AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

ஆகஸ்ட் 5ல் விடுமுறை.. தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட அறிவிப்பு

Thoothukudi Local Holiday : தூய பனிமய மாதா பேராலய பெருவிழாவை முன்னிட்டு, தூத்துக்குடி மாவட்டத்திற்கு 2025 ஆகஸ்ட் 5ஆம் தேதி பள்ளி, கல்லூரிகள், அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறையை ஈடுகட்டும் வகையில், 2025 ஆகஸ்ட் 9ஆம் தேதி வேலைநாளாக மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

ஆகஸ்ட் 5ல் விடுமுறை.. தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட அறிவிப்பு
தூத்துக்குடி உள்ளூர் விடுமுறை
Umabarkavi K
Umabarkavi K | Updated On: 24 Jul 2025 17:34 PM IST

தூத்துக்குடி, ஜூலை 24 :  தூத்துக்குடி மாவட்டத்திற்கு 2025 ஆகஸ்ட் 5ஆம் தேதி உள்ளூர் விடுமுறை (Thoothukudi Local Holiday) அளித்து மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. தூய பனிமய மாதா பேராலய பெருவிழாவை முன்னிட்டு, தூத்துக்குடி மாவட்டத்திற்கு 2025 ஆகஸ்ட் 5ஆம் தேதி பள்ளி, கல்லூரிகள், அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறையை ஈடுகட்டும் வகையில், 2025 ஆகஸ்ட் 9ஆம் தேதி வேலைநாளாக மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. ஒவ்வொரு மாவட்டத்திற்கும் குறிப்பிட்ட நாட்கள் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்படுவது வழக்கம்.  திருவிழா, முக்கிய விசேஷ தினங்களில் குறிப்பிட்ட மாவட்டங்களுக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்படுகிறது.  இந்த விடுமுறை நாட்களில்  சம்பந்தப்பட்ட மாவட்டத்திற்கும் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்படுகிறது.  ஆனால், அதே நாளில் மற்ற மாவட்டங்களில் வழக்கம்போல் பள்ளி, கல்லூரிகள் செயல்படும்.

அந்த வகையில், தற்போது தூத்துக்குடி மாவட்ட  ஆட்சியர் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.  அதாவது, தூத்துக்குடி மாவட்டத்திற்கு 2025 ஆகஸ்ட் 5ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. தூய பனிமய மாதா பேராலய பெருவிழாவை முன்னிட்டு, இந்த விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

Also Read : பள்ளிகளில் ’ப’ வடிவில் இருக்கை வசதி.. நிறுத்தி வைத்ததா பள்ளிக்கல்வித்துறை? உண்மை என்ன?

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட அறிவிப்பு

தூத்துக்குடி மாவட்டத்தில் மிகவும் பிரசித்திபெற்ற தூய பனிமய மாத ஆலயத்தில் ஆண்டுதோறும் 11 நாட்கள் விழா நடைபெறும். இந்த விழாவில் ஆயிரக்கணக்கோனார் கலந்து கொள்வார்கள். இந்த விழாவின் முக்கிய நிகழ்வான தங்கத்தேர் பவனி 2025 ஆகஸ்ட் 5ஆம் தேதி நடைபெறுகிறது. இந்த தங்கதேர் பவனியை காண பலரும் வருகை தருவார்கள்.

மிகவும் கோலாகலமாக தங்கத் தேர் பவனி ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது. இதனையொட்டி தான், 2025 ஆகஸ்ட் 5ஆம் தேதி தூத்துக்குடி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அன்றைய தினம் பள்ளி, கல்லூரிகள், அரசு அலுவலகங்கள் செயல்படாது. இந்த விடுமுறையை ஈடுசெய்யும் வகையில், 2025 ஆகஸ்ட் 9ஆம் தேதி வேலைநாளாக மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

Also Read : டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு முடிவு எப்போது வெளியாகும்..? வெளியான அறிவிப்பு

அன்றைய தினம் சனிக்கிழமை பள்ளி, கல்லூரிகள் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, 2025 ஜூலை 28ஆம் தேதி விருதுநகர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டு இருக்கிறது. ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள் கோயில் தேரோட்டத்தை முன்னிட்டு, 2025 ஜூலை 28ஆம் தேதி பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறையை ஈடுசெய்யும் விதமாக, 2025 ஆகஸ்ட் 9ஆம் தேதி சனிக்கிழமை வேலை நாளாக மாவட்ட ஆட்சியர் சுகபுத்ரா அறிவித்துள்ளார்.

 

Follow Us