லிவ் இன் பார்ட்னரை கொன்ற இளைஞர்.. துடிதுடித்து இறந்துபோன பெண்.. ஆந்திராவில் ஷாக்!
Andhra Pradesh Crime News : ஆந்திராவில் லிவ் இன் பார்ட்னரை இளைஞர் கத்தியால் குத்திக் கொலை செய்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாலியல் தொழிலில் ஈடுபட காதலன் வற்புறுத்தியதாக தெரிகிறது. இதற்கு மறுப்பு தெரிவித்த இளம்பெண்ணை, அவரது காதலன் கொடூரமாக கத்தியால் குத்திக் கொலை செய்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.

ஆந்திரா, ஜூலை 17 : ஆந்திராவில் இளம்பெண் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. லிவ் இன் பார்ட்டனரை, இளைஞர் கத்தியால் குத்திக் கொலை செய்தது தெரியவந்துள்ளது. பாலியல் தொழிலுக்கு ஈடுபட மறுத்ததால், இளம்பெண்ணை, அவரது காதலன் கொலை செய்ததது விசாரணையில் தெரியவந்துள்ளது. ஆந்திர மாநிலம் கோனசீமா மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஓலேட்டி புஷ்பா (22). இவர் கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு தனது நெருங்கிய உறவினரை திருமணம் செய்து கொண்டார். திருமணமான சில மாதங்களிலேயே இருவருக்கு கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து, அவர் தனது கணவரிடம் இருந்து பிரிந்து வாழ்ந்து வந்துள்ளார். அதன் பிறகு, விஜயவாடாவில் கார் ஏசி மெக்கானிக்காக பணிபுரியும் ஷேக் ஷம்மா (22) என்ற இளைஞருடன் அவருக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது.
லிவ் இன் பார்ட்னரை கொன்ற இளைஞர்
இதனை அடுத்து, இருவரும் விஜயவாடாவில் உள்ள ஒரு வாடகை வீட்டில் ஒன்றாக வசித்து வந்துள்ளனர். ஷேக் ஷம்மா மது மற்றும் கஞ்சாவிற்கு அடிமையானவர். இதனால், அடிக்கடி பெண் புஷ்பாவிடம் சண்டையிட்டு வந்துள்ளார். அதோடு, பணத்திற்காக புஷ்பாவை அடித்து துன்புறுத்தி வந்துள்ளார். இந்த நிலையில், 2025 ஜூலை 16ஆம் தேதியான நேற்று இரவு 9 மணியளவில் வீட்டிற்கு வந்த ஷேக் ஷம்மா, பணம் கேட்டு புஷ்பாவை தாக்கி இருக்கிறார். மேலும், பாலியல் தொழிலில் ஈடுபடவும் வற்புறுத்தி இருக்கிறார்.
Also Read : கோகர்ணா குகையில் குழந்தைகளுடன் வசித்த ரஷ்ய பெண்; இஸ்ரேல் தொழிலதிபர் தந்தையா?
அதற்கு புஷ்பா மறுத்து தெரிவித்துள்ளார். இதனால், இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது. வாக்குவாதம் நீடித்த நிலையில், ஆத்திரத்தில் ஷேக் ஷம்மா, தான் வைத்திருந்த கத்தியால் புஷ்பாவை குத்தியுள்ளார். புஷ்பாவின் கழுத்து மற்றும் மார்பில் குத்தியுள்ளார்.
ஆந்திராவில் ஷாக்
இதனை தடுக்க வந்த புஷ்பாவின் சகோதரர் மற்றும் தாயாருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து, ஷேக் ஷம்மா அங்கிருந்து தப்பிச் சென்றிருக்கிறார். இதனை அடுத்து, அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் உடனே போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், மூன்று பேரையும் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
Also Read : கல்யாண விருந்தில் களேபரம்.. சிக்கன் 65 தராததால் ஆத்திரம்.. இளைஞர் படுகொலை!
அங்கு மருத்துவர்கள் பரிசோதனை செய்ததில், இளம்பெண் புஷ்பா உயிரிழந்துவிட்டதாக கூறியுள்ளனர். மேலும், பெண் புஷ்பாவின் தாய் மற்றும் சகோதருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து பாரதிய நியாய சன்ஹிதா (பிஎன்எஸ்) பிரிவுகள் 103 (கொலை) மற்றும் 109 (கொலை முயற்சி) ஆகியவற்றின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்படடு, இளைஞர் ஷேன்னா கைது செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.