மக்களே ரெடியா இருங்க.. அடுத்த 7 நாட்களுக்கு வெளுக்கப்போகும் மழை.. எந்தெந்த மாவட்டங்களில்?
Tamil Nadu Rain Alert: தமிழகத்தில் அனேக பகுதிகளில் நல்ல மழை பதிவு இருந்து வருகிறது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்தவரையில் வானம் ஓரளவுக்கு மேகமூட்டத்துடன் காணப்பட்டாலும் ஒரு சில பகுதிகளில் மிதமான முதல் கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வானிலை நிலவரம், ஜூலை 19, 2025: தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்க சுழற்சி நிலவுகிறது. அதேபோல் மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் நல்ல மழை பதிவாகி வருகிறது. அந்த வகையில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கொரட்டூரில் 10 செ.மீ மழை பதிவாகியுள்ளது. அதனைத் தொடர்ந்து துரைப்பாக்கம், கண்ணகி நகர், ஈஞ்சம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் 8 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. அதே போல் திருவள்ளூர், அரக்கோணம், அயப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் 7 சென்டிமீட்டர் மழையும் , தரமணி, மடிப்பாக்கம், நெற்குன்றம் உள்ளிட்ட பகுதிகளில் 6 சென்டிமீட்டர் அளவு மழை பதிவாகியுள்ளது.
அடுத்த 7 நாட்களுக்கு தொடரும் கனமழை:
இதனைத் தொடர்ந்து 2025 ஜூலை 19ஆம் தேதியான இன்று நீலகிரி மற்றும் கோவை மாவட்டத்தில் ஒரு சில பகுதிகளில் மிக கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதேபோல தேனி, தென்காசி, கன்னியாகுமரி, வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், திருவண்ணாமலை, சென்னை, செங்கல்பட்டு, விழுப்புரம், காஞ்சிபுரம், மாவட்டங்களில் ஒரு சில பகுதிகளில் கனமழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: தபால் அலுவலகம் உங்கள் சேமிப்பு கணக்கை முடக்கலாம்! காரணம் என்ன தெரியுமா?
அதனை தொடர்ந்து 2025 ஜூலை 20 தேதியான நாளை நீலகிரி மற்றும் கோவை மாவட்டத்திற்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. அதேபோல் தேனி. தென்காசி. கன்னியாகுமரி மற்றும் திருநெல்வேலி மாவட்டத்தில் மலைப்பகுதிகளில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 2025 ஜூலை 21 ஆம் தேதியான நாளை மறுநாள் நீலகிரி. தென்காசி தேனி. திருநெல்வேலி மற்றும் கோவை ஆகிய மாவட்டத்தில் கன மழை பெய்யக்கூடும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் கனமழைக்கு வாய்ப்பு:
கடந்த சில நாட்களாக வறண்ட வானிலை நிலவி வந்த நிலையில், தமிழகத்தில் அனேக பகுதிகளில் நல்ல மழை பதிவு இருந்து வருகிறது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்தவரையில் வானம் ஓரளவுக்கு மேகமூட்டத்துடன் காணப்பட்டாலும் ஒரு சில பகுதிகளில் மிதமான முதல் கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும் படிக்க: அதிமுக பாஜக கூட்டணியில் குழப்பமா? அண்ணாமலை சொன்ன முக்கிய விஷயம்!
சென்னையில் கடந்த சில தினங்களாக மாலை முதல் இரவு நேரங்களில் நகரின் அனேக பகுதிகளில் நல்ல மழை பதிவு இருந்து வருகிறது. அந்த வகையில் ஜூலை 18 2025 ஆம் தேதி ஆன நேற்று இரவு முழுவதும் விட்டு விட்டு நகரில் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வந்தது. இதன் காரணமாக வெப்பநிலையின் தாக்கம் கணிசமாக குறைந்துள்ளது. அதிகபட்ச வெப்பநிலை என்பது 34 டிகிரி செல்சியஸ் ஒட்டி இருக்கக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் பரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது