Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Euthanasia Stray Dogs : நோய் பாதித்த தெரு நாய்கள்.. கருணைக் கொலை செய்ய தமிழக அரசு அனுமதி!

Tamil Nadu Goverment Allows To Euthanasia Stray Dogs : தமிழகத்தில் தெரு நாய்களால் மக்கள் கடுமையாக பாதிப்பை எதிர்கொண்டு வருகின்றனர். தெருநாய் கடியால் 2025ஆம் ஆண்டில் மட்டும் 18 உயிரிழந்துள்ளதாக தெரிகிறது. இந்த நிலையில், நோய் பாதித்த தெருநாய்களை கருணைக் கொலை செய்ய தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. அண்மையில், கேரள அரசு நோய் பாதித்த தெருநாய்களை கருணைக் கொலை செய்ய முடிவு எடுத்தது.

Euthanasia Stray Dogs : நோய் பாதித்த தெரு நாய்கள்.. கருணைக் கொலை செய்ய தமிழக அரசு அனுமதி!
தெருநாய்கள்
Umabarkavi K
Umabarkavi K | Updated On: 27 Jul 2025 10:44 AM

சென்னை, ஜூலை 27 : நோய்வாய்ப்பட்டு சுற்றித் திரியும் தெரு நாய்களை (Stray Dogs) கருணைக் கொலை (Euthanasia) செய்ய தமிழ்நாடு அரசு (Tamil Nadu Goverment) அனுமதி அளித்துள்ளது. பதிவு செய்யப்பட்ட கால்நடை மருத்துவர்கள் மூலம் கருணைக் கொலை செய்யப்பட வேண்டும் என தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. தெரு நாய்களால் ரேபிஸ் உள்ளிட்ட நோய் பாதிப்புகள் ஏற்படும் நிலையில் தமிழக அரசின் கால்நடை துறை, இந்த நடவடிக்கை எடுத்துள்ளது. கருணை கொலை செய்யப்படும் தெரு நாய்கள் முறையாக அடக்கம் செய்யப்பட வேண்டும் எனவும் அந்த அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் தெரு நாய்களில் மக்கள் கடும் பாதிப்பை சந்தித்து வருகின்றனர். குறிப்பாக, தெரு நாய்கள் மக்களை கடிக்கும் சம்பவங்களும் அரங்கேறி வருகிறது.

இதனால், ரேபிஸ் நோயால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை உயிரிழந்து வருகின்றனர். இந்தப் பிரச்சினையைக் கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் கடும் நடவடிக்கை எடுத்து வருகிறது. இருப்பினும், தெரு நாய் கடியால் மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அண்மையில் கூட, மக்களவை இதுபோன்ற ஒரு ரிப்போர்ட் ஒன்றும் வெளியானது. அதாவது, இந்தியாவில் 2024 ஆம் ஆண்டில் 37 லட்சத்திற்கும் அதிகமானோர் நாய் கடியால் பாதிக்கப்பட்டதாகவும், 54 பேர் ரேபிஸ் நோயால் உயிரிழந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.

Also Read : திருவள்ளூர் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு.. வெளியான குற்றவாளியின் பெயர்..!

நோய் பாதித்த தெருநாய்களை கருணைக் கொலை செய்ய அனுமதி

இதில், குறிப்பாக தமிழகத்தில் 2025ஆம் ஆண்டு முதல் மூன்று மாதங்களில் 1.24 லட்சம் பேர் நாய் கடியால் பாதிக்கப்பட்டுள்ளனர். நான்கு பேர் ரேபிஸ் நோயால் உயிரிழந்துள்ளனர். 2023ஆம் ஆண்டில் தமிழகத்தில் ரேபிஸ் நோயால் 18 உயிரிழந்த நிலையில், 2024ஆம் ஆண்டில் 43 ஆக உயர்ந்துள்ளது. 2025ஆம் ஆண்டில் நடுப்பகுதியில் ரேபிஸ் நோயால் 18 உயிரிழந்தனர்.

இப்படியாக தெரு நாய்களால் மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதனால், நாய்களுக்கு கருத்தடை செய்யவும் பரிந்துரைக்கப்பட்டு வருகிறது. அந்த நடவடிக்கையில் அரசும் ஈடுபட்டு வருகிறது.  மேலும், கால்நடை மருத்துவர்களும்  தெரு நாய்கள் மக்கள் பாதிக்காத வண்ணல் பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகின்றனர். மேலும், தமிழக அரசுக்கு ஆலோசனையும் வழங்கி வருகிறது.

Also Read : மாணவிக்கு கத்திக்குத்து.. தந்தை கண்முன்னே இளைஞர் செய்த கொடூரம்.. அதிர்ந்த ராணிப்பேட்டை!

இதற்கிடையில், நோய்வாய்ப்பட்ட தெரு நாய்களை கருணைக் கொலை செய்ய வேண்டும் என தமிழ்நாடு விலங்குகள் நல வாரிய அதிகாரிகள் கோரிக்கை வைத்திருந்ததாக தெரிகிறது. இந்த நிலையில் தான், தமிழக அரசு நோய்வாய்ப்பட்டு சுற்றித் திரியும் தெரு நாய்களை கருணைக் கொலை செய்ய  அனுமதி அளித்துள்ளது.

இதுகுறித்து வெளியிட்ட அரசாணையில், பதிவு செய்யப்பட்ட கால்நடை மருத்துவர்கள் மூலம் இந்த கருணை கொலை செய்யப்பட வேண்டும். கொலை செய்யப்படும் நாய்கள் குறித்த ஆவணங்கள் பராமரிக்கப்பட வேண்டும். கருணை கொலை செய்யப்படும் தெரு நாய்கள் முறையாக அடக்கம் செய்யப்பட வேண்டும். விரைவில் தமிழக அரசு சார்பில் சாலைகளில் சுற்றித் திரியும் விலங்குகளை கட்டுப்படுத்துவது தொடர்பான சுற்றித் திரியும் விலங்குகள் கொள்கை முதலமைச்சர் முன்னிலையில் வெளியிடப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.