Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

குரூப் 2, 2ஏ தேர்வு தேதி அறிவிப்பு.. இன்று முதல் விண்ணப்பிக்கலாம்.. முழு விவரம் இதோ!

TNPSC Group 2, 2A Exam Date : குரூப் 2, 2ஏ பணியிடங்களுக்கான தேர்வு தேதியை டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. அதன்படி, குரூப் 2, 2ஏ தேர்வு 2025 செப்டம்பர் 28ஆம் தேதி நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. குரூப் 2 மற்றும் 2ஏ தேர்வின் மூலம் 647 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

குரூப் 2, 2ஏ தேர்வு தேதி அறிவிப்பு..  இன்று முதல் விண்ணப்பிக்கலாம்..  முழு விவரம் இதோ!
குரூப் 2 தேர்வு
Umabarkavi K
Umabarkavi K | Updated On: 15 Jul 2025 12:01 PM

சென்னை, ஜூலை 15 :  குரூப் 2, 2ஏ பணியிடங்களுக்கான (Group 2, 2A Exam) தேர்வு தேதியை டிஎன்பிஎஸ்சி (TNPSC) அறிவித்துள்ளது. அதன்படி, குரூப் 2, 2ஏ தேர்வு 2025 செப்டம்பர் 28ஆம் தேதி நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. குரூப் 2 மற்றும் 2ஏ பணியிடங்களுக்கு மொத்தம் 646 பணியிடங்கள் காலியாக உள்ளது. இதில், குரூப் 2 பணியிடங்களுக்கு 50 மற்றும் குரூப் 2 ஏ பணியிடங்களுக்கு 595 இடங்கள் நிரப்பப்பட உள்ளது. இந்த பணியிடங்களுக்கு தான் 2025 செப்டம்பர் 28ஆம் தேதி தேர்வு நடைபெற உள்ளதாக டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. தமிழக அரசு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்பப்பட்டு வருகிறது. தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் எனும் டிஎன்பிஎஸ்சி அரசு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பி வருகிறது. இதற்காக ஆண்டுதோறும் குரூப் வாரியாக தேர்வு நடத்தி வருகிறது. இந்த தேர்வை லட்சக்கணக்கானோர் எழுதி வருகின்றனர்.

அண்மையில் தான், குரூப் 4 தேர்வு நடந்து முடிந்தது. இந்த நிலையில், அடுத்ததாக,  குரூப் 2, 2ஏ பணியிடங்களுக்கான தேர்வு தேதியை டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. அதன்படி, குரூப் 2, 2ஏ தேர்வு 2025 செப்டம்பர் 28ஆம் தேதி நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சார் பதிவாளர், இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர், வனவர், முதுநிலை வருவாய் ஆய்வாளர், உதவியாளர் உள்ளிட்ட பல்வேறு பதவிகளுக்கு 645 காலிப் பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. குரூப் 2 பணியிடங்களுக்கு 50 மற்றும் குரூப் 2 ஏ பணியிடங்களுக்கு 595 இடங்கள் நிரப்பப்பட உள்ளது.

Also Read : சென்னை பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வுகள் ஒத்திவைப்பு.. காரணம் என்ன?

குரூப் 2, 2ஏ தேர்வு தேதி அறிவிப்பு

குரூப் 2, 2ஏ தேர்வுக்கு 2025 ஜூலை 15ஆம் தேதியான இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.  இந்த தேர்வுக்கு https://www.tnpsc.gov.in/ என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 2025 ஆகஸ்ட் 20ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Also Read : பொறியியல் படிப்பில் சேர விரும்புவோர்களுக்கு முக்கிய அறிவிப்பு – ஜூன் 6 இறுதி நாள்

விண்ணப்பத்தில் 2025 ஆகஸ்ட் 18ஆம் தேதி 20ஆம் தேதி வரை மூன்று நாட்கள் தேர்வர்கள் திருத்தம் மேற்கொள்ளலாம். தேர்வர்கள் தேர்வாணைய இணையதளத்தில் உள்ள ஒருமுறைப் பதிவு தளத்தில் ஒடிஆர் பதிவு செய்த பின்பு இத்தேர்விற்கான விண்ணப்பித்தினை நிரப்ப வேண்டும். தேர்வர்கள் ஏற்கனவே ஒருமுறைப் பதிவில் பதிவு செய்தபின், தேர்வர்கள் இணையவழி விண்ணப்பத்தை நேரடியாக பூர்த்தி செய்யலாம் என்பது குறிப்பிடத்தக்கது.