Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

தமிழ்நாட்டில் இன்று தொடங்குகிறது கால்நடை படிப்புகளுக்கான கலந்தாய்வு

Tamil Nadu Veterinary Courses Counseling: தமிழ்நாட்டில் கால்நடை மருத்துவம் (BVSc & AH) மற்றும் பி.டெக் படிப்புகளுக்கான கலந்தாய்வு 2025 ஜூலை 22 அன்று தொடங்குகிறது. 7 கால்நடை மருத்துவக் கல்லூரிகளில் 660 இடங்கள் உள்ளன. தமிழக மாணவர்களுக்கு 597 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வு 2025 ஜூலை 22, 23 ஆகிய தேதிகளில் நேரடியாக நடைபெறும்.

தமிழ்நாட்டில் இன்று தொடங்குகிறது கால்நடை படிப்புகளுக்கான கலந்தாய்வு
வேப்பேரி கால்நடை மருத்துவக் கல்லூரிImage Source: x
Sivasankari Bose
Sivasankari Bose | Published: 22 Jul 2025 09:09 AM

தமிழ்நாடு ஜூலை 22: தமிழ்நாட்டில் (Tamilnadu) கால்நடை மருத்துவ மற்றும் பி.டெக் படிப்புகளுக்கான (Veterinary Medicine and B.Tech courses) கலந்தாய்வு 2025 ஜூலை 22 இன்று தொடங்குகிறது. 7 கால்நடை மருத்துவக் கல்லூரிகளில் மொத்தம் 660 பிவிஎஸ்சி – ஏஎச் இடங்கள் உள்ளன, இதில் 597 இடங்கள் தமிழ்நாட்டுக்கே ஒதுக்கப்பட்டுள்ளது. உணவு மற்றும் பால்வள தொழில்நுட்பம் உள்ளிட்ட பி.டெக் படிப்புகளுக்கும் (B.Tech courses including Dairy Technology) கலந்தாய்வு நடைபெறுகிறது. அகில இந்திய ஒதுக்கீட்டுக்கான சதவீத இடங்களும் உள்ளன. 2025 ஜூலை 14-ம் தேதி வெளியான தரவரிசை பட்டியலின் அடிப்படையில் தேர்வு நடைபெறுகிறது. சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வு 2025 ஜூலை 22, 23ல் நேரடியாக நடைபெறும்.

இன்று பட்டப் படிப்புகளுக்கான கலந்தாய்வு

தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் நிர்வகிக்கும் கால்நடை மருத்துவம் மற்றும் அதனுடன் தொடர்புடைய பட்டப் படிப்புகளுக்கான கலந்தாய்வு இன்று (ஜூலை 22) தொடங்குகிறது. இதில், பிவிஎஸ்சி-ஏஎச் (BVSc & AH) மற்றும் பி.டெக் (B.Tech) போன்ற பட்டப் படிப்புகள் சேர்க்கைக்கான கலந்தாய்வுகள் நடத்தப்படுகின்றன.

Also Read: குரூப் 2, 2ஏ தேர்வு தேதி அறிவிப்பு.. இன்று முதல் விண்ணப்பிக்கலாம்.. 

ஏழு இடங்களில் உள்ள கால்நடை மருத்துவக் கல்லூரிகள்

தற்போது, சென்னை, நாமக்கல், திருநெல்வேலி, ஒரத்தநாடு, சேலம், உடுமலைப்பேட்டை, தேனி உள்ளிட்ட ஏழு இடங்களில் கால்நடை மருத்துவக் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. இங்கு 5.5 ஆண்டுகள் கொண்ட பிவிஎஸ்சி-ஏஎச் படிப்புக்காக மொத்தம் 660 இடங்கள் உள்ளன. இதில் 420 இடங்களில் மட்டும் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கான 15% இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. தமிழக மாணவர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள இடங்கள் 597 ஆகும்.

மேலும், திருவள்ளூர் மாவட்டம் கோடுவெளியில் உள்ள உணவு மற்றும் பால்வள தொழில்நுட்பக் கல்லூரியில் பி.டெக் படிப்புகளில் உணவு தொழில்நுட்பம் (40 இடங்கள்), பால்வள தொழில்நுட்பம் (20 இடங்கள்) ஆகியவை வழங்கப்படுகின்றன. இவற்றில் 6 மற்றும் 3 இடங்கள் தேசிய ஒதுக்கீட்டுக்கே சார்ந்தவை. ஓசூர் மத்திகிரியில் உள்ள கோழி மேலாண்மை கல்லூரியில் 4 ஆண்டுகள் கொண்ட பி.டெக் (கோழி தொழில்நுட்பம்) படிப்புக்கு 40 இடங்கள் உள்ளது.

Also Read: டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு முடிவு எப்போது வெளியாகும்..? வெளியான அறிவிப்பு

மாணவர்கள் காலை 8 மணிக்கே வரவேண்டும்

இந்தப் படிப்புகளுக்கான தரவரிசை பட்டியல் ஏற்கனவே 2025 ஜூலை 14-ம் தேதி வெளியிடப்பட்டுள்ளது. இதையடுத்து, சிறப்பு பிரிவினருக்கான நேரடி கலந்தாய்வு 2025 ஜூலை 22 மற்றும் 23-ம் தேதிகளில் சென்னை வேப்பேரி கால்நடை மருத்துவக் கல்லூரியில் நேரடியாக நடைபெறும்.

இந்த கலந்தாய்வுக்கு வரும் மாணவர்கள் காலை 8 மணிக்கே கல்லூரியில் வரவேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. பொதுப்பிரிவினருக்கான பிவிஎஸ்சி – ஏஎச் கலந்தாய்வு ஆன்லைனில் www.adm.tanuvas.ac.in மற்றும் www.tanuvas.ac.in ஆகிய இணையதளங்களில் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.