Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

நாய் கடித்தால் உடனே என்ன செய்ய வேண்டும்? தமிழக சுகாதாரத் துறை சுற்றறிக்கை

Dog Bite Treatmen: தமிழகத்தில் நாய் கடி பாதிப்பு அதிகரித்து வருவதால், சுகாதாரத் துறை அவசர சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது. காயத்தை உடனடியாக சுத்தம் செய்து, 5 தடுப்பூசிகள் செலுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. ரேபிஸ் என்பது மிகவும் ஆபத்தானது; தண்ணீர் பயம், மனச்சுழற்சி போன்ற அறிகுறிகள் தென்பட்டால் உடனே மருத்துவரை அணுகவும் என தெரிவித்துள்ளது.

நாய் கடித்தால் உடனே என்ன செய்ய வேண்டும்? தமிழக சுகாதாரத் துறை சுற்றறிக்கை
நாய் கடி முதலுதவிImage Source: pinrest
Sivasankari Bose
Sivasankari Bose | Published: 04 Jul 2025 14:49 PM IST

தமிழ்நாடு ஜூலை 04: தமிழகத்தில் தெரு நாய்களால் ஏற்படும் பாதிப்பு கடந்த சில மாதங்களாக அதிகரித்து வருகிறது. ஒருபக்கம் கேரள மாநிலத்தில் தெரு நாய்கள் கடித்ததில் ஐந்து வயது சிறுவன் உயிரிழந்தது, மறுபக்கம் தமிழகத்திலும் இதற்கான அவசர நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. பொது சுகாதாரத் துறை அனைத்து மாவட்ட சுகாதார அலுவலர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பி, நாய்க்கடியில் பாதிக்கப்படும் நோயாளிகளுக்கு உடனடியாக சிகிச்சை அளிக்க தேவையான வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளது.

ஆறு மாதங்களில் 2.8 லட்சம் பேர் பாதிப்பு – 18 பேருக்கு ரேபிஸ் தொற்று

சென்னை உள்ளிட்ட நகரங்களில் தெரு நாய்கள் மக்கள் மீது தாக்குதல் நடத்தும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. கடந்த 6 மாதங்களில் தமிழகத்தில் மட்டும் 2,80,000 பேர் நாய் கடியால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 18 பேருக்கு ரேபிஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. ரேபிஸ் வைரஸ் சிகிச்சைக்கு பதிலளிக்காத அபாயகரமான தொற்றாகும்.

உத்திரப் பிரதேசத்தைச் சேர்ந்த கபடி வீரர் ப்ரிஜேஷ் சோலங்கி, ஒரு நாயைக் காப்பாற்றும் போது கடிக்கப்பட, அதை முக்கியமாக கருதாமல் விட்டதால் ரேபிஸ் பாதித்து உயிரிழந்துள்ளார். இது மக்களுக்கு எச்சரிக்கையாகும்.

நாய் கடித்தால் உடனடியாக என்ன செய்ய வேண்டும்?

நாய் கடித்தால் உடனடியாக மேற்கொள்ள வேண்டிய முக்கியமான நடவடிக்கைகள்:

காயம் சுத்தம்: 15 நிமிடங்களுக்குள் பாய்ந்தும் சோப்பும் கொண்டு காயம் ஏற்பட்ட இடத்தை சுத்தம் செய்ய வேண்டும்.

தடுப்பூசி சிகிச்சை:

நாய் கடித்த அன்றே தடுப்பூசி தொடங்க வேண்டும்.

0, 3, 7, 14, 28ஆம் நாட்களில் மொத்தம் 5 தடுப்பூசி செலுத்தப்பட வேண்டும்.

நாய் கடித்த பகுதி இரத்தம் வந்து தீவிரமாக இருந்தால், 6 மணி நேரத்திற்குள் இம்முனோகுளோபுலின் என்ற ஊசியும் செலுத்தப்பட வேண்டும்.

முன்னர் போல தொப்புளுக்கு சுற்றி தடுப்பூசி போட தேவையில்லை. தற்போது கையில் அல்லது தோளில் செலுத்தப்படுகின்றது.

ரேபிஸ் வைரஸ் மற்றும் அதன் அறிகுறிகள்

ரேபிஸ் என்பது நாய்கள் மட்டுமல்லாது பூனை, வவ்வால் போன்ற விலங்குகளின் கடியாலும் பரவக்கூடிய ஒரு அபாயகரமான வைரஸ் நோயாகும். இது முதன்மையாக நரம்பு மண்டலத்தையும் மூளையையும் பாதிக்கிறது.

அறிகுறிகள்:

தண்ணீரை கண்டால் பயம்

மனச்சுழற்சி, குழப்பம்

காற்று முகத்தில் வீசியதும் அச்சம்

வலிப்பு, சுயநினைவிழப்பு

ரேபிஸ் பாதிப்பு ஏற்பட்ட பின்பு இதற்கான சிகிச்சை இல்லை. பாதிக்கப்பட்டவர்கள் பெரும்பாலும் உயிரிழக்கின்றனர். எனவே, எந்தவொரு நாய் கடியும் சிறிதளவு என்றாலும் தாழ்வாக பார்க்கக்கூடாது.

தடுப்பூசிகள் பாதுகாப்பு மற்றும் பரிந்துரை

தடுப்பூசிகளை சீராக குளிர்ச்சி கொண்ட இடங்களில் வைத்துப் பாதுகாக்க வேண்டும். மாவட்ட சுகாதார அலுவலர்கள் இதனை உறுதிப்படுத்த வேண்டும். தடுப்பூசி சேமிப்பு முறைகளில் அலட்சியம் ரேபிஸ் தடுப்பு நடவடிக்கையை பலவீனப்படுத்தும்.