திருவள்ளூரில் 5 மணி நேரத்திற்கும் மேலாக பற்றி எரியும் சரக்கு ரயில்.. மீட்பு பணிகள் தீவிரம்..
Tiruvallur Train Fire Accident: திருவள்ளூர் அருகே டீசல் ஏற்றிச் சென்ற சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. இதில் 5 பெட்டிகள் மள மளவென தீப்பற்றி எரிந்தது, சுமார் 5 மணி நேரத்திற்கும் மேலாக தீயை அனைக்கும் பணியில் தீயணைப்பு துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

திருவள்ளூர், ஜூலை 13, 2025: திருவள்ளூர் அருகே பெட்ரோலிய பொருட்களை ஏற்றிச் சென்ற சரக்கு ரயில் விபத்துக்குள்ளானது. இதில் ஐந்து பெட்டிகளில் இருந்த பெட்ரோலிய பொருட்கள் அதாவது டீசல் மள மளவென பற்றி எரிய தொடங்கியது. இதில் அப்பகுதி முழுவதுமே கரும்புகையால் சூழப்பட்டுள்ளது. 5 மணி நேரத்திற்கு மேலாக தீயணைப்பு துறையினர் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சரக்கு ரயில் மொத்தம் 18 டேங்கர்கள் இருந்ததாகவும் அதில் ஐந்து டேங்கர்கள் தீ பற்றி எரியும் நிலையில் மீதம் இருக்கக்கூடிய பெட்டிகளை அப்புறப்படுத்தும் பணியில் பொதுமக்கள் காவல்துறையினர் மற்றும் தீயணைப்பு படையினர் ஈடுபட்டுள்ளனர். சுமார் 70 ஆயிரம் லிட்டர் டீசல் உடன் 5 மணி நேரத்திற்கும் மேலாக ரயில் பெட்டிகள் எரிந்து வருகிறது. இந்த ரயில் விபத்து காரணமாக அருகில் இருக்கக்கூடிய குடியிருப்பு பகுதிகளில் இருந்து பொதுமக்கள் பத்திரமாக வேறு இடத்திற்கு மாற்றப்பட்டு வருகின்றனர்.
18 கோடி ரூபாய் மதிப்பிலான டீசலை ஏற்றிச் சென்ற சரக்கு ரயில் விபத்து:
Top angle video of #Thiruvallur train fire accident @TheFederal_News #trainaccident pic.twitter.com/QpnwiLCsWt
— Mahalingam Ponnusamy (@mahajournalist) July 13, 2025
சென்னை திருவள்ளூரை அடுத்து இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் மணலியில் இருந்து ஜோலார்பேட்டைக்கு டீசல் ஏற்றிக்கொண்டு சரக்கு ரயில் ஒன்று புறப்பட்டது. சரியாக திருவள்ளூர் ரயில் நிலையம் அருகே சென்ற போது அதிகாலை 5:20 மணிக்கு தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. இந்நிலையில் தீப்பிடித்து எறிய தொடங்கியுள்ளது. ரயிலில் டீசல் இருந்த காரணத்தால் வான் உயர தீ கொழுந்து விட்டு எறிய தொடங்கியது. அப்பகுதியில் இருக்கக்கூடிய மக்கள் இந்த தீயை உடனடியாக அணைக்க வேண்டும் என கூறி வருகின்றனர் அதிகப்படியான கரும்புகை மற்றும் தீயின் காரணமாக அருகில் இருக்கக்கூடிய மக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர்.
மேலும் படிக்க: திருவள்ளூர் சரக்கு ரயில் விபத்து எதிரொலி.. 8 ரயில்களை ரத்து செய்த தெற்கு ரயில்வே!
தொடர்ந்து 5 மணி நேரத்திற்கும் மேலாக தீயை அணைக்கும் முயற்சியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டு வருகின்றனர். ரயில் பெட்டிகளில் இருக்கக்கூடிய டீசல் தீப்பற்றி ஏறுவதால் தீயை அணைக்கும் பணி சற்று தாமதமாவதாகவும் சுமார் 50 பேரிடர் மீட்பு படை வீரர்கள் அரக்கோணத்தில் இருந்து விரைந்துள்ளதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தீப்பரவாத டேங்கர்கள் அப்புறப்படுத்தும் பணி:
இந்நிலையில் தீ பரவாத டேங்கர்கள் அங்கு இருக்கக்கூடிய அமைப்பு தீயணைப்பு படையினர் காவல் துறையினர் பொதுமக்கள் அனைவரும் பத்திரமாக அப்புறப்படுத்தி வருகின்றனர். சரக்கு ரயில் என்பதால் இந்த விபத்தில் உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ரயில் விபத்தின் காரணமாக அப்பகுதி முழுவதும் கடுமையான போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சுமார் 8 பயணிகள் ரயில் ரத்து செய்யப்பட்டுள்ளது