பெற்ற மகளையே பாலியல் வன்கொடுமை செய்த கொடூர தந்தை.. அதிர்ச்சி சம்பவம்!
Father Misbehaved to His Own Daughter | உத்தர பிரதேசத்தில் 45 வயதாகும் தந்தை வீட்டில் தனியாக இருந்த தனது 16 வயது மகளை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இது குறித்து சிறுமி தனது தாயிடம் கூறிய நிலையில், தாயின் புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

லக்னோ, ஜூலை 12 : உத்தர பிரதேசத்தில் (Uttar Pradesh) 45 வயது தந்தை ஒருவர் தனது 16 வயது மகளை பாலியல் வன்கொடுமை செய்த கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வீட்டில் தனியாக இருந்த தன்னிடம் தனது தந்தை செய்த கொடூர செயலை, மகள் தனது தாயிடம் கூறிய நிலையில், தாயின் புகாரின் அடிப்படையில் அந்த நபரை கைது செய்த போலீசார் அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில், மகளை தந்தையே பாலியல் வன்கொடுமை செய்த கொடூர சம்பவம் குறித்து விரிவாக பார்க்கலாம்.
நாளுக்கு நாள் அதிகரிக்கும் பாலியக் குற்றங்கள்
இந்தியாவில் நாளுக்கு நாள் பாலியல் குற்றங்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கிறது. பச்சிளம் குழந்தைகள் முதல் மூதாட்டிகள் வரை என அனைத்து தரப்பு பெண்களும் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்படுகின்றனர். இந்தியாவை பொருத்தவரை 30 சதவீத பெண்களும் 13 சதவீத ஆண்களும் தங்களது 18 வயதிற்கு முன்பாகவே பாலியல் ரீதியாக துன்புறுத்தப்படுவதாக ஆய்வுகள் கூறுகின்றன. இவ்வாறு சிறுமிகள் முதல் மூத்த பெண்கள் வரை தினந்தோறும் ஏராளமான பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்படுவது தொடர்கதையாக உள்ளது. இந்த நிலையில், உத்தர பிரதேசத்தில் தந்தையே தனது மகளை பாலியல் வன்கொடுமை செய்த இந்த கொடூர சம்பவம் அரங்கேறி உள்ளது.
இதையும் படிங்க : கடனாக கொடுத்த ரூ.2,000 பணத்தை திருப்பி கேட்டதால் ஆத்திரம்.. இளைஞர் குத்தி படுகொலை!
பெற்ற மகளை பாலியல் வன்கொடுமை செய்த தந்தை
உத்திரபிரதேச மாநிலம் ஹத்ராஸ் மாவட்டம் சதார் கோட்வாலி கிராமத்தை சேர்ந்தவர் 45 வயதான தந்தை. இவருக்கு 16 வயதில் ஒரு மகள் உள்ளார். இந்த நிலையில் இவர் ஜூலை 9, 2025 அன்று வீட்டில் தனியாக இருந்த தனது மகளை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதனால் பயந்து போன சிறுமி, தனது தாய் வீட்டிற்கு வந்ததும் அது குறித்து அவரிடம் கூறியுள்ளார். அதனால் அதிர்ச்சியடைந்த சிறுமியின் தாய் உடனடியாக காவல் நிலையத்திற்கு சென்று தனது மகளுக்கு ஏற்பட்ட கொடூரம் குறித்து புகார் அளித்துள்ளார்.
தந்தையை கைது செய்து விசாரணை மேற்கொள்ளும் காவல்துறை
சிறுமியின் தாய் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார், பெற்ற மகளையே பாலியல் வன்கொடுமை செய்த தந்தையை கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக அவரிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட மாணவி 18 வயதிற்கு கீழ் உள்ளவர் என்பதால், இந்த விவகாரம் குறித்த மேலும் சில முக்கிய தகவல்களை போலீசார் வெளியிடாமல் உள்ளனர்.