Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

குரூப் 4 வினாத்தாள் கசிவா? உண்மை என்ன? டிஎன்பிஎன்சி தலைவர் பரபரப்பு விளக்கம்

Tnpsc Group 4 Exam : 2025 ஜூலை 12ஆம் தேதியான நாளை நடைபெற உள்ள குரூப் 4 வினாத் தாள் கசியவில்லை என டிஎன்பிஎஸ்சி தலைவர் பிரபாகர் விளக்கம் அளித்துள்ளார். மதுரையில் தனியார் பேருந்தில் குரூப் 4 வினாத்தாள் அனுப்பி வைக்கப்பட்டதோடு, ஏ4 சீட் மூலம் சீல் வைத்து அனுப்பப்பட்டது பேசும் பொருளாக மாறியது. இதனை அடுத்து, டிஎன்பிஎஸ்சி தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

குரூப் 4 வினாத்தாள் கசிவா? உண்மை என்ன? டிஎன்பிஎன்சி தலைவர் பரபரப்பு விளக்கம்
டிஎன்பிஎஸ்சி
Umabarkavi K
Umabarkavi K | Updated On: 11 Jul 2025 17:39 PM

சென்னை, ஜூலை 11 : குரூப் 4  (TNPSC Group 4 Exam) வினாத்தாள் கசியவில்லை என டிஎன்பிஎஸ்சி தலைவர் பிராபகர் (TNPSC Chief Prabhakar) விளக்கம் அளித்துள்ளார். மதுரையில் தனியார் பேருந்தில் குரூப் 4 வினாத்தாள் அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், அதுகுறித்து விளக்கம் அளித்துள்ளார். தமிழக அரசு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் எனும் டிஎன்பிஎஸ்சி நிரப்பி வருகிறது. இதற்காக ஆண்டுதோறும் குரூப் வாரியாக தேர்வுகளும் நடத்தப்பட்டு வருகிறது. விஏஓ முதல் துணை ஆட்சியர் வரை பல்வேறு தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில், 2025 ஜூலை 12ஆம் தேதியான நாளை தமிழகம் முழுவதும் குரூப் 4 தேர்வு நடைபெற உள்ளது. காலை 9.30 மணி முதல் மதியம் 12.30 மணி வரை குரூப் 4 தேர்வு நடைபெற உள்ளது.

தேர்வு 2025 ஜூலை 11ஆம் தேதியான நாளை நடைபெற உள்ள நிலையில், அதற்கான வினாத்தாள்கள் தேர்வு மையங்களுக்கு அனுப்பும் பணியும் நடைபெற்று வருகிறது. மாவட்ட வாரியாக உள்ள தேர்வு மையங்களுக்கு வினாத்தாள்கள் அனுப்பும் காலை முதலே நடந்து வருகிறது. அந்த வகையில், மதுரை மாவட்டத்தில் ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து வினாத்தாள்கள் அனுப்பி வைக்கும் பணி நடந்தது. வழக்கமாக வினத்தாள்கள் கண்டெய்னர் லாரிகளில் சீலிடப்பட்டு பாதுகாப்பாக எடுத்துச் செல்லப்படும்.

Also Read : தமிழகத்தில் பள்ளி செல்லாத குழந்தைகள் கணக்கெடுப்பு எப்போது தொடக்கம்?

குரூப் 4 வினாத்தாள் கசிவா?

ஆனால், 2025 ஜூலை 11ஆம் தேதியான இன்று மதுரை ஆட்சியர் அலுவலக கருவூலத்தில் இருந்து தனியார் பேருந்து மூலம் வினாத்தாள் எடுத்துச் செல்லப்பட்டது. மேலும், பேருந்தின் கதவில் ஏ4 சீட் மூலம் சீல் வைத்து அனுப்பப்பட்டது. இது பெரும் சர்ச்சையாக வெடித்தது. வினாத்தாள் கசிய அதிக வாய்ப்புகள் இருப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.

இந்த நிலையில், இதுகுறித்து டிஎன்எபிஎஸ்சி தலைவர் பிரபாகர் விளக்கம் அளித்துள்ளார். அதவாது, டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கான வினாத்தாள் கசியவில்லை என்றும் தேர்வர்கள் அச்சப்பட தேவையில்லை என்றும் அவர் விளக்கம் அளித்தார். மேலும், தனியார் பேருந்தில் வினாத்தாள் அனுப்பி வைக்கப்பட்டதற்காக காரணமும் கோரப்பட்டுள்ளதாக டிஎன்எபிஎஸ்சி தலைவர் பிரபாகர் தெரிவித்துள்ளார்.

Also Read : பொறியியல் கலந்தாய்வு 2025: தரவரிசைப் பட்டியல் வெளியீடு – கலந்தாய்வு தேதிகள் அறிவிப்பு!

நாளை குரூப் 4 தேர்வு

தமிழ்நாடு முழுவதும் 2025 ஜூலை 12ஆம் தேதியான நாளை குரூப் 4 தேர்வு நடைபெற உள்ளது. காலை 9.30 மணி முதல் மதியம் 12.30 மணி வரை நடைபெற உள்ளது. இந்த தேர்வுக்கு லட்சக்கணக்கானோர் விண்ணப்பித்துள்ளனர். இந்த தேர்வு மூலம் 3,935 காலிப் பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. அதன்படி, விஏஓ 215 இடங்களும், தட்டச்சர் 1,100, எழுத்தர் 2 இடங்களும், உதவியாளர் 54 இடங்களும், கள உதவியாளர் 19 இடங்களும், வனக் காவலர் 62 இடங்களும் என மொத்தம் 3,935 காலிப் பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. குரூப் 4 தேர்வில் மொத்தம் 200 கேள்விகள் கேட்கப்படும். அதாவது, தமிழ் தகுதி மற்றும் மதிப்பீட்டுத் தேர்வுக்கு 100, பொது அறிவு 75, திறனறிவும் தேர்வுக்கு 25 மதிப்பெண்கள் மொத்தம் 200க்கு தேர்வு நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.