Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

கிட்னி விற்பனை மோசடி.. மருத்துவமனைக்கு தமிழக அரசு கடும் எச்சரிக்கை!

Namakkal Kidney Sale : நாமக்கல் மாவட்டத்தில் கிட்னி விற்பனை மோசடி நடைபெறுவது மாநிலத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. வணிக ரீதியலான கிட்னி தானம் செய்வது சட்டப்படி குற்றமாகும் என்றும் சிறுநீரக உறுப்பு தானம் முறைகேடுகளில் ஈடுபடும் மருத்துவமனைகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

கிட்னி விற்பனை மோசடி.. மருத்துவமனைக்கு தமிழக அரசு கடும் எச்சரிக்கை!
நாமக்கல் கிட்னி விற்பனை மோசடி
Umabarkavi K
Umabarkavi K | Updated On: 27 Jul 2025 07:56 AM

சென்னை, ஜூலை 27 : சிறுநீரக உறுப்பு தானம் முறைகேடுகளில் (Namakkal Kidney Sale Case) ஈடுபடும் மருத்துவமனைகள், மருத்துவர்கள், இடைத்தரகர்ள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. நாமக்கல்லில் நடைபெற்ற கிட்னி விற்பனை மாநிலத்தையே உலுக்கிய நிலையில், தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. ஏற்கனவே, இது தொடர்பான இரண்டு மருத்துவமனைகளின் உரிமைத்தையும் ரத்து செய்திருந்தது. நாமக்கல் மாவட்டத்தில் விசைக்தறி தொழிலாளர்கள் குறிவைத்து கிட்னி விற்பனை நடந்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. நாமக்கல்லைச் சேர்ந்த பெண் ஒருவர் ரூ.5 லட்சத்திற்கு கிட்சி விற்றதாக பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வெளியானதை அடுத்து, இந்த விவகாரம் வெளிச்சத்திற்கு வந்தது. அதாவது, திருச்செங்கோடு, பள்ளிபாளையம், குமாரபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் கிட்சி விற்பனை மோசடி நடந்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

கிட்னி விற்பனை மோசடி

வறுமையில் இருக்கும் விசைத்தறி உரிமையாளர்களை குறிவைத்து இந்த கிட்சி விற்பனை மோசடி நடந்து வருகிறது. இதில் குறிப்பாக ரூ.5 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை பணம் தருவதாக சொல்லப்படுகிறது. தனியார் மருத்துவமனைக்கு இடைத்தரகர்கள் அழைத்து சென்று, கிட்னி விற்பனை மோசடியில் ஈடுபடுவது தெரியவந்துள்ளது. கிட்னி விற்பனைக்கு ஒப்புக் கொள்பவர்களுக்கு முன்பணம்க ரூ.1 லட்சம் வழங்கப்படுவதாக கூறப்படுகிறது. அதோடு, சிலரிடம் முன்பணம் கொடுத்துவிட்டு, மீதமுள்ள பணத்தை கொடுக்காமல் இடைத்தரகர்கள் மோசடியில் ஈடுபடுவது தெரியவந்துள்ளது.

இந்த விவகாரம் தமிழகத்தையே உலுக்கியது. கிட்னி விற்பனை மோசடிக்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனத்தை தெரிவித்தனர். இந்த விவகாரம் சுகாதாரத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். அதோடு, இரண்டு மருத்துவமனைகளில் உரிமைத்தை ரத்து செய்தனர்.

Also Read : மாணவிக்கு கத்திக்குத்து.. தந்தை கண்முன்னே இளைஞர் செய்த கொடூரம்.. அதிர்ந்த ராணிப்பேட்டை!

மருத்துவமனைக்கு தமிழக அரசு கடும் எச்சரிக்கை

பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை மற்றும் திருச்சியில் உள்ள செத்தார் மருத்துவமனை ஆகியவற்றின் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை உரிமத்தை மருத்துவ மற்றும் கிராமப்புற சுகாதார சேவைகள் இயக்குநரகம் ரத்து செய்தது.

Also Read : திருவள்ளூர் சிறுமி வன்கொடுமை: முக்கிய குற்றவாளி அதிர்ச்சி வாக்குமூலம்..!

இந்த நிலையில், மருத்துவ மற்றும் ஊரக நலப் பணிகள் இயக்கம் மருத்துவமனைக்கு முக்கிய எச்சரிக்கை விடுத்துள்ளது. அதாவது, வணிக ரீதியலான கிட்னி தானம் செய்வது சட்டப்படி குற்றமாகும் என்றும் சிறுநீரக உறுப்பு தானம் முறைகேடுகளில் ஈடுபடும் மருத்துவமனைகள், மருத்துவர்கள், இடைத்தரகர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும், சிறுநீரக உறுப்பு தானம் செய்வது குறித்து இடைத்தரகர்களை நம்பி ஏமாற வேண்டாம் என பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.