ஜூலை 23ல் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.. அரியலூர் ஆட்சியர் முக்கிய அறிவிப்பு!
Ariyalur Local Holiday : அரியலூர் மாவட்டத்திற்கு 2025 ஜூலை 23ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மாமன்னன் ராஜேந்திர சோழனின் பிறந்தநாளையொட்டி, அன்றைய தினம் பள்ளி, கல்லூரிகள், அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் ரத்தினசாமி அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார்.

அரியலூர், ஜூலை 19 : அரியலூர் மாவட்டத்திற்கு 2025 ஜூலை 23ஆம் தேதி உள்ளூர் விடுமுறை (Ariyalur Local Holiday) அறிவிக்கப்பட்டுள்ளது. ஆடி திருவாதிரை விழாவை முன்னிட்டு, 2025 ஜூலை 23ஆம் தேதி அரியலூர் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகள், அரசு அலுவலகங்களுக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாவட்டங்களில் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்படுது வழக்கம். சம்பந்தப்பட்ட மாவட்டங்களில் கோயில் திருவிழாக்கள், விசேஷ தினங்களில் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்படுகிறது. ஆனால், குறிப்பிட்ட மாவட்டங்களுக்கு மட்டுமே விடுமுறை இருக்கும். மற்ற மாவட்டங்களில் அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்கள் வழக்கம் போல் செயல்படும். இந்த விடுமுறையை ஈடுசெய்ய குறிப்பிட்ட நாளில் ஒரு சனிக்கிழமைகள் வேலை நாட்களாக அறிவிக்கப்படுகிறது. இந்த நிலையில், அரியலூர் மாவட்டத்திற்கு 2025 ஜூலை 23ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
அரியலூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை
அரியலூர் மாவட்டத்தில் மாமன்னன் ராஜேந்திர சோழனால் பிரகதீஸ்வரர் கோயில் கட்டப்பட்டுள்ளது. இந்த கோயிலின் அழகை கண்டு ரசிக்க வெளிமாநிலங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர். ராஜேந்திர சோழனின் பிறந்தநாளை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதம் திருவாதிரை விழா இப்பகுதி மக்களால் கொண்டாடப்படுகிறது. திருவாதிரை விழா அரசு விழாவாக கொண்டாட்டப்படும் என தமிழக அரசு அறிவித்திருந்தது. அந்த வகையில், மாமன்னன் ராஜேந்திர சோழனின் பிறந்தநாள் 2025 ஜூலை 23ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் திருவாதிரை விழா வெகு விமர்சையாக கொண்டாடப்படும்.
Also Read : செங்கல்பட்டு, கன்னியாகுமரி மாவட்டங்களுக்கு விடுமுறை.. மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு.. என்ன காரணம்?
இதனையொட்டி, அம்மாவட்டத்திற்கு 2025 ஜூலை 23ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அன்றைய தினம் அரசு அலுவலகங்கள், பள்ளிகள், கல்லூரிகள் செயல்படாது என மாவட்ட ஆட்சியர் ரத்தினசாமி அறிவிப்பை வெளியட்டிருக்கிறார். இந்த விடுமுறை நாளை ஈடு செய்யும் வகையில், 2025 ஜூலை 26ஆம் தேதி சனிக்கிழமை வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த விடுமுறை செலவானி முறிச்சட்டம் 1881கீழ் அறிவிக்கப்படவில்லை என்பதால், 2025 ஜூலை 23ஆம் தேதி அனைத்து சார்நிலை கருவூலங்களும் மாவட்ட கருவூலமும் அரசு பாதுகாப்பாபுக்கான அவசர அலுவல்கள் செயல்படும் எனவும் மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
Also Read : மக்களே ரெடியா இருங்க.. அடுத்த 7 நாட்களுக்கு வெளுக்கப்போகும் மழை.. எந்தெந்த மாவட்டங்களில்?
ஏற்கனவே, 2025 ஜூலை 24ஆம் தேதி ஆடி அமாவாசையை முன்னிட்டு, கன்னியாகுமரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், செங்கல்பட்டு மாவட்டத்திற்கு 2025 ஜூலை 28ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேல்மருத்துவத்தூர் ஆதிபராசத்தி சித்தர் பீட ஆடிப்பூர விழாவை முன்னிட்டு, இந்த விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், பள்ளி, கல்லூரி மாணவர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.