வாகன ஓட்டிகளே அலர்ட்… சென்னையின் முக்கிய சாலையில் போக்குவரத்து மாற்றம்!
Chennai Traffic Diversion In Rajiv Gandhi Salai : சென்னையில் ராஜீவ் காந்தி சாலையில் பீக் ஹவரில் போக்குவரத்து நெரிசலை குறைக்க போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த போக்குவரத்து மாற்றம் 2025 ஆகஸ்ட் 1ஆம் தேதி முதல் அமலாக உள்ளது. இதன் மூலம் காலை நேரங்களில் போக்குவரத்து நெரிசல் குறையக் கூடும்.

சென்னை, ஜூலை 31 : சென்னையில் 2025 ஆகஸ்ட் 1ஆம் தேதி முதல் முக்கிய சாலையில் போக்குவரத்து மாற்றம் (Chennai Traffic Diversion) செய்யப்பட்டுள்ளது. போக்குவரத்து நெரிசலை குறைக்க, மாநகர போக்குவரத்து காவல்துறை இந்த நடவடிக்கை எடுத்துள்ளது. அதாவது, ராஜீவ் காந்தி சாலையில் (Rajiv Gandhi Salai) இந்த போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. சென்னையில் போக்குவரத்து நெரிசல் என்பது பெரும் பிரச்னையாக உள்ளது. குறிப்பாக, காலை மற்றும் மாலை நேரங்களில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக உள்ளது. பீக் ஹவரில் வாகனங்கள் ஊர்ந்து செல்கின்றனர். அதிலும் தற்போது மெட்ரோ பணிகள், மேம்பால கட்டுமான பணிகள், சாலை விரிவாக்க பணிகள் ஆங்காங்கே நடைபெறுகிறது. இதனால் போக்குவரத்து நெரிசல் அதிகமாகவே உள்ளது.
போக்குவரத்து நெரிசலை குறைக்க போக்குவரத்து காவல்துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இருப்பினும் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்தை எதிர்கொண்டு வருகின்றனர். இந்த சூழலில், முக்கிய சாலையில் 2025 ஆகஸ்ட் 1ஆம் தேதி முதல் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ராஜீவ் காந்தி சாலையில் காலை நேரங்களில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருக்கிறது. இதனால், 2025 ஆகஸ்ட் 1ஆம் தேதி முதல் காலை 8.30 மணி முதல் நண்பகல் 11 மணி வரை மட்டும் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுவதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
Also Read : பயணிகளே அலர்ட்.. மெட்ரோ ரயிலில் இதை செய்தால் அபராதம்.. கடும் எச்சரிக்கை!




சென்னையின் முக்கிய சாலையில் போக்குவரத்து மாற்றம்
அதன்படி, மத்திய கைலாஷ் சந்திப்பிலிருந்து டைடல் பார்க் சந்திப்பு வரையிலான பாலம் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருவதால், தற்போதுள்ள சாலை அகலம் குறைக்கப்பட்டுள்ளதாக மாநகர போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது. இதனால், காலை நேரங்களில் ராஜீவ் காந்தி சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
தற்போது உள்ள போக்குவரத்து பாதைக்கு கூடுதலாக, மத்திய கைலாஷ் சந்திப்பிலிருந்து டைடல் பூங்கா நோக்கி வரும் வாகனங்கள், எதிர் பாதையில் (டைடல் பூங்காவிலிருந்து மத்திய கைலாஷ் வரை) பயன்படுத்த அனுமதிக்கப்படும். ஒரு பாதையைப் பயன்படுத்தி வாகனங்கள் விஎச்எஸ் மருத்துவமனை அருகே உள்ள யு-டர்ன் வரை 300 மீட்டர் தூரம் செல்ல அனுமதிக்கப்படும் என போக்குவரத்து காவல்துறை அறிவித்துள்ளது.
Also Read : ஆடிப்பெருக்கு, வார இறுதி நாட்கள்.. 1,090 சிறப்பு பேருந்துகள் இயக்கம்..
முன்னதாக, 2025 ஜூலை 29ஆம் தேதியான நேற்று முதல் பல்லாவரம்-தொரைப்பாக்கம் ரேடியல் சாலையில் அமைந்துள்ள சுண்ணாம்பு கொளத்தூர் சந்திப்பில் போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. இந்த சாலையில் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதன்படி, அம்பேத்கர் சாலை மற்றும் விநாயகபுரம் பிரதான சாலை போக்குவரத்து சந்திப்புகள் உள்ளிட்ட இரண்டு சந்திப்புகளில் போக்குவரத்து சிக்னல்களை அகற்றி போக்குவரத்து மாற்றங்களைச் செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.