Tamil Nadu B.Ed. Admission: தமிழ்நாடு பி.எட். மாணவர் சேர்க்கை விண்ணப்பத் தேதி நீட்டிப்பு… எப்படி விண்ணப்பிப்பது?
Tamil Nadu B.Ed. Admission Deadline Extended: பி.எட். மாணவர் சேர்க்கைக்கான இணைய விண்ணப்ப தேதி 2025 ஜூலை 21 வரை நீட்டிக்கப்பட்டது. தரவரிசைப் பட்டியல் 2025 ஜூலை 31ல் வெளியாகி, 2025 ஆகஸ்ட் 20 முதல் வகுப்புகள் தொடங்கும். விருப்பக் கல்லூரி தேர்வு 2025 ஆகஸ்ட் 4 முதல் 9 வரை நடைபெறும் என உயர் கல்வித்துறை அமைச்சர் செழியன் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு ஜூலை 10: தமிழ்நாடு (Tamil Nadu) அரசு மற்றும் அரசு உதவிபெறும் கல்வியியல் கல்லூரிகளில் 2025-26ஆம் கல்வியாண்டுக்கான பி.எட். மாணவர் சேர்க்கை (B.Ed. Student Admission) இணையதள விண்ணப்பம் 2025 ஜூலை 21 வரை நீட்டிக்கப்பட்டது. முதலில் 2025 ஜூன் 20ல் விண்ணப்பம் தொடங்கப்பட்டது, மேலும் 2025 ஜூலை 9 அன்று முடிவடையந்தது. மாணவர் நலனை கருத்தில் கொண்டு உயர்கல்வித் துறை இந்த முடிவை எடுத்துள்ளது. தரவரிசை பட்டியல் 2025 ஜூலை 31ல் வெளியாகும். 2025 ஆகஸ்ட் 4 முதல் 9 வரை விருப்பக் கல்லூரி தேர்வு செய்யலாம். 2025 ஆகஸ்ட் 20 முதல் வகுப்புகள் தொடங்கும் என உயர் கல்வித்துறை அமைச்சர் செழியன் (Higher Education Minister Chezhiyan) தெரிவித்துள்ளார்.
2025-26ஆம் கல்வியாண்டிற்கான பி.எட். மாணவர் சேர்க்கை
அரசு மற்றும் அரசு உதவிபெறும் கல்வியியல் கல்லூரிகளில் 2025-26ஆம் கல்வியாண்டிற்கான பி.எட். மாணவர் சேர்க்கைக்கான இணையதள விண்ணப்பப் பதிவு 2025 ஜூலை 21ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக தமிழக உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி. செழியன் தெரிவித்துள்ளார்.
விண்ணப்ப தேதி 2025 ஜூலை 21 வரை நீட்டிப்பு
இதுகுறித்து அவர் தெரிவித்ததாவது, கடந்த 2025 ஜூன் 20ஆம் தேதி, சென்னை ராணி மேரி கல்லூரியில் பி.எட். மற்றும் அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் முதுநிலைப் பாடப்பிரிவுகளுக்கான மாணவர் சேர்க்கை இணையதளத்தில் தொடங்கப்பட்டது. இந்நிலையில், இந்த விண்ணப்பிக்கும் கால அவகாசம் மூலமாக (2025 ஜூலை 9) முடிவடைவதாக இருந்த நிலையில், மாணவர்கள் நலனைக் கருத்தில் கொண்டு விண்ணப்ப தேதி 2025 ஜூலை 21 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.




Also Read: கடலூரில் பள்ளி வேன்–ரயில் மோதல்: ரயில்வே நிர்வாகம் அதிரடி உத்தரவு
பி.எட். மாணவர் சேர்க்கை: எப்படி விண்ணப்பிப்பது?
www.tngasa.in என்ற இணையதளத்தில் விண்ணப்ப பதிவு செய்யலாம். மேலும், 2025 ஜூலை 31 அன்று தரவரிசைப் பட்டியல் வெளியிடப்படும். 2025 ஆகஸ்ட் 4 முதல் 9ஆம் தேதி வரை மாணவர்கள் விருப்பக் கல்லூரியைத் தேர்வு செய்ய முடியும்.
2025 ஆகஸ்ட் 13ஆம் தேதி இடஒதுக்கீட்டு ஆணை வெளியிடப்பட்டு, அதை www.iwiase.ac.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து மாணவர்கள் சேர்க்கையை உறுதிப்படுத்தலாம். பி.எட். வகுப்புகள் 2025 ஆகஸ்ட் 20ஆம் தேதி முதல் தொடங்கும் என உயர் கல்வித்துறை அமைச்சர் செழியன் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் உள்ள சில பி.எட். கல்லூரிகள்
பி.எட். (B.Ed. – Bachelor of Education) என்பது ஆசிரியர் தொழிலுக்கு தேவையான ஒரு பட்டப்படிப்பு ஆகும். தமிழ்நாட்டில் பல்வேறு வகையான பி.எட். கல்லூரிகள் உள்ளன. அவை அரசு கல்வியியல் கல்லூரிகள், அரசு உதவிபெறும் கல்வியியல் கல்லூரிகள் மற்றும் தனியார் கல்வியியல் கல்லூரிகள் என மூன்று பிரிவுகளாகப் பிரிக்கப்படுகின்றன.
தமிழ்நாட்டில் செயல்படும் முக்கியமான அரசு பி.எட். கல்லூரிகளில் சென்னை அரசு கல்வியியல் கல்லூரி, ராணி மேரி கல்வியியல் கல்லூரி (சென்னை), கோயம்புத்தூர், திருச்சி, மதுரை, மற்றும் திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் உள்ள கல்வியியல் கல்லூரிகள் அடங்கும்.
இக்கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை ஆண்டுதோறும் ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் இணையதளம் www.tngasa.in மூலமாக நடைபெறுகிறது. மாணவர்களின் பாடப்பிரிவில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் தரவரிசைப் பட்டியல் தயாரிக்கப்படுகிறது. அதனைத் தொடர்ந்து கலந்தாய்வு மூலம் விருப்பக் கல்லூரி தேர்வு செய்ய முடியும்.