5 நாட்களுக்கு பிச்சு உதறபோகும் கனமழை.. எந்தெந்த மாவட்டங்கள்? லேட்டஸ்ட் வானிலை அப்டேட்!
Tamil Nadu Weather Update : தமிழகத்தில் ஐந்து நாட்களுக்கு கனமழை பெய்யக் கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. கடந்த சில நாட்களாக பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. இந்த நிலையில், அடுத்த ஐந்து நாட்களுக்கும் கனமழை இருக்கும் என கூறப்பட்டுள்ளது. குறிப்பாக, தென்காசி, நீலகிரி, கோவை உள்ளிட்ட மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சென்னை, ஜூலை 22 : தமிழகத்தில் ஐந்த நாட்களுக்கு கனமழை (Tamil Nadu Rains) தொடரும் என வானிலை மையம் (IMD Tamil Nadu Weather) தெரிவித்துள்ளது. குறிப்பாக, தென்காசி, தேனி, நீலகிரி, கோவை, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்யக் கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் (Chennai Rains) ஒருசில இடங்களில் இரண்டு நாட்களுக்கு மிதமான மழை பெய்யக் கூடும் என கூறப்பட்டுள்ளது. தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் ஒரு வாரமாக மழை பெய்து வருகிறது. தென் மாவட்டங்கள், மேற்கு தொடர்ச்சி மலையொட்டிய மாவட்டங்கள், சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. மிதமான மழை பெய்து வருவதால், வெயிலின் தாக்கம் குறைந்துள்ளது. சென்னையில் கடந்த மூன்று தினங்களாகவே மேகமூட்டமாக இருக்கிறது.
வெயிலின் தாக்கமே சென்னையில் இல்லை. அவ்வப்போது மாலை மற்றும் இரவு நேரங்களில் லேசான மழை பெய்து வருகிறது. இந்த சூழலில், அடுத்த சில தினங்களுக்கான வானிலை நிலவரத்தை இந்த தொகுப்பில் பார்ப்போம். அதன்படி, வடக்கு ஆந்திரா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, 2025 ஜூலை 22ஆம் தேதி முதல் 7 நாட்களுக்கு மிதமான மழையும், கனமழையும் பெய்யக் கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.




Also Read : குறையும் மழை.. அடுத்த சில நாட்களுக்கு மிதமான மழைக்கு மட்டுமே வாய்ப்பு..
5 நாட்களுக்கு பிச்சு உதறபோகும் கனமழை
தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளுக்கான தினசரி வானிலை அறிக்கை pic.twitter.com/rYsR9yOo8K
— IMD-Tamilnadu Weather (@ChennaiRmc) July 22, 2025
2025 ஜூலை 22ஆம் தேதியான இன்று நீலகிரி, தேனி, தென்காசி மற்றும் கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலை பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை மையம் தெரிவித்துள்ளது. 2025 ஜூலை 24,25ஆம் தேதி நீலகிரி, தேனி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்கள் மற்றும் கோயம்புத்தூர் & திருநெல்வேலி மாவட்டங்களில் கனமழை பெய்யக் கூடும்.
Also Read : 6 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை.. எந்தெந்த பகுதிகளில்? எத்தனை நாட்களுக்கு ?
2025 ஜூலை 26ஆம் தேதி நீலகிரி, தேனி, தென்காசி மற்றும் கோயம்புத்தூர் மாவட்டங்களில் கனமழை பெய்யக் கூடும். 2025 ஜூலை 27ஆம் தேதி நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலை பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என கூறப்பட்டுள்ளது.
சென்னையை பொறுத்தவரை, 2025 ஜூலை 22,23ஆம் தேதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும், நகரின் ஒருசில இடங்களில் மிதமான மழை பெய்யக் கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.