப்பநிலை பதிவாகியுள்ளது.