வாகன ஓட்டிகளே அலர்ட்.. தூத்துக்குடியில் போக்குவரத்து மாற்றம்.. முக்கிய ரூட் இதுதான்!
Thoothukudi Traffic Changes : தூத்துக்குடி மாவட்டத்தில் பனிமய மாதா கோவில் திருவிழா 2025 ஜூலை 25ஆம் தேதி முதல் 10 நாட்களுக்கு நடைபெற உள்ளது. இதனையொட்டி, முக்கிய பகுதிகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலும், 10 நாட்களும் சரக்கு வாகனங்கள் மற்றும் கனரக சரக்கு வாகனங்கள் அப்பகுதியில் செல்ல அனுமதியில்லை.

தூத்துக்குடி, ஜூலை 25 : தூத்துக்குடி மாவட்டத்தில் 2025 ஜூலை 25ஆம் தேதியான இன்று முதல் 2025 ஆகஸ்ட் 5ஆம் தேதி வரை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. தூத்துக்குடி பனிமய மாதா கோவில் திருவிழாவை முன்னிட்டு, 10 நாட்களுக்கு முக்கிய பகுதிகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பனிமய மாதா பேராலயம் மிகவும் புகழ்பெற்றது. இந்த ஆலயத்திற்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், மாநிலங்களில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். குறிப்பாக, ஆண்டு தோறும் நடைபெறும் பனிமய மாதா பேராலய தேரோட்ட நிகழ்வுக்காக லட்சக்கணக்கானோர் வருகை தருவார்கள். அந்த வகையில், 2025ஆம் ஆண்டுக்கான பனிமய மாதா பேராலய தேரோட்ட நிகழ்வு 2025 ஜூலை 25ஆம் தேதியான இன்று மாலை கொடி பவனி நடத்தப்பட்டு, 2025 ஜூலை 26ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
இதில் முக்கிய நிகழ்வான தங்க தேர் பவனி 2025 ஆகஸ்ட் 5ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த 10 நாட்களும் திருப்பலிகள், நற்கருணை பவனிகள் போன்ற நிகழ்ச்சிகள் நடைபெறும். இதற்கான முன்னேற்பாட்டு பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. எனவே, 10 நாட்களும் பக்தர்களின் வருகை அதிகமாக இருக்கும். இதனால், மாவட்ட போக்குவரத்து காவல்துறை முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதாவது, 2025 ஜூலை 25ஆம் தேதியான இன்று முதல் 2025 ஆகஸ்ட் 5ஆம் தேதி வரை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
Also Read : இனி ரயில் நிலையத்தில் ரீல்ஸ் எடுத்தால் நடவடிக்கை.. ரூ. 1000 அபராதம் என எச்சரிக்கை..
தூத்துக்குடியில் போக்குவரத்து மாற்றம்
இதுகுறித்து போக்குவரத்து காவல்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, தூத்துக்குடி அண்ணா பேருந்து நிலையத்திலிருந்து திரேஸ்புரம் செல்லும் நகர பேருந்துகள் WGC Road, Old Municipal Office Jn, 1ம் கேட், மட்டக்கடை, கால்டுவெல் பள்ளி ஜங்ஷன் வழியாக திரேஸ்புரம் செல்ல வேண்டும். திரேஸ்புரத்திலிருந்து தூத்துக்குடி அண்ணா பேருந்து நிலையத்திற்கு வரும் நகர பேருந்துகள் பக்கிள் சேனல் அருகில் உள்ள ரோடு வழியாக கருத்தப்பாலம், புதிய பேருந்து நிலையம், 4ம் கேட் வழியாக செல்ல வேண்டும்.
புதிய துறைமுகம் மற்றும் தெர்மல்நகரிலிருந்து வரும் நகர பேருந்துகள் தெற்கு பீச் ரோடு (ரோச் பார்க்) வழியாக வருவதற்கு அனுமதியில்லை. அவைகள் நகர்விலக்கு, திருச்செந்தூர் ரவுண்டானா, காமராஜ் கல்லூரி, அக்ஸார் ஜங்ஷன் வழியாக அண்ணா பேருந்து நிலையம் செல்ல வேண்டும். மேலும் ஜார்ஜ் ரோடு அல்பர்ட் & கோ ஜங்ஷன், PPMT ஜங்ஷன் வழியாக வருவதற்கு அனுமதியில்லை.
Also Read : தோழிகள் குளிப்பதை வீடியோ எடுத்து காதலனுக்கு அனுப்பிய மாணவி.. பகீர் சம்பவம்!
விழா நடைபெறும் குறிப்பிட்ட நாட்களில் சரக்கு வாகனங்கள் மற்றும் கனரக சரக்கு வாகனங்கள் விழா நடைபெறும் பகுதிகளுக்கு வர முற்றிலும் அனுமதி இல்லை. தெற்கு கடற்கரை சாலை வழியாக மாதா கோவில் வரும் இரண்டு சக்கர வாகனங்கள் மற்றும் நான்கு சக்கர வாகனங்களை மீன்பிடி துறைமுகம் வளாகம் மற்றும் ரோச் பார்க்கில் நிறுத்தவும். மீன்பிடி துறைமுகத்திற்கு வடக்கே வாகனங்கள் செல்ல அனுமதியில்லை.