Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

அதிமுக பாஜக கூட்டணியில் குழப்பமா? அண்ணாமலை சொன்ன முக்கிய விஷயம்!

AIADMK BJP Alliance : அதிமுக பாஜக கூட்டணியில் குழப்பம் நீடித்து வருவதாக தகவல்கள் வெளியான வண்ணம் உள்ளன. மேலும், குழப்பம் நீடித்து வந்தால், கூட்டணி முறிவு கூட ஏற்படலாம் என அரசியவல் வல்லுநர்கள் கூறி வருகின்றனர். இந்த நிலையில், அதிமுக பாஜக கூட்டணியில் எந்தவித குழப்பமும் இல்லை என அண்ணாமலை கூறியுள்ளார்.

அதிமுக பாஜக கூட்டணியில் குழப்பமா? அண்ணாமலை சொன்ன முக்கிய விஷயம்!
அண்ணாமலை
Umabarkavi K
Umabarkavi K | Updated On: 19 Jul 2025 14:18 PM

சென்னை, ஜூலை 19 : அதிமுக பாஜக கூட்டணியில் எந்தவித குழப்பமும் இல்லை எனவும், அமித் ஷா மற்றும் எடப்பாடி பழனிசாமி எடுக்கும் முடிவே இறுதியானது என்றும் முன்னாள் பாஜக மாநில தலைவர் தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கு இன்னும் 8 மாதங்களே உள்ளது. இதனால், தமிழகத்தில் அரசியல் களம் சூடுபிடித்துள்ளது.  மேலும், கூட்டணி பேச்சுவார்த்தைகளும் தீவிரமாக நடந்து வருகறிது.  தேர்தலுக்கு ஓராண்டுக்கும் முன்பே, அதிமுக பாஜக கூட்டணி அமைத்தது. தமிழக வந்த அமித் ஷா, அதிமுக பாஜக கூட்டணி  குறித்து உறுதி செய்தினார். அன்றைய நாள் முதலே கூட்டணிக்குள் சலசலப்புகள் இருந்து வருகிறது. அதாவது,   2026 சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெறும் பட்சத்தில், தமிழகத்தில் கூட்டணி ஆட்சி தான் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறி  வருகிறார். ஆனால், அதிமுக தலைமையோ,  கூட்டணி ஆட்சி இல்லை எனவும் தனிப்பெரும்பான்மையுடன் அதிமுக ஆட்சி அமைக்கும் என கூறினார். இதனால், கூட்டணிக்குள் சலசலப்புகள் நீடித்து வருகிறது.

அதிமுக பாஜக கூட்டணியில் குழப்பமா?

இப்படியே தொடர்ந்தால் கூட்டணி முறிவு கூட ஏற்படலாம் என அரசியல் வல்லுநர்கள் கருதுகின்றனர்.  இந்த நிலையில், நாமக்கல் மாவட்டத்தில் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை இதுகுறித்து பேசி இருக்கிறார். அப்போது பேசிய அண்ணாமலை, “அதிமுக பாஜக கூட்டணியில் எந்தவித குழப்பமும் இல்லை. கூட்டணி தொடர்பாக அமித் ஷா, எடப்பாடி பழனிசாமி எடுக்கும் முடிவே இறுதியானது. 2026ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக பாஜக கூட்டணி ஆட்சிக்கு வரும்.

Also Read  : அதிமுகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தையா? திட்டவட்டமாக மறுத்த தவெக.. பின்னணி என்ன?

திமுகவை ஆட்சியில் இருந்து அகற்ற வேண்டும் என்பதற்காக ஒரே புள்ளியில் அதிமுக பாஜக இணைந்துள்ளது. இரண்டு நாட்களுக்கு முன்பு நான் பேசியது எங்கள் தலைவர் பேசியது தான். அதில் எந்த குழப்பமும் இல்லை. 2026ஆம் யார் தலைமையிலான கூட்டணி, யார் தலைமை, முதல்வர் வேட்பாளர் யார் என்பது எல்லாம் அறிவித்துள்ளோம். அமித்ஷா, எடப்பாடி பழனிசாமி இருவரும் சேர்ந்து அறிவித்தார்கள். எனவே, கூட்டணிக்குள் எந்தவித குழப்பமும் இல்லை” என தெரிவித்தார்.

Also Read : விஜயுடன் கூட்டணி பேச்சுவார்த்தையா? ட்விஸ்ட் கொடுத்த எடப்பாடி பழனிசாமி.. என்ன விஷயம்?

முன்னதாக, சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை, “கூட்டணி பேச்சுவார்த்தைகளில் எனக்கும் எந்த சம்மதமும் இல்லை. அப்படிப்பட்ட சூழலில் எனது தலைவர் அமித் ஷாவின் வார்த்தைகளின்படி மட்டுமே நான் செல்ல முடியும். கூட்டணி ஆட்சி என்று அமித் ஷா மூன்று முறை கூறிவிட்டார். என் கட்சி தலைவர் அமித் ஷா கூட்டணி ஆட்சி என்று பேசிய பின்பும், நான் அதைத் தூக்கிப் பிடிக்கவில்லை என்றால் எதற்கு தொண்டனாக இருக்க வேண்டும்” என தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.