‘கூட்டணி ஆட்சி தான்… 3 முறை அமித் ஷா சொல்லிவிட்டார்’ அண்ணாமலை பேச்சு!
AIADMK BJP Alliance : அதிமுக பாஜக கூட்டணிக்குள் சலசலப்புகள் நீடித்து வருகிறது. கூட்டணி ஆட்சி தொடர்பாக பாஜக மற்றும் அதிமுக தலைவர்கள் மாறி மாறி கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்த சூழலில், தமிழகத்தில் கூட்டணி ஆட்சி தான் எனவும் மூன்று முறை அமித் ஷாவே சொல்லிவிட்டார் எனவும் அண்ணாமலை கூறியது மேலும் புயலை கிளப்பி இருக்கிறது.

சென்னை, ஜூலை 17 : தமிழகத்தில் கூட்டணி ஆட்சி என்று மூன்று முறை உள்துறை அமைச்சர் அமித் ஷா தெளிவுப்படுத்திவிட்டார் எனவும் இதில் எந்த மாற்றுக் கருத்து இருந்தாலும், அமித் ஷாவிடம் அதிமுக தலைமை பேசலாம் என முன்னாள் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை (Annamalai) பேட்டி அளித்துள்ளார். தமிழகத்தில் கூட்டணி ஆட்சி தான் என அமித் ஷா கூறி வரும் நிலையில், அதற்கு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி (Edappadi Palanisamy) மறுத்து வருகிறார். இந்த நிலையில், அண்ணாமலை பேசியது மேலும் கூட்டணிக்குள் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது. 2026 தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கு இன்னும் 8 மாதங்களே உள்ளது. இதனால், அரசியல் கட்சிகள் தீவிரமாக தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக, கூட்டணி பேச்சுகள் அடிப்பட்டு வருகிறது. தேர்தலுக்கு ஓராண்டுக்கு முன்பே அதிமுக பாஜக கூட்டணி (AIADMK BJP Alliance) அமைத்தது. கூட்டணி அமைத்தாலும், அதில் சில குழப்பங்கள் நீடித்து வருகிறது.
கூட்டணி குறித்து உள்துறை அமைச்சர் அமித் ஷா அறிவித்தபோதே, 2026 தமிழக சட்டப்பேரவை தேர்தலில் கூட்டணி ஆட்சி தான் திட்டவட்டமாக கூறினார். கூட்டணி ஆட்சி தான் மூன்று முறை அமித் ஷா கூறியிருக்கிறார். ஆனால், அதிமுக தலைமையே மறுத்து வருகிறது. தமிழகத்தில் தனிப் பெரும்பான்மையுடன் அதிமுக ஆட்சி அமைக்கும் என எடப்பாடி பழனிசாமி கூறி வருகிறார். இப்படியாக, கூட்டணிக்குள் சலசலப்புகளுக்கு பஞ்சம் இல்லாமல் இருந்து வருகிறது. இந்த சூழலில், 2025 ஜூலை 17ஆம் தேதியான இன்று அண்ணாமலை கூட்டணி குறித்து பேசிய புதிய புயலை கிளப்பி உள்ளது.
Also Read : பாஜக கூட்டணியில் விசிக? திருமாவளவன் பரபரப்பு விளக்கம்!




அண்ணாமலை பேச்சு
அதாவது, சென்னையில் சைதாப்பேட்டையில் முன்னாள் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர், “கூட்டணி பேச்சுவார்த்தைகளில் எனக்கு எந்த பங்கும் இல்லை. அப்படிப்பட்ட சூழலில் எனது தலைவர் அமித் ஷாவின் வார்த்தைகளின்படி மட்டுமே நான் செல்ல முடியும். கூட்டணி ஆட்சி என்று அமித் ஷா மூன்று முறை கூறிவிட்டார்.
Also Read : ’கூட்டணியில் நான் எடுப்பது தான் முடிவு.. அமித் ஷா அப்படி கூறல’ எடப்பாடி பழனிசாமி பேட்டி!
என் கட்சி தலைவர் அமித் ஷா கூட்டணி ஆட்சி என்று பேசிய பின்பும், நான் அதைத் தூக்கிப் பிடிக்கவில்லை என்றால் எதற்கு தொண்டனாக இருக்க வேண்டும். நான் கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்த முயற்சிக்கவில்லை என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். நான் எனது தலைவரின் வார்த்தைகளுக்கு மட்டுமே ஆதரவாக இருக்கிறேன். இதில் எந்த மாற்றுக் கருத்து இருந்தாலும், அமித் ஷாவிடம் அதிமுக தலைமை பேசலாம்” என கூறினார்.