Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

பெண்கள், குழந்தைகளுக்கு பிரச்னையா? ஈரோட்டில் போலீஸ் அக்கா திட்டம்.. முழு விவரம் இதோ!

Erode Police Akka Scheme : ஈரோடு மாவட்டத்தில் போலீஸ் அக்கா திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. பெண்கள், மாணவிகள் மீதான பாலியல் துன்புறுத்தலை தடுக்கவும், இது தொடர்பாக விழிப்புணர்வை ஏற்படுத்தவும் காவல்துறை சார்பில் போலீஸ் அக்கா என்ற திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.  இந்த திட்டம் பெண்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

பெண்கள், குழந்தைகளுக்கு பிரச்னையா? ஈரோட்டில் போலீஸ் அக்கா திட்டம்..  முழு விவரம் இதோ!
போலீஸ் அக்கா
Umabarkavi K
Umabarkavi K | Updated On: 17 Jul 2025 20:57 PM

ஈரோடு, ஜூலை 17 : ஈரோடு மாவட்டத்தில் போலீஸ் அக்கா (Police Akka) தொடங்கப்பட்டுள்ளது. பெண்கள், மாணவிகள் மீதான பாலியல் துன்புறுத்தலை தடுக்கவும், இது தொடர்பாக விழிப்புணர்வை ஏற்படுத்தவும் காவல்துறை சார்பில் போலீஸ் அக்கா என்ற திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.  இந்த திட்டம் 2025 ஜூலை 17ஆம் தேதி தொடங்கப்பட்டுள்ளது. நாட்டில் பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் ரீதியான துன்புறுத்தல்கள் நடந்து வருகிறது.  இதனை தடுக்க மத்திய, மாநில அரசுகள் தொடர்ந்து நடந்து வருகிறது. குறிப்பாக,  தமிழக அரசு பெண்களுக்கான பாதுகாப்பை உறுதி செய்ய தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறது. பாலியல் ரீதியான துன்புறுத்தல்களையும் தடுக்க பல்வேறு சட்டங்களையும் இயற்றி வருகிறது.  மேலும், பெண்களை பாதுகாப்பாக பல்வேறு திட்டங்களையும் செயல்படுத்தி வருகிறது.

அந்த வகையில்,  மாவட்ட அளவில் போலீஸ் அக்கா என்ற திட்டம் தொடங்கப்பட்டு வருகிறது. அண்மையில் கோவை மாவட்டத்தில் போலீஸ் அக்கா திட்டம் தொடங்கப்பட்டது. இந்த நிலையில், தற்போது ஈரோடு மாவட்டத்தில் பெண்கள், மாணவிகளின் பாதுகாப்பிற்காக போலீஸ் அக்கா என்ற திட்டம் தொடங்கப்பட்டது. இந்த திட்டத்தை மாவட்ட போலீஸ் சுப்பிரண்டு சுஜாதா தொடங்கி வைத்தார்.

Also Read : கிட்னி விற்பனை மோசடி.. நாமக்கல்லில் அரங்கேறும் சம்பவம்.. அதிரவைக்கும் பின்னணி!

ஈரோட்டில் போலீஸ் அக்கா திட்டம் தொடக்கம்


இதனை தொடர்ந்து, அவர் பேசுகையில், “ஈரோடு மாவட்டத்தில் போலீஸ் அக்கா திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. பெண்கள், மாணவிகளுக்கு பாலியல் ரீதியான துன்புறுத்தல்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும், குற்றங்களை தடுப்பதற்கான நடவடிக்கையும் எடுப்பதும் இந்த திட்டத்தின் நோக்கமாகும். பள்ளி, கல்லூரிகளில் படிக்கும் மாணவிகளுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளன” என தெரிவித்தார்.

Also Read : லிவ் இன் பார்ட்னரை கொன்ற இளைஞர்.. துடிதுடித்து இறந்துபோன பெண்.. ஆந்திராவில் ஷாக்!

இந்த திட்டம் மூலம், வரும் நாட்களில் பள்ளி, கல்லூரிகளில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும் என்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜாதா தெரிவித்துள்ளார். காவல்துறையை எந்தவித தயக்கம், பயமின்றி சுலபமாக அணுகும் நோக்கத்தில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது என்று கூறினார்.