Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Tamilnadu TRB Recruitment 2025: தமிழகத்தில் 1,915 முதுகலை ஆசிரியர் பணியிடங்கள்: வெளியான அறிவிப்பு..

TN TRB Recruitment 2025: தமிழ்நாட்டில் 1996க்கும் மேற்பட்ட முதுகலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை ஆசிரியர் தேர்வு வாரியம் (TRB) வெளியிட்டுள்ளது. ஜூலை 10, 2025 அன்று வெளியிடப்பட்ட அறிவிக்கையில், பாட வாரியான காலிப் பணியிடங்கள், கல்வித் தகுதி, வயது வரம்பு, விண்ணப்பிக்கும் முறை உள்ளிட்ட முழுமையான விவரங்கள் இடம்பெற்றுள்ளன.

Tamilnadu TRB Recruitment 2025: தமிழகத்தில் 1,915 முதுகலை ஆசிரியர் பணியிடங்கள்: வெளியான அறிவிப்பு..
முதுகலை ஆசிரியர் தேர்வுImage Source: social media
Sivasankari Bose
Sivasankari Bose | Published: 10 Jul 2025 12:53 PM

தமிழ்நாடு ஜூலை 10: தமிழகத்தில் (Tamilnadu) காலியாக உள்ள 1,996 முதுகலை பட்டதாரி ஆசிரியர் (Postgraduate teacher)  பணியிடங்களை நிரப்புவதற்காக விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக ஆசிரியர் தேர்வு வாரியம் (TRB) அறிவித்துள்ளது. இதுகுறித்து TRB வெளியிட்டுள்ள அறிக்கையில், முதுகலை ஆசிரியர், உடற்கல்வி இயக்குநர் நிலை-1 மற்றும் கணினி பயிற்றுநர் நிலை-1 ஆகிய பணியிடங்களுக்கான அறிவிக்கை எண் 02/2025 இன்று (10.07.2025) ஆசிரியர் தேர்வு வாரியத்தின் இணையதளம் (www.trb.tn.gov.in) மூலம் வெளியிடப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. பாடவாரியான காலிப்பணியிடங்கள், கல்வித் தகுதி, வயது வரம்பு, விண்ணப்பிக்கும் முறைகள் உள்ளிட்ட முழுமையான விவரங்கள் அந்த அறிவிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளன. தகுதியுடையவர்கள் அறிவிக்கையை கவனமாக படித்து, விருப்பமான பதவிக்கு இணையவழியாக விண்ணப்பிக்கலாம்.

அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள 1,915 முதுகலை ஆசிரியர் பணியிடம்

தமிழக அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள 1,915 முதுகலை ஆசிரியர் (PG Teacher) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு எதிர்வரும் ஆகஸ்ட் மாதத்துக்குள் விண்ணப்பிக்க அறிவிக்கபப்ட்டுள்ளது. இந்த நியமனங்களுக்கான தேர்வு நவம்பர் மாதம் நடைபெறும் என்றும் ஆசிரியர் தேர்வு வாரியம் (TRB) தனது வருடாந்திர திட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது. அரசு மேல்நிலைப் பள்ளிகளில் ஆசிரியராகப் பணியாற்ற ஆர்வமுள்ள தகுதியான முதுகலைப் பட்டதாரிகளுக்கு இது ஒரு முக்கிய வாய்ப்பாகும்.

Also Read: அதிமுக ஆட்சியில் கோவில் நிதியிலிருந்து கல்வி நிலையங்களுக்கு செலவிட்டதற்கான ஆதாரம் உள்ளது – அமைச்சர் சேகர் பாபு..

நியமன விவரங்கள் மற்றும் தேர்வு அட்டவணை

தமிழக பள்ளிக்கல்வித் துறை, அரசு மேல்நிலைப் பள்ளிகளில் பல்வேறு பாடப்பிரிவுகளில் உள்ள ஆசிரியர் பற்றாக்குறையைப் பூர்த்தி செய்யும் நோக்கில் இந்தப் பணியிடங்களை நிரப்புகிறது. இது மாணவர்களுக்குச் சிறந்த கல்வியை வழங்குவதற்கும், கற்றல் சூழலை மேம்படுத்துவதற்கும் உதவும்.

  • காலிப் பணியிடங்கள்: சுமார் 1,915 முதுகலை ஆசிரியர் பணியிடங்கள்.
  • அறிவிப்பு வெளியீடு: 10 ஜூலை 2025.
  • தேர்வு நடைபெறும் மாதம்: நவம்பர் 2025.
  • தேர்வு வாரியம்: ஆசிரியர் தேர்வு வாரியம் (TRB) இந்த ஆட்சேர்ப்புப் பணிகளை மேற்கொள்ளும்.

தேர்வு முறை மற்றும் விண்ணப்பிக்கும் வழிமுறைகள்

  • முதுகலை ஆசிரியர் நியமனங்கள், போட்டித் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் நடைபெறும். விண்ணப்பதாரர்கள் தேர்வு வாரியத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
  • மேலும், விண்ணப்பதாரர்கள் இணையதளம் வாயிலாக (Online Application) விண்ணப்பிக்க 2025 ஜூலை 10 முதல் ஆகஸ்ட் 12ஆம் தேதி பிற்பகல் 5.00 மணி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
  • எனவே, விண்ணப்பதாரர்கள் இணையதளத்தில் விண்ணப்பிப்பதற்குமுன் தங்களின் விவரங்களை முழுமையாக சரிபார்த்த பின்னரே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
  • அறிவிக்கையை தொடர்பாக ஏதேனும் கோரிக்கைகள் உள்ளவர்களுக்கு, அதனை trbgrievances@tngov.in என்ற மின்னஞ்சல் முகவரி வாயிலாக மட்டும் அனுப்ப வேண்டும்.
  • இதர எந்தவொரு வழியிலும் அனுப்பப்படும் கோரிக்கைகள் பரிசீலிக்கப்படமாட்டாது என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.