குறையும் மழை.. அடுத்த சில நாட்களுக்கு மிதமான மழைக்கு மட்டுமே வாய்ப்பு..
Tamil Nadu Weather Update: 025 ஜூலை மாதம் தொடக்கத்தில் வெயிலின் தாக்கம் உச்சத்தில் இருந்தது. ஆனால் கடந்த சில நாட்களாக சென்னையில் பெய்து வரும் மழையின் காரணமாக வெப்பநிலையின் தாக்கம் கணிசமாக குறைந்துள்ளது. அதிகபட்ச வெப்ப நிலை என்பது தற்போது 32 முதல் 33 டிகிரி செல்சியஸ் வரை பதிவாகி வருகிறது.

வானிலை நிலவரம், ஜூலை 22, 2025: தமிழகத்தில் கடந்த சில நாட்களாக நல்ல மழை பதிவாகி வந்த நிலையில் மழையின் வேகம் குறைந்து காணப்படுகிறது. தமிழகத்தில் இருக்கக்கூடிய அநேக மாவட்டங்களில் லேசான முதல் மிதமான மழை மட்டுமே பெய்து வருகிறது. அந்த வகையில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கன்னியாகுமரி மாவட்டத்தில் ஐந்து சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. மேலும் தெற்கு ஒரிசா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்க சுழற்சி நிலவுகிறது. அதேபோல் தென்னிந்தியா பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்க சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக ஜூலை 22 2025 தேதியான இன்று நீலகிரி மற்றும் கோவை மாவட்டங்களில் ஒரு சில பகுதிகளில் கன மழை இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜூலை 23, 2025 தேதியான நாளை ஒரு சில இடங்களில் மிதமான மழை மட்டுமே இருக்கக்கூடும் என்றும் தரைக்காற்று 50 கிலோ மீட்டர் வேகம் வரை வீசக்கூடும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மிதமான மழைக்கு வாய்ப்பு:
ஜூலை 24 2025 முதல் ஜூலை 27 2025 வரை தமிழகத்தில் ஒரு சில மாவட்டங்களில் மிதமான மழை மட்டுமே இருக்கக்கூடும் என குறிப்பிடப்பட்டுள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்தவரையில் பகல் நேரங்களில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் ஒரு சில பகுதிகளில் மட்டும் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் கடந்த வாரம் தொடங்கி தற்போது வரை நகரில் அநேக பகுதிகளில் மாலை முதல் இரவு நேரங்களில் அவ்வப்போது லேசான முதல் மிதமான மழை பெய்து வருகிறது.
குறையும் வெப்பநிலை:
2025 ஜூலை மாதம் தொடக்கத்தில் வெயிலின் தாக்கம் உச்சத்தில் இருந்தது. அதாவது சுமார் 40 டிகிரி செல்சியஸ் வரை சென்னையில் வெப்பநிலை பதிவானது. இதனால் மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர். ஆனால் கடந்த சில நாட்களாக சென்னையில் பெய்து வரும் மழையின் காரணமாக வெப்பநிலையின் தாக்கம் கணிசமாக குறைந்துள்ளது. அதிகபட்ச வெப்ப நிலை என்பது தற்போது 32 முதல் 33 டிகிரி செல்சியஸ் வரை பதிவாகி வருகிறது.
மேலும் படிக்க: சென்னை மெட்ரோவில் வரும் புதிய மாற்றம்: ஆக. 1-ஆம் தேதி முதல் அமல்
கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்ச வெப்ப நிலை என்பது தஞ்சாவூரில் 38 டிகிரி செல்சியஸ் ஆக பதிவாகியுள்ளது. அதனைத் தொடர்ந்து திருச்சியில் 35 டிகிரி செல்சியஸை ஒட்டியும், மதுரையில் 36 டிகிரி செல்சியஸை ஒட்டியும் வெப்பநிலை பதிவாகியுள்ளது. சென்னை பொருத்தவரையில் அதிகபட்சமாக மீனம்பாக்கத்தில் 31.7 டிகிரி செல்சியசும், நுங்கம்பாக்கத்தில் 31.3 டிகிரி செல்சியசும் பதிவாகியுள்ளது. இது இயல்பை விட நான்கு முதல் ஐந்து டிகிரி செல்சியஸ் குறைவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.