Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

பேருந்து கட்டணம் உயர்கிறதா? போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் விளக்கம்

Bus Fare Hike : தமிழகத்தில் பேருந்து கட்டணம் உயர்த்தப்படாது என்று போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார். கடந்த சில நாட்களாக பேருந்து கட்டணம் உயர்த்தப்படுவதாக தகவல்கள் வெளியாகி வருகிறது. இது தொடர்பாக கருத்து கேட்பும் நடத்தப்பட்ட நிலையில், பேருந்து கட்டணம் உயர்த்தப்படுவதாக தகவல் வெளியான வண்ணம் இருக்கிறது.

பேருந்து கட்டணம் உயர்கிறதா? போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் விளக்கம்
அமைச்சர் சிவசங்கர்
Umabarkavi K
Umabarkavi K | Updated On: 22 Jul 2025 18:57 PM

சென்னை, ஜூலை 22 : தமிழகத்தில் பேருந்து கட்டணம் உயராது என்று போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் (Minister Sivasankar) உறுதியளித்துள்ளார். பேருந்து கட்டணம் (TNSTC Bus Fare Hike) உயர்வு என்று செய்திகள் பரவுவது வெறும் வதந்தி என்றும் அவர் விளக்கம் அளித்துள்ளார்.  தமிழகத்தில் போக்குவரத்து சேவைகளில்  முக்கியமாக இருப்பது பேருந்து சேவை. அனைத்து மாவட்டத்திற்கு எளிதாக சென்று வரக்கூடிய வகையில்  இருப்பதால் பயணிகள் பேருந்து சேவையை பெரும்பாலும் பயன்படுத்தி வருகின்றனர். தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் ஆயிரக்கணக்கான பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது.   பண்டிகை காலம்,  தொடர் விடுமுறை நாட்களில் சிறப்பு பேருந்துகளும் இயக்கப்பட்டு வருகிறது.  இந்த நிலையில், கடந்த சில நாட்களாகவே பேருந்து கட்டணம் உயர்த்தப்படுவதாக தகவல் வெளியான வண்ணம் இருந்து வருகிறது.  போக்குவரத்து துறை நஷ்டத்தில் இயங்குவதாகவும், இதனால்  அரசு பேருந்து கட்டணத்தை உயர்த்துவதாகவும் தகவல்கள் வெளியாகி  வருகிறது.

கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு பேருந்து கட்டணம்  குறித்து கருத்து கேட்கப்பட்டது. இதனை அடுத்து, பேருந்து கட்டணம் உயரப்போவதாக தகவல் வெளியான வண்ணம் இருந்தன. இதனால், மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இந்த நிலையில், இதற்கு தற்போது போக்குவரத்து துறை அமைச்சர்  சிவசங்கர்  விளக்கம் அளித்துள்ளார். அரியலூர் மாவட்டத்தில் பல்வேறு வளர்ச்சி திட்டப் பணிகளை தொடங்கி வைத்த போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, அவரிடம் பேருந்து கட்டணம் உயர்வு குறித்த கேள்வி எழுப்பப்பட்டது.

Also Read : ஆடி அமாவாசை.. ராமேஸ்வரம் போறீங்களா? போக்குவரத்து கழகம் முக்கிய அறிவிப்பு!

பேருந்து கட்டணம் உயர்கிறதா?

இதற்கு பதில் அளித்த அவர், “பேருந்து கட்டணம் உயர்வு என்று வதந்தி பரவுவது வழக்கமாக இருந்து வருகிறது. இதனை ஒவ்வொரு முறையும் மறுத்து வருகிறோம். பேருந்து கட்டணம் உயர்வு என்பது நிச்சயம் கிடையாது என்பதை தமிழ்நாடு முதல்வர் பலமுறை தெரிவித்து இருக்கிறார். எனவே, இப்போதும் அதனை உறுதிப்படுத்துகிறோம்.

Also Read : 5 நாட்களுக்கு பிச்சு உதறபோகும் கனமழை.. எந்தெந்த மாவட்டங்கள்? லேட்டஸ்ட் வானிலை அப்டேட்!

ஏழை, எளி மக்கள் மீது சமை ஏற்படக்கூடாது என்பதால் பேருந்து கட்டணம் உயர்த்தவில்லை. அதற்கான சூழல் பலமறை ஏற்பட்டபோதும், பேருந்து கட்டணத்தை ஏற்றக் கூடாது என்று அறிவுறுரையை எங்களுக்கு வழங்கி உள்ளார். இப்போதும், தெளிவாக சொல்லுகிறேன். அரசு போக்குவரத்து கழகத்தை பொறுத்தவரை பேருந்து கட்டணம் உயர்வு என்பது நிச்சயம் இருக்காது” என கூறினார். இதன் மூலம், பேருந்து கட்டணம் உயர்த்தப்படாது என்பதை அவர் தெளிவுப்படுத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.